• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா காலத்தில் படுக்கையிலிருந்தே வேலை செய்கிறீர்களா? இந்த பக்க விளைவுகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்..

கொரோனா காலத்தில் படுக்கையிலிருந்தே வேலை செய்கிறீர்களா? இந்த பக்க விளைவுகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

படுக்கையறையின் மங்கலான வெளிச்சம், உங்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது

  • Share this:
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் வொர்க் ஃப்ரம் ஹோம், அதாவது வீட்டிலிருந்த படியே வேலை செய்வது என்பது அமல்படுத்தப்பட்டது. அதனால், பலருக்கும் பல்வேறு நன்மைகள் ஏற்பட்டாலும், சிலருக்கு கடினமாக இருந்தது. பல விதங்களில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்தல் என்பது மக்களை பாதிக்கத் தொடங்கியது.

வாழ்க்கை முறை மற்றும் வேலை செய்யும் பாணி என்று நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கை மாறிவிட்டது. குறிப்பாக, அலுவலகத்தில் நாற்காலி, மேசை என்று தனக்கென்று ஒரு பிரத்யேக வொர்க்ஸ்டேஷன் அமைப்பில் வேலை செய்த பலரும் வீட்டில் படுக்கையிலேயே வேலை செய்வது மிகவும் வசதியாக மாறிவிட்டது. குறைந்தபட்ச பாதிப்பாக, சுறுசுறுப்பாக இருந்தவர்களையே சோம்பேறியாக மாற்றியுள்ளது. இது குறைந்தபட்ச லைஃப்ஸ்டைல் பாதிப்பு தான்.

சரியான மேசை நாற்காலி இன்றி, அல்லது இருந்தும் பயன்படுத்தாமல், படுக்கையிலேயே இருந்தபடி வேலை செய்வது உங்கள் கழுத்து, தோள்பட்டை, முதுகு மற்றும் தண்டுவடத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உடல் ரீதியான பாதிப்பு மட்டுமின்றி, மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனையின் மனநல மருத்துவர் டாக்டர் சோனல் ஆனந்திடம், படுக்கையில் இருந்து வேலை செய்வது நம் மன ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவது மற்றும் எப்படி தன்னம்பிக்கை குறைக்கிறது என்பது பற்றி பேசினோம்.

மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகள் :

அதிக அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டம்: படுக்கையறையின் மங்கலான வெளிச்சம், உங்களின் கவலை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது. இது உளவியல் ரீதியாக மற்றும் உணர்ச்சிபூர்வமாக உங்களை பாதிக்கிறது என்கிறார் டாக்டர் ஆனந்த்.

தூக்கம் மற்றும் உற்பத்தித்திறன் பாதிப்பு: படுக்கையில் இருந்து வேலை செய்வது மிகவும் சுலபமாகத் தோன்றலாம். ஆனால், நீங்கள் அறியாமலேயே உங்கள் வேலை திறன் மற்றும் உங்கள் தூக்கம் என்று இரண்டையுமே இது பாதிக்கும். உங்கள் தூக்கத்தின் தரம் (ஆழமான தூக்கம், நீண்ட தூக்கம்) குறையும். தூக்கம் மற்றும் வேலை இரண்டும் ஒரே இடத்தில் இருப்பதால், உங்கள் உற்பத்தித்திறன் பெருமளவு பாதிக்கப்படும்.

தூக்கம் குறைந்தாலே, செயல்திறன் குறைந்துவிடும். இறுதியில், இவை அனைத்தும் ஒன்றிணைந்து உங்கள் மன அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.

குறைந்த ஆற்றல் மற்றும் மனநிலை மாற்றங்கள்: மற்ற அறைகளுடன் ஒப்பிடும் போது படுக்கையறைகள் சீரற்ற அல்லது மிகக்குறைவான வெளிச்சத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலும், பல ஜன்னல்கள் மூடி வைக்கப்படுகின்றன. எனவே, சூரிய ஒளியின் பற்றாக்குறை இயல்பாகவே காணப்படும். சூரிய ஒளி ஒரு இயற்கையான ஊக்கியாகவும், உங்களை ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது. சூரிய ஒளி இல்லாமல், மங்கலான வெளிச்சத்தில் வேலை செய்வது உங்களை சோர்வடையச் செய்யும். இது மனதையும் எதிர்மறையாக பாதிக்கும் என்று டாக்டர் ஆனந்த் கூறுகிறார்.

also read : ’வேலை செய்து கொண்டே ஊர் சுற்றுலாம்’ மசினகுடி to முசோரி - உங்களுக்கான சூப்பர் ப்ளான்!

பிற பிரச்சினைகள்: எந்த இடத்துக்கும் வேறுபாடு இல்லாமல் வேலை, தூக்கம், ஓய்வு, பொழுபோக்கு என்று அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் சோர்வை உண்டாக்கும். வேறுபாட்டை காண முடியாமல் மனதில் வெறுமை தோன்றலாம். கூடுதலாக, பார்வைக் கோளாறு, அமைதியின்மை மற்றும் பாலியல் உறவில் ஆர்வத்தை இழப்பது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

உடல் ரீதியான என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது பற்றி டாக்டர் ஆனந்த் கூறுவது.,

* ஒபிசிட்டி எனப்படும் அதிக எடை மற்றும் உடல் பருமன்
* தூக்கமின்மை (இன்சோம்னியா)
* செரிமானக் கோளாறு, வயிற்றுப்புண், அல்சர் போன்றவை
* உடல் சோர்வு

படுக்கையில் இருந்து வேலை செய்வதை தவிர்ப்பது எப்படி என்று விளக்கிய டாக்டர் ஆனந்த், முறையான பணிச்சூழலை உண்டாக்குங்கள், அதாவது நாற்காலி, மேசை, வேலை செய்வதற்கென்று தனி இடம் உள்ளிட்டவை அமைத்து கொள்ளுங்கள் என்கிறார்.

அலுவலகத்துக்கு செல்லும் போது நன்றாக ஆடையணிந்து செல்வது போல, வீட்டில் வேலை செய்ய தொடங்கும் போது, குளித்துவிட்டு நல்ல ஆடைகளை அணிந்து துவங்குங்கள். நாள் முழுவதும் ஒரே இடத்திலேயே இருக்காமல் அவ்வபோது உடலுக்கு இயக்கம் கொடுக்கும் வகையில் வீட்டிலேயே சில நிமிடங்கள் நடக்கலாம் என்றும், ஒரு முறையான வாழ்க்கைமுறை செயல்பாடுகளை மேற்கொள்வது மிகவும் இன்றியமையாதது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: