ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்வதேச யோகா தினம் 2022 : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 4 யோகாசனங்கள்... 

சர்வதேச யோகா தினம் 2022 : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 4 யோகாசனங்கள்... 

யோகா

யோகா

உடல் நலத்தை பேணிப் பாதுக்காக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆயுர்வேதம், உடற்பயிற்சி, யோகா போன்றவை மீது கவனம் செலுத்த ஆரம்பித்தனர். 

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கொரோனா பெருந்தோற்று முதலாம் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என அடுத்தடுத்து பரவி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது. அப்போது தான் அனைவருக்கும் தங்கள் ஆரோக்கியம் மீதான அக்கறை பிறந்தது. லாக்டவுனில் வீட்டில் அடைபட்ட போது, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேட ஆரம்பித்தனர். உடல் நலத்தை பேணிப் பாதுக்காக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஆயுர்வேதம், உடற்பயிற்சி, யோகா போன்றவை மீது கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலத்தில் உலகம் முழுவதும் யோகா பயிற்சி செய்வது பிரபலமானது. அதுவும் லாக்டவுன் நேரத்தில் வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிமையான பயிற்சியாக யோகா இருந்ததால் பலரும் அதனை செய்ய ஆரம்பித்தனர்.

யோகா ஏன் சிறந்தது?

யோகா பல நூற்றாண்டுகளாக உடலைப் பொருத்தமாகவும், நன்றாகவும், முழுமையாகவும் செயல்பட வைக்கிறது. இருப்பினும், யோகாவின் நன்மைகள் மன அழுத்த நிவாரணம் மற்றும் மன ஆரோக்கியத்துடனும் தொடர்புள்ளது.

சரியான யோகா பயிற்சி, உங்கள் உடலை ரீசார்ஜ் செய்வதற்கு சமம், நச்சுகள், எதிர்மறை ஆற்றலை அகற்றி, உங்கள் முக்கிய உறுப்புகளை நன்றாகச் செயல்பட வைக்கும். சில யோகா நிலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும், சமநிலைப்படுத்தவும் மற்றும் அதிகரிக்கவும் உதவுகின்றனர்.

சர்வதேச யோகா தினமான இன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய 4 யோகாசனங்கள் பற்றி பார்க்கலாம்...

1. பிராணாயாமம்:

பிராணாயாமம் என்பது மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தி இயல்பாகவும், மெதுவாகம் மூச்சுவிட வைக்கும் ஆசனம் ஆகும். இந்த யோகாவை தினந்தோறும் செய்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உடலில் வீரியம் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கவும் உதவுகிறது.

சுகாசனம் மற்றும் பிராணயாமா இரண்டும் ஆழ்ந்த சுவாசத்தை ஊக்குவிக்கின்றன, இது மன அழுத்த ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதயத் துடிப்பு மற்றும் நரம்பு தொடர்பு பிரச்சனைகளை தீர்ப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்திக்கும் பயனளிக்கிறது.

International Yoga Day 2022 : தினசரி யோகா நோய்களை நெருங்க விடாது : அதற்கு இந்த 17 நன்மைகள்தான் காரணம்

எவ்வாறு செய்ய வேண்டும்?

-சமமான தரையில் துண்டு அல்லது யோகா மேட்டை விரித்து உட்கார்ந்து, கால்களை குறுக்காகவோ அல்லது தரையில் மண்டியிட்டோ அமர்ந்து கொள்ளுங்கள்.

- இடுப்புக்கு மேல் தோள்கள் மற்றும் தோள்களுக்கு மேல் தலையை உயர்த்தி, உங்கள் உடலை நேராக நிமிர்த்தி வைக்கவும்.

-இப்போது, ​​முதுகுத்தண்டு வரை நீண்டு ஒரு ஆழமான மூச்சை உள்ளிழுத்து, பின்னர் மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

- குறைந்தது 10 முறை இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

2. மத்ஸ்யாசனம் (மீன் நிலை):

மத்ஸ்யாசனத்தில் உடல் மீன் நிலை போல் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இது ஆங்கிலத்தில் Fish Pose என்று அழைக்கப்படுகிறது, தமிழில் இதனை மச்சாசனம் என அழைக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், நச்சுக்களை நீக்கி ஆற்றல் மட்டத்தை உயர்த்தவும் உதவுகிறது.

