World No Tobacco Day 2020 : நீங்கள் பிடிக்கும் ஒரு சிகரெட் எத்தனை உயிர்களை காவு வாங்குகிறது தெரியுமா..?

அருகில் இருப்போர் புகையை சுவாசிக்க நேர்ந்தால் நுரையீரல் வளர்ச்சி பாதிப்பதோடு அதன் செயல்பாடுகளும் குறைந்துவிடும்.

World No Tobacco Day 2020 : நீங்கள் பிடிக்கும் ஒரு சிகரெட் எத்தனை உயிர்களை காவு வாங்குகிறது தெரியுமா..?
அதில் புகைப்பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கே கொரோனாவைத் தூண்டும் ACE2 என்ற புரதம் நுரையீரலில் அதிகரிப்பதாகக் கூறுகிறது.
  • Share this:
உலக சுகாதார அமைப்பு சிகரெட் புகைப்பிடிப்பதால் பிடிப்பவர்களால் ஒரு வருடத்திற்கு 60,000 குழந்தைகள் தங்களின் ஐந்து வயதை எட்டும் முன்னரே இறந்து விடுவதாகத் தெரிவிக்கிறது.


இதில் என்ன ஆச்சரியமென்றால் இப்படி புகைப் பிடிப்பதால் தனக்கு மட்டுமன்றி தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கடுமையான பாதிப்பை உண்டாக்கும் என்பது புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கும் தெரியும்.. இருப்பினும் தன் சுய இன்பத்திற்காக இந்த செயலைச் செய்வது இரக்கத்தின் இறப்பு நிலையை உணர்த்துகிறது.


ஒரு சிகரெட் புகையிலை மொத்தம் 7,000 இரசாயணங்கள் உள்ளடக்கியிருக்கிறது. அதில் 69 இரசாயணங்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. ஒருவர் வெளியிடும் சிகரெட் புகையானது கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காற்றில் கலந்து உலாவரும் தன்மைக் கொண்டது.



அதை சுவாசிக்கும் மக்கள் நுரையீரல் புற்றுநோய், தொடர்ந்து மூச்சு விடுவதில் சிக்கல், நுரையீரல் செயலிழத்தல் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது சுகாதார அமைச்சகம்.


” இளைஞர் ஒருவர் சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னையால் பாதிக்கப்படுகிறார் என்றால் அது அவரின் குழந்தைப் பருவத்தில் சுவாசித்த சிகரெட் புகையால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பே காரணம்” என்கிறது உலக சுகாதார அமைச்சகம்.


வேறு வழியில் சொல்வதானால் “நீங்கள் புகைப் பிடிப்பதில்லை என்று கர்வமாக இருக்காதீர்கள். அவ்வாறு இருந்தால் நீங்கள் அதிலிருந்து தப்பித்துவிட்டதாக அர்த்தமில்லை. உங்களுக்கு அருகில் இருப்பவர் புகைப்பிடிப்பதாலும் உங்களுக்கு  கடுமையான நோய் வரும்” என்று கூறுகிறது சுகதார அமைச்சகம்.
அதேபோல் குழந்தையை ஈன்ற அல்லது கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது மற்றொருவரின் புகைப் பிடிக்கும் பழக்கத்தால் தொடர்ந்து அந்த புகையை சுவாசிக்க நேர்ந்தாலோ நுரையீரல் வளர்ச்சி பாதிப்பதோடு அதன் செயல்பாடுகளும் குறைந்துவிடும் என்று உலக சுகாதார அமைச்சகம் தாய்மார்களை எச்சரிக்கிறது.


புகையிலை, tobacco
தன்னுடைய அப்பா , உறவினர், அருகில் இருப்பவர்கள் யாருக்கேனும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் அந்தப் புகையை சுவாசிக்கும் குழந்தைகள் அல்லது சிறுவர்களுக்கு ஆஸ்துமா, நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் அடிக்கடி குறைந்த சுவாச நோய்கள் போன்றவை ஏற்படும் எனத் தெரிவிக்கிறது.


இளைஞர்களாக இருப்பின் அவர்களுக்கு கரோனரி இதய நோய், பக்கவாதம், நுரையீரல் புற்று நோய் போன்ற நோய்கள் வரும்.
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading