புறாக்களால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுமா? நிபுணர்கள் கூறுவது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், 48, சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏற்கனவே நுரையீரல் அலர்ஜி இருந்ததால், கொரோனாவுக்குப் பின் அது தீவிரமடைந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் திடீரென அவருக்கு நுரையீரலில் தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து உள்ளது.
அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டபோதும், உறுப்புகள் கிடைக்காததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போய் உள்ளது. இதனிடையே, மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணத்திற்கு சொல்லும் காரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அதாவது, வித்யாசாகருக்கு சமீபத்தில் நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது, இதோடு கொரோனா பரவலும் சேர்ந்து அவருக்கு மூச்சு பிரச்சனையை அதிகப்படுத்தியிருக்கிறது. இதனிடையே, பெங்களூரில் அவர்கள் வாழும் பகுதியில் புறா வளர்க்கப்பட்டு வந்ததாகவும் இந்த புறாக்களின் எச்சத்தின் மீது பட்டு வீசும் காற்றை தொடர்ந்து அவர் சுவாசித்ததன் காரணமாக வித்யாசாகருக்கு புதிய தொற்று பரவி நுரையீரலை அதிக அளவில் பாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, புறாக்களின் எச்சத்தில் உள்ள பூஞ்சைகள் மனிதர்களில் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இந்த பாதிப்பு சில நேரங்களில் உயிருக்கும் ஆபத்தாக அமையலாம் என கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து சிறப்பு மருத்துவர் அஷ்வின் கருப்பன் கூறுகையில், குடியிருப்புகளில் பலவற்றிலும் பொதுவாக காணப்படும் பறவையாக உள்ளது புறா. புறாக்களின் எச்சத்தில் பூஞ்சைகள் இருக்கும். அதன் மூலம் Histoplasmosis, Aspergillosis. போன்ற நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.
எனவே புறாக்கள் வளர்க்கும் போது, சுத்தமாக இருப்பது அவசியம். புறாக்களை பராமரித்து விட்டு, கைகளை கழுவிய பின்னரே உணவு பொருட்களை தொட வேண்டும்" என்று கூறுகிறார்.
மனிதர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்களில் 75% ஏதோ ஒரு வகையில் விலங்குகளிடமிருந்து ஏற்படுகிறது என முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரும் விலங்கியல் மரபணு அறிவியல் நிபுணருமான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவிக்கிறார்.
ஒரு புறம் கொரோனா, குரங்கு அம்மை போன்ற தொற்று நோய்களும் மறுபுறம் எலி காய்ச்சல், ரேபிஸ், புறாக்களினால் நுரையீரல் பாதிப்பு என தொற்றா நோய்களும் ஏற்படுகின்றன. புறாக்கள் என்பவை கிட்டத்தட்ட 50 வகையான கிருமிகளை தன்னிடம் கொண்டதாகும். செல்ல பிராணிகளிடம் அன்பு செலுத்தும் அதே வேளையில் பாதுகாப்பாக இருப்பதும் அவசியம் என்கிறார் ராதாகிருஷ்ணன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.