International Yoga Day 2022 : தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் இவ்வளவு நன்மைகளா..? 

எவ்வாறு செய்ய வேண்டும்?

- யோகா மேட் மீது பத்மாசனம் நிலையில் கால்கள் மற்றும் கைகளை வைத்து படுத்துக்கொள்ளவும். இந்த நிலையில் இருந்த படியே மெதுவாக உங்கள் மார்பை மேல் நோக்கி உயர்த்தவும்.

- தலையை நன்றாக கீழ் நோக்கி சாய்த்து, உச்சந்தலையைத் தரையில் வைக்கவும்.

- தோள்களை தளர்வாகவும், அகலமாகவும் வைக்க வேண்டும். இந்த நிலையில் அதிகபட்சமாக 2 - 3 நிமிடங்கள் வரை தொடரலாம்.

அதன் பின்னர், உடலை மெதுவாகத் தளர்த்தி, தலையைத் தரையில் வைத்து கைகளை நீட்டி ஆரம்ப நிலையில் படுத்து ஓய்வாசனத்தில் இருக்கவும்.

3. விபரீத கரணி (சுவற்றின் மேல் கால்கள்) :

'லெக்ஸ் அப் தி வால்' என பொதுவாக அறியப்படும் விபரீத கரணியை பயிற்சி செய்வது உங்கள் எனர்ஜியை அதிகரிக்கவும், சோம்பலில் இருந்து விடுவிக்கவும் உதவுகிறது. மேலும் நரம்பு இணைப்புகளை அதிகரிக்கவும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கருவுறுதல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த யோகாசனம் செய்வது மிகவும் சிறந்தது. விபரீத என்றால் வடமொழியில் தலைகீழ் என்று பொருள்.

எவ்வாறு செய்ய வேண்டும்?

- தரையில் ஒரு யோகா பாய் அல்லது துண்டை விரித்து உட்கார்ந்து கொள்ளுங்கள், இப்போது அப்படியே உங்கள் பக்கத்தில் உள்ள சுவருக்கு எதிர் திசையை பார்த்தது போல் அமருங்கள்.

- இப்போது மெதுவாக உங்கள் இரண்டு கால்களையும் சுவற்றின் மீது வைத்து மெதுவாக உயர்த்தவும். இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் செங்குத்தாக கூரையை நோக்கி இருக்குமாறு வைக்கவும்.

- இந்த நிலையில் இருக்கும் போது, ​​​​உங்கள் கீழ் முதுகு மற்றும் தொடை தசைகளில் அதிக அழுத்தத்தை விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

- உங்கள் இடுப்பு தசைகளை சிறிது உயர்த்த முயற்சிக்கவும். உங்கள் தலையை ஓய்வெடுப்பது போல் வசதியாக வைத்துக்கொள்ளலாம்.

- குறைந்தபட்சம் 5-15 நிமிடங்கள் இந்த நிலையில் இருக்க வேண்டும். இதனால் உருவாகும் ரத்த ஓட்டம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்ககூடியது.

4. உத்தனாசனா (முன்னோக்கி வளைவது) :

உடலை வளைத்து காலை அடிபணிந்து குனிய வேண்டிய இந்த யோகா போஸ், நோயெதிர்ப்பு மண்டலத்தை புத்துயிர் பெறுவதற்கான எளிதான வழிகளில் ஒன்றாகும்.

எவ்வாறு செய்ய வேண்டும்?

- நிற்கும் நிலையில் இருந்து, உங்கள் கால்களை இடுப்பு தூரத்திற்கு நீட்டவும்.

-இப்போது, ​​நீங்கள் மடிக்கத் தொடங்கும் போது, ​​உங்கள் முழங்கால்களை சற்று வளைத்து, உங்கள் இடுப்பை சிறிது தளர்த்தவும். மெதுவாக வளையவும்.

- அப்படியே நன்றாக குனிந்து கைகள் தரையில் இருக்கும் படி 5 முதல் 10 முறை மூச்சை நன்றாக ஆழமாக சுவாசித்து, மெதுவாக வெளியே விடலாம். ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் கைகளை கணுக்கால் அல்லது தொடைகளில் வைத்து முதற்கட்ட பயிற்சியை மேற்கொள்ளலாம்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Immunity boost, Yoga day, Yoga Health Benefits