• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இந்த பழக்கங்கள் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்குமாம் ..

இந்த பழக்கங்கள் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்குமாம் ..

காட்சி படம்

காட்சி படம்

மூளை தாக்குதல் அல்லது பக்கவாதம் எந்த வயதிலும் யாருக்கும் ஏற்படலாம்.

  • Share this:
மனித மூளை மிகவும் முக்கியமான அதேசமயம் ஒரு சிக்கலான உறுப்பு. இந்த உறுப்பு தொடர்ச்சியான ரத்த ஓட்டத்தை சார்ந்தே இயங்கி வருகிறது. எனவே ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இடையூறு மூளைக்கு மிகவும் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் குளுக்கோஸை குறைத்து ஓரிரு நிமிடங்களில் மூளை மரணத்திற்கு வழிவகுக்கும். இந்நிலையில் பிரெயின் ஸ்ட்ரோக் என குறிப்பிடப்படும் மூளை பக்கவாதம் கடுமையான மருத்துவ நிலை ஆகும். மூளையின் எந்த ஒருபகுதிக்கும் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென தடைபடும் போது அல்லது தாமதமாகும் போது மூளையின் குறிப்பிட்ட அந்த பகுதியில் இருக்கும் செல்கள் இறந்து விடும்.

இதனில் மூளை திசுவானது தனக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாமல் போகிறது. இதுவே மூளை பக்கவாதம் ஏற்பட வழிவகுக்கிறது. இது ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி நிலை.தனிநபர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு நோயான மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கு, நமது அன்றாட வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

மூளை தாக்குதல் அல்லது பக்கவாதம் எந்த வயதிலும் யாருக்கும் ஏற்படலாம். ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் முதல் அதிகப்படியான புகைப்பழக்கம் வரை, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும் பல வாழ்க்கை முறை பழக்கங்கள் இருக்கின்றன, அதே போல கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்வதும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. மூளை பக்கவாதம் ஏற்பட காரணமாக இருக்க கூடிய வாழ்க்கை முறை பழக்கங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

உடல் செயல்பாடுகளின்றி இருப்பது : 

தொற்று காரணமாக பலரும் வீட்டிலிருந்தே உட்கார்ந்த இடத்தில் பல மணி நேரங்கள் வேலை பார்த்து வரும் இந்த சூழலில். உடல்செயல்பாடுகள் இல்லாமல் போனால் அது பக்கவாதம் ஏற்பட காரணமாக இருக்க கூடும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்வது முக்கியம். அங்கே இங்கே அசையாமல் ஒரே இடத்தில உட்கார்ந்திருப்பது உடலை பருமனாக்குகிறது. உடல்பருமன் பல நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதோடு பக்கவாதம் உள்ளிட்ட சீரியஸ் கண்டிஷன்களையும் ஏற்படுத்த கூடும். எனவே தினசரி உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் உயிருக்கு ஆபத்தான எல்லா நோய்களில் இருந்தும் நம்மை காக்கும்.

also read : கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஏற்படும் ’கோவிட் டோ’ என்றால் என்ன?சிகரெட் பழக்கம்:

 சிகரெட் புகைப்பது இதய ஆரோக்கியம் & சுவாச செயல்பாடுகளை பாதிப்பதோடு, உயிருக்கு ஆபத்தான புற்றுநோயையும் ஏற்படுத்த கூடும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியும். அதிகப்படியான புகைப்பழக்கம் பக்கவாதம் ஏற்படவும் காரணமாக அமைகிறது. தொடர்ச்சியான புகை பழக்கம் மூளைக்கு ரத்தம் வழங்கும் தமனியில் அடைப்பு ஏற்படுத்தி ischemic stroke ஏற்பட வழிவகுப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். ischemic stroke-ற்கு சிகிச்சையளிக்க மூளைக்கு ரத்த ஓட்டத்தை விரைவாக மீட்டெடுப்பது அவசியம். இருப்பினும் ரத்தகசிவு பக்கவாதம் ஏற்பட்டால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும் வாய்ப்புகள் உண்டு.

அதிகம் குடிப்பது :

சிகரெட் பழக்கத்தை போலவே உடலுக்கு அதிகம் தீங்கு செய்ய கூடியது மது பழக்கம். அதிகப்படியான குடிப்பழக்கம் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிக குடி ரத்த அழுத்தத்தை அதிகரித்து உடலுக்கு தீமை செய்கிறது என்றும் கூறுகின்றனர்.

மருத்துவ நிலைமைகள் :

நீரிழிவு, உயர் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (ஏஎஃப்) போன்ற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்ப வரலாறு, வயது, பாலினம் ஆகியவை கட்டுப்படுத்த முடியாத ஆபத்து காரணிகளாக இருக்கின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: