சளி, இருமலைக் கட்டுப்படுத்தும் அன்னாசிப் பழம்...!

"அன்னாசி சாறை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தொண்டைக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும்"

சளி, இருமலைக் கட்டுப்படுத்தும் அன்னாசிப் பழம்...!
அன்னாசி
  • Share this:
சுவையாலும், வாசனையாலும் சுண்டி இழுக்கும் அன்னாசி பழம் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. 2010 ஆண்டு வெளியான ஆய்வில் அன்னாசி ஜூஸ் குடித்தால் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி என சளி , இருமல் வரும் அறிகுறி இருந்தால் உடனே குணப்படுத்தும் நிவாரணி என கூறப்பட்டுள்ளது.

அதாவது கிருமிகள், தொற்றுகளோடு சண்டையிடும் ஆண்டி ஆக்ஸிடண்ட் அன்னாசியில் உள்ளது. அதுமட்டுமன்றி விட்டமின் சி இருப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். அதோடு அதில் உள்ள புரொமெலைன் சுவாசப் பிரச்னைகளுக்கு உதவும் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்துமா இருப்போருக்கு அன்னாசிதான் உற்ற நண்பனாம்.
எனவே எப்படியெல்லாம் அன்னாசியை சாப்பிடலாம் ?

அன்னாசி சாறை வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் தொண்டைக்கு நல்ல ரிலீஃபாக இருக்கும்.

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?அன்னாசி அதோடு தேன் , ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகு கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்தால் இருமல் , சளி, தொண்டை வலி இருக்காது.

குறிப்பு : இருமல், சளி இருக்கும் போது பால் பொருட்கள், கஃபைன், வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவை பிரச்னையை தீவிரமாக்கும்.

பார்க்க :

 
First published: April 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading