முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள்தான் PCOS-ஆல் பாதிக்கப்படுகிறார்களா..? நிபுணர்களின் பதில்..!

உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள்தான் PCOS-ஆல் பாதிக்கப்படுகிறார்களா..? நிபுணர்களின் பதில்..!

Polycystic ovary syndrome எனப்படும் PCOS

Polycystic ovary syndrome எனப்படும் PCOS

உடல் பருமனும் பெண்களுக்கு PCOS ஏற்பட காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்படி 40 - 80 சதவீதம் பெண்களில் PCOS இருப்பது கண்டறியப்பட்டதில் அவர்களுக்குள் இருந்த பொதுவான காரணம் உடல் பருமனாக இருந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

Polycystic ovary syndrome எனப்படும் PCOS பாதிப்பு ஹார்மோன் குறைபாடு காரணமாக ஏற்படும் பாதிப்பாகும். கருப்பையில் அளவுக்கு அதிகமான ஆன்ட்ரோஜீனை வெளியிடுவதால் நிகழ்கிது. அதாவது இந்த ஆன்ட்ரோஜீன் என்பது ஆண்களுக்கு சுரக்கூடிய ஹார்மோனாகும்.

இது அதிகமாக சுரப்பதால் பெண்களுக்குக்கான ஹர்மோன் குறைவாக சுரக்கிறது. இதனால் பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனையும் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. அப்படி உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி உலக அளவில் தோராயமாக 116 மில்லியன் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து உடல் பருமனும் பெண்களுக்கு PCOS ஏற்பட காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்படி 40 - 80 சதவீதம் பெண்களில் PCOS இருப்பது கண்டறியப்பட்டதில் அவர்களுக்குள் இருந்த பொதுவான காரணம் உடல் பருமனாக இருந்துள்ளது. அமெரிக்காவின் National Library of Medicine நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் அதிக உடல் பருமன் தான் PCOS ஏற்பட 80 சதவீத காரணமாக இருப்பதாக கண்டறிந்துள்ளது.

அந்த வகையில் எடை குறைவான அல்லது சீரான உடல் எடையுடன் இருக்கும் பெண்களுக்கு PCOS ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இது உண்மைக்கு புறம்பானது என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது 20-50 சதவீதம் PCOS ஆல் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல் எடை நார்மலாகவே இருந்திருக்கிறது. அதோடு அவர்கள் மிக ஒல்லியாகவும் இருந்திருக்கின்றனர். இதை மருத்துவ உலகில் ‘Lean PCOS’ என்றும் அழைக்கப்படுகிறது.

இதை இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டியளித்த மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர் சௌமியா கிருஷ்ணைய்யாவும் ஒப்புக்கொள்கிறார். “ Lean PCOS கொண்ட பெண்களின் பிஎம்ஐ, 25க்கும் குறைவாக இருந்த போதும் பிசிஓஎஸ் பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.

இதற்கு நீரிழிவு நோய், இன்சுலின் தட்டுப்பாடு என பல காரணங்கள் பிசிஓஎஸ் உருவாக காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் Lean PCOS-ஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எளிதாக சிகிச்சைகள் மூலம் குழந்தையின்மை பிரச்சனை, அண்டவிடுப்பு பிரச்சனை ஆகியவற்றை சரி செய்ய முடியும் என்கின்றனர்.

Also Read : மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு இந்த சிறிய அறுவை சிகிச்சை போதுமாம்... ஆய்வுகள் சொல்வது என்ன?

உடல் பருமனால் உருவாகும் பிசிஓஎஸை காட்டிலும் இந்த Lean PCOS-ஐ அவ்வளவு எளிதாக கண்டறிவதும் கடினம். அப்படி ஒருவருக்கு Lean PCOS இருப்பதை கண்டறிவதற்கு முன் வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாடு பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்வோம். உதாரணமாக தைராய்டு, hyperprolactinemia போன்ற நோய்களை உறுதி செய்ய வேண்டும்.

அப்படி Lean PCOS பாதிக்கப்பட்டால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும்..?

- ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு மாதவிடாய் பிரச்சனை அனுபவிக்கக் கூடும். அதாவத் ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது அதிக இரத்தப்போக்கு போன்றவை இருக்கக்கூடும்.

- முகப்பரு, ஆக்னே போன்றவை வரலாம்,

- முகம், மார்பகங்கள் , தொடை என உடலில் புதிதாக முடிகள் வளரத் தொடங்கும்.

- இன்சுலின் தட்டுப்பாடு இருந்தால் நீரிழிவு நோய், இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருக்கக் கூடும்.

- குழந்தையின்மை பிரச்சனையும் இருக்கலாம்.

வேறு என்னென்ன காரணங்களாக இருக்கலாம்..?

ஹார்மோன் தட்டுப்பாடு காரணமாக இருந்தாலும் அதற்கு தூண்டுகோலாக இருப்பது , அதிக மன அழுத்தம், உணவில் கட்டுப்பாடின்மை, உடற்ப்பயிற்சி இல்லாமை, சீரான வாழ்க்கைமுறையின்மை போன்றவையாகும்.

First published:

Tags: Obesity, PCOS, Weight gain