கோடைகாலத்தில் ஜில்லென குடிக்கலாம் என பலரது வீட்டில் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி ஃபிரிட்ஜில் தேக்கி வைத்திருப்பார்கள். அது அந்த சமயத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
செரிமானமின்மை : உடல் வெப்பநிலையை சீராக்க வேலை செய்து கொண்டிருக்கும் சமயத்தில் ஐஸ் தண்ணீர் குடித்து அதன் வெப்பநிலையைக் குறைத்தால் மீண்டும் சமநிலைப்படுத்த தன் ஒட்டுமொத்த ஆற்றலையும் வெளிப்படுத்தும். இதனால் மற்ற செயல்கள் குறிப்பாக செரிமான வேலைகள் தடைபடும்.
மலச்சிக்கல் : செரிமானம் சீராக இல்லை என்றாலே மலச்சிக்கல் தானாக உண்டாகும்.
தொண்டை கரகரப்பு : குளுர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும். மூக்கடைப்பு ஏற்படும்.
சிறுநீர் கழிக்க சோம்பேறித்தனம் வேண்டாம் : அடக்கி வைத்தால் இதுதான் நடக்கும்..!
உடல் பருமன் : உணவு உண்ட பின் குளுர்ச்சியான நீரைக்குடிப்பதால் உணவில் உள்ள கொழுப்புகளை உடல் பிரிப்பதற்கு முன்பாகவே அவை குளுர்ச்சியால் திடமாக மாறிவிடும். பின் செரிமாணமின்றி உடலிலேயே தங்கி கெட்ட கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும்.
இதய பாதிப்பு : ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை என்னவெனில் மிகவும் குளுர்ச்சியான நீரைக் குடிப்பதால் அவை இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதயத் துடிப்பை குறைக்கும். இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிர்ச்சி : உடற்பயிற்சி அல்லது கடுமையான வேலைக்குப் பின் குளுர்ச்சியான நீரைப் பருகினால் உடல் சூட்டில் இருக்கும்போது உடனடியாக குளிர்ந்த நீரை உட்செலுத்துவது உடலின் திடீரென மின்சாரம் ( shock to your body ) பாய்ந்தது போன்ற உணர்வை உண்டாக்கும்.
நீரிழப்பு : ஐஸ் வாட்டர் குடித்து கொஞ்ச நேரத்தில் மீண்டும் உங்களுக்குத் தண்ணீர் தாகம் ஏற்படும். இதற்குக் காரணம் உடல் சூட்டை தணிக்க நீரை அதிகமாக உறிஞ்சி நீர்ப்பற்றாக்குறையை உண்டாக்கும். இதற்கு மீண்டும் ஐஸ் வாட்டர் குடிக்காமல் அறையின் வெப்பநிலையில் உள்ள நீரைக் குடியுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.