Home /News /lifestyle /

எலும்புகளை உறுதியாக்க வேண்டுமா ? இதையெல்லாம் செய்தாலே போதும்..

எலும்புகளை உறுதியாக்க வேண்டுமா ? இதையெல்லாம் செய்தாலே போதும்..

பொதுவாக 40 வயதிற்குப் பிறகு எலும்பு ஆரோக்கியம் குறைந்து, சிதையத் தொடங்குகிறது.

பொதுவாக 40 வயதிற்குப் பிறகு எலும்பு ஆரோக்கியம் குறைந்து, சிதையத் தொடங்குகிறது.

பொதுவாக 40 வயதிற்குப் பிறகு எலும்பு ஆரோக்கியம் குறைந்து, சிதையத் தொடங்குகிறது.

ஆரோக்கியமான உடலுக்கான அஸ்திவாரமாக பலமான எலும்புகள் உள்ளன. நடக்க, நிற்க, உட்கார, ஓட என அனைத்திற்குமே எலும்புகள் தான் உறுதுணையாக இருக்கின்றன. சிலருக்கு குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் முதுகு வலி, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம் வயதானதால் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால் சிறிய வயதில் இருந்தே எலும்புகள் வலுவிழந்து விடுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

பொதுவாக 40 வயதிற்குப் பிறகு எலும்பு ஆரோக்கியம் குறைந்து, சிதையத் தொடங்குகிறது. ஈஸ்ட்ரோஜன் அளவு குறைதல், குறைந்த உடல் உழைப்பு, உணவில் கால்சியம் பற்றாக்குறை, புகையிலை மற்றும் புகைபிடித்தல் ஆகியவை எலும்பை வலுவிழக்கச் செய்யும் காரணிகளாக உள்ளன.

எலும்பினை உறுதியாக வைத்திருக்க நமது அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய சில செயல்முறைகள் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்..

1. எலும்புகளை வலுவாக்குவது, மேம்படுத்துவது எப்படி?

சரிவிகித உணவு, போதுமான அளவு உடல் உழைப்பு, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை எலும்புகளை பரிசோதித்து கொள்வது, உடற்பயிற்சி ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

2. கால்சியம், வைட்டமின் டி:

எலும்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க, தினசரி பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவை எடுத்துக் கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவு எனக்கூறக்காரணம் அந்த அளவிற்கான கால்சியத்தை மட்டுமே உங்களுடைய உடல் உறிஞ்சிக்கொள்ளும் என்பதால் மீதமுள்ளவை வீணாகவே வாய்ப்புள்ளது.

3. இயற்கை ஆதாரங்களை பயன்படுத்துங்கள்:

செயற்கையான கால்சியம் சப்ளிமெண்டுகளுக்கு பதிலாக, இயற்கை உணவுகளிலிருந்து உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைப்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். தயிர், சோயா, கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் பால் போன்ற உணவுகளில் கால்சியம் நிறைந்துள்ளது.வைட்டமின் டிக்கு சூரிய ஒளியை முடிந்தவரை பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சூரிய ஒளியில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, ஜாக்கிங், யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம்.4. உடற்பயிற்சி:

உடற்பயிற்சி செய்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள், முடிந்தால் ஜிம்மில் சேர்ந்துவிடுவது நல்லது. இல்லையெல் வீட்டு வேலைகளை அதிகமாக செய்யுங்கள். தீவிர வொர்க்அவுட்டைத் திட்டமிடுவதற்கு முன், மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால் உங்களுடைய தீவிர பயிற்சி எலும்பின் உறுதியை பொறுத்தே அமையும் என்பதால், அது எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதித்து, அதற்கு ஏற்றார் போல் திட்டமிடலாம்.

5. காஃபியை தவிருங்கள்:

சமீபத்திய ஆய்வில், காஃபின் சிறுநீரில் கால்சியம் இழப்பை அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு 100 மில்லிகிராம் காஃபினுக்கும் 6 மில்லிகிராம் கால்சியத்தை ஒருவர் இழப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காபி காஃபினின் ஒரு முக்கி மூலமாகும். நாளோன்றுக்கு 16 கப் காபி 320 மில்லிகிராம்களை காபின்களை கொண்டுள்ளது. அதேசமயம் தேநீரிலும் காஃபின் இருந்தாலும், அது தீங்கு விளைவிப்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

also read : உடல் எடை குறைப்பு மற்றும் நீரிழிவு தடுப்புக்கு உதவும் ஃபாஸ்ட் 800 டயட்...also read : ராஜ்மா முதல் வால்நட் வரை - உடலுக்கு அவசியமான ஒமேகா-3 சத்துக்களை பெற உதவும் உணவுகள்! 6. உப்பின் அளவை குறையுங்கள்:

உப்பை அதிகமாக உட்கொள்வது எலும்பை வலுவிழக்கச் செய்து ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீரில் கால்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், எலும்புகளில் இருந்து இழப்பு ஏற்படுவதற்கும் உப்பு ஒரு முக்கிய காரணியாக உள்ளது. கால்சியம் எலும்புகளின் வலிமைக்கு முக்கியமானது என்பதால், அதிகப்படியான உப்பு எலும்பு வலுவிழக்க வழிவகுக்கும், அதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படக்கூடும். எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது.

7. புகைப்பிடிக்காதீர்கள்:

புகைபிடித்தல் எலும்புகளில் கால்சியம் இழப்பை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. நிகோடின் எலும்புகள் மீண்டும் வலுவாக உருவாவதை தடுப்பதாகவும், இது நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.

8. மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள்:

அதிக மது அருந்துதல் எலும்பின் ஆரோக்கியத்தை குறைக்கிறது. அதிகமாக மது அருந்துவது, கால்சியத்தை சரியாக உறிஞ்சும் உடலின் திறனை பாதிக்கப்படும். "ஆல்கஹால் கணையத்தின் செயல்பாட்டில் குறுக்கீட்டு, வைட்டமின் டி மற்றும் கால்சியத்தை உறிஞ்சுகிறது. இதனால் எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் கிடைப்பதில் மிகப்பெரிய தடை உருவாகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bone health

அடுத்த செய்தி