ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோடையில் வெப்பம் மட்டுமல்ல... இந்த விஷயங்களையும் நீங்கள் சமாளிக்க வேண்டும்..!

கோடையில் வெப்பம் மட்டுமல்ல... இந்த விஷயங்களையும் நீங்கள் சமாளிக்க வேண்டும்..!

கோடை வெப்பம்

கோடை வெப்பம்

சில விஷயங்களைப் பின்பற்றினாலே இந்த விஷயங்களை எதிர்த்துப் போராடலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கோடைக்காலத்தில்  வெயிலை மட்டுமல்ல...  பல உடல் ரீதியான பிரச்னைகளையும் சமாளிக்க வேண்டி வரும். அவை என்னென்ன தெரியுமா..? அதற்கு தீர்வுகள் என்ன தெரியுமா..? வாங்க பார்க்கலாம். 

  வியர்வை நாற்றம் : கோடையில் தவிர்க்கமுடியாத பிரச்னை வியர்வை நாற்றம். இதை தவிர்க்க பருத்தி ஆடைகளை அணியுங்கள். தினமும் குளித்து சுத்தமாக இருங்கள்.

  ஷேவிங் தரும் எரிச்சல் :  சேவிங் செய்த பின் அக்குள் மற்றும் தொடை இடையில் ஏற்படும் தாளமுடியாத எரிச்சல் மற்றொரு பிரச்னை. சேவிங் செய்த பின் தோல் சிவந்து விடுவது, அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்படும். இதை தவிர்க்க சேவிங் செய்த பின் அப்படியே விடாமல் மாய்ஸ்சரைஸர் அல்லது லோஷன் அப்ளை செய்யுங்கள். இதனால் அந்த இடம் ஈரப்பதமாக இருக்கும். எரிச்சல் குறையும். எதுவும் இல்லை எனில் தேங்காய் எண்ணெய் கூட தடவலாம்.

  சம்மர் டிப்ஸ் : முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்..?

  தொடை இடையில் எரிச்சல் :  கோடைக்காலத்தில் இறுக்கமான ஆடைகளை அணியும் போதும் நடக்கும் போதும் கால்கள் இரண்டும் உரசுவதால் வியர்வையினால் தொடை இடையில் அரிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனை தவிர்க்க வைட்டமின் `சி’ மற்றும்  ‘இ’ கலந்துள்ள அல்லது வெள்ளரி சாரு கலந்த சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்துங்கள்.

  கோடை நோய்கள் : கோடைக்காலத்தில் அம்மை நோய், டைஃபாய்டு, வேர்க்குரு, தோல் வீக்கம், சூடு கட்டி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், உடல் சூடு, வயிறு கோளாறு இப்படி பல உபாதைகள், நோய்களையும் சந்திக்க நேரிடும். இவற்றை தவிர்க்க குளுர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவு, பழங்கள் சாப்பிட வேண்டும். தண்ணீர் நிறைய குடித்து உடல் வறட்சி அடையாமல் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும்.

  தோலில் ஏற்படும் வறட்சி : கோடைக்காலத்தில் வீசும் சூடான காற்று தோலை வறட்சியாக்கும். இதனை தவிர்க்க தோலின் தன்மைக்கு ஏற்ப கிரீம்களை பயன்படுத்துங்கள். வெளியில் செல்லும்போது கையுறைகள் மற்றும் சன்கிளாஸ் போன்றவற்றை அணிய மறக்காதீர்கள். காற்றோட்டமாக இருக்க இறுக்கம் அல்லாத லூஸான ஆடைகளை அணியுங்கள்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: