வீட்டில் வீடியோ பார்த்து உடற்பயிற்சி செய்கிறீர்களா..? இன்றே அதை நிறுத்துங்கள்..!

டிரெய்னர் இல்லாமல் பயிற்சி செய்ததால் கடுமையான அடி முதுகு வலிக்கு உள்ளாக்கப்படுவீர்கள்.

Sivaranjani E | news18
Updated: July 20, 2019, 8:17 AM IST
வீட்டில் வீடியோ பார்த்து உடற்பயிற்சி செய்கிறீர்களா..? இன்றே அதை நிறுத்துங்கள்..!
உடற்பயிற்சி
Sivaranjani E | news18
Updated: July 20, 2019, 8:17 AM IST
உடலைச் சிக்கென கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆசைதான் என்றாலும் உடற்பயிற்சிக் கூடம் போக வேண்டும் என்பது சற்று கசப்பான செயல். இதைத் தவிர்க்க கிளம்பியதுதான் ஆன்லைனில் உடற்பயிற்சி. இப்படி உடற்பயிற்சி கற்றுத் தரும் வீடியோக்கள் யுடியூபைத் திறந்தாலே கொட்டிக் கிடக்கின்றன.

இந்த வீடியோக்கள் நேரத்தை, பணத்தை மிச்சம் செய்வதை விட நம் சௌகரியத்திற்கும் ஒத்துபோகக் கூடியதாக இருக்கின்றன.

அதாவது சற்று சோர்வாக உணர்ந்தாலோ, வீட்டில் வேலை, ஓய்வு தேவை என்றாலோ வீடியோவைப் ’பாஸ்’ செய்து விட்டுத் தேவைப்படும்போது தொடரலாம். அதேபோல் சுந்தந்திரமாக உடல் சௌகரியத்திற்கு ஏற்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நினைத்த நேரத்தில் வீடியோவை ’ஆன்’ செய்துவிட்டு உடற்பயிற்சி செய்யலாம்.


ஆனால் இந்த போக்கு சரிதானா.. ? உடற்பயிற்சிக்கென இருக்கும் சில விதிகளை மீறும் செயல் இல்லையா..? இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் வராதா..?

இப்படி எந்த கேள்விகளும் உங்களை உறுத்தவில்லை எனில் இன்னும் அந்த நிலையை நீங்கள் அடையவில்லை என்றே நினைக்கிறேன்.Loading...

24 வயதான ஒரு பெண் இப்படி வீடியோக்களைப் பார்த்து உடற்பயிற்சி செய்ததில் இரண்டே மாதத்தில் 8 கிலோ வரை எடையை குறைத்திருக்கிறார். எட்டு கிலோவா என ஆச்சரியத்தில் நீங்களும் வீடியோ பார்க்க கிளம்பிவிடாதீர்கள்..அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

என்னதான் உடல் எடை குறைந்தாலும் உடல் வாகுக்கு ஏற்ற பயிற்சிகளை மேற்கொள்ளாமல், டிரெய்னர் இல்லாமல் பயிற்சி செய்ததால் கடுமையான அடி முதுகு வலிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் அது உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படுகிறது என்று கடந்துள்ளார். பின் பிசியோதெரபியை அணுகியபோதுதான் கடுமையான உள் காயம் ஏற்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.இப்படி, சௌகரியத்திற்கு ஏற்ப ஆலோசனையின்றி உடற்பயிற்சி மேற்கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

”உடல் எடை, உடல் வலிமை , உடல் அமைப்பிற்கு ஏற்றவாறுதான் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். காணும் அனைத்து பயிற்சிகளும் ஏற்றதாக இருக்காது. எனவே இதுபோன்ற விபரீதங்களை மேற்கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது” என தண்டுவட நிபுணர் காரிமா ஆனந்தானி கூறுகிறார்.

எனவே நீங்களும் ஆன்லைன் வீடியோக்கள் பார்த்து உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனில் தவிர்த்து விடுவது நல்லது. அப்படி செய்வதாக இருப்பினும் நிபுணர்களின் ஆலோசனைப்படி மேற்கொள்ளலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...