கொரோனா முடிந்ததும் இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஒரு பட்டியலே வைத்திருப்பீர்கள். ஆனால் அதில் சிலவற்றை ஊரடங்கு முடிந்த உடனே செய்வதைத் தவிருங்கள். ஏனெனில் கொரோனா வைரஸ் எங்கேயேனும் இருக்கக் கூடும். பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக் கூடும். எனவே உங்கள் ஆரோக்கியம் கருதி சில விஷயங்களை செய்யாதீர்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.
சுற்றுலா பிளான் : கொரோனா முடிந்ததும் கூண்டுக்குள் அடைபட்ட பறவைகள், கூண்டைத்திறந்ததும் பறப்பது போல சுற்றுலா செல்ல திட்டமிடாதீர்கள்.
கை கழுவுவதை தவறாதீர்கள் : ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா வைரஸ் ஏங்கேயேனும் உயிர் வாழக்கூடும். எனவே தற்போது கடைபிடிக்கும் கை கழுவும் பழக்கத்தை ஊரடங்கு முடிந்த பின்பும் பின்பற்றுங்கள்.
பார் கிளப் பார்ட்டி : கிளப் செல்வது, பார்ட்டிகளில் பங்கேற்பது போன்ற கேளிக்கை விஷயங்களைத் தவிறுங்கள்.
சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல் : ஊரடங்கிற்குப் பின் வெளியே சென்றால் இருமல், தும்மல் வரும் போதும் கைக்குட்டை அல்லது கைகளால் முகத்தை மூடுவதைக் கடைபிடியுங்கள்.
நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்தல் : வீட்டில் உடனே பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி உறவினர்களை வரவேற்பதைத் தவிருங்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.