கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் பழக்கம் நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் பழக்கம் நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

மாதிரி படம்

ஒருவர் தவறான நிலையில் தூங்கினால், மறுநாள் உடலின் பல பகுதிகளில் வலியை சந்திக்க வேண்டியிருக்கும்.

  • Share this:
எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஆம், ஒருவர் தவறான நிலையில் தூங்கினால், மறுநாள் உடலின் பல பகுதிகளில் வலியை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும். எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம்.

நீங்கள் விரும்பும் தூக்க நிலை என்ன?

ஒவ்வொருவரும் ஒரு தூக்க நிலையை பின்பற்றுவார்கள். நீண்ட கடினமான நாளுக்குப் பிறகு, உடனடியாக நீங்கள் விரும்பும் தூக்கத்தை பெற சரியாக தூங்குவது அவசியம். உங்கள் கால்களுக்கு இடையே தலையணையை வைத்து தூங்குவதால் தூக்கம் விரைவாக வருவது மட்டுமின்றி உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் வழங்குகிறது.சிலருக்கு தலையணை இல்லையென்றால் தூக்கம் வராது, உங்களுக்கு குறைந்தது இரண்டு தலையணைகள் தேவை. ஒன்று உங்கள் தலைக்கு ஒன்று உங்கள் கால்களுக்கு இடையே வைத்துக்கொள்ள உதவும். உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைப்பது ஆறுதல் தரும், மற்றும் முழங்கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தத்தை நீக்குகிறது

முழங்கால்களுக்கு இடையில் ஒரு உறுதியான தலையணையை வைத்து தூங்குங்கள். முக்கியமாக இந்த தலையனை உங்கள் முழங்கால்களில் இருந்து கணுக்கால் வரை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதனால் முழங்கால்கள் மற்றும் கணுக்கால் சரியாக ஒரே நிலையில் இருக்கும், என்பதால் சீராக தூக்கம் வரும்.

தீராத தலைவலியால் தினமும் அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கு இருப்பது எந்த மாதிரியான தலைவலி..? தெரிந்துகொள்ள கிளிக் பண்ணுங்க..!

உங்கள் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைத்து தூங்குவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை எளிதாக்க உதவுகிறது. இது உங்கள் இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது, இது உங்கள் உறுப்புகள் சரியாக செயல்பட உதவுகிறது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் போது, அது இடுப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது. அதோடு முதுகெலும்புகள் சீரமைப்பில் இருந்து நகர்வதையும் தடுக்கிறது. இதனால் உங்கள் முதுகு வலி குறையும்.

தலையணை ஆரோக்கியமான தூக்கத்தையும் ஊக்குவிக்கும், மேலும் உடல் வலியைப் போக்கவும் உதவும். மேலும் உங்கள் முதுகெலும்பை சீராக வைத்திருப்பது மட்டுமின்றி, காலையில் சரியாக எழுந்திருப்பதையும் உறுதி செய்கிறது.

 
Published by:Sivaranjani E
First published: