இந்த பிஸியான வாழ்க்கையில் எதற்கும் நமக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. குறிப்பாக சமைப்பதற்கு…. சாதம் வடிக்க, உருளைக்கிழங்கு வேக வைப்பது, பருப்பு சமைப்பது என ஏதுவான இருந்தாலும் குக்கரில் போட்டால் வெறும் 10 நிமிஷம் தான். உடனடியாக சமைக்க எல்லாருக்கும் கிடைத்த எளிமையான பாத்திரம். ஆனால், சில பொருட்களை குக்கரில் சமைக்கக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா?.
ஆம், குக்கரில் செய்தால் சீக்கிரம் சமைத்துவிடலாம் என்று நாம் நினைக்கும் சில உணவு பொருட்களை குக்கரில் சமைத்தால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களை குக்கரில் சமைப்பதனால், அதன் சுவை, நிறம், மற்றும் சத்துக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அந்தவகையில், குக்கரில் சமைக்க கூடாத உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
> குக்கரின் அடிப்பகுதி தடிமனாகவும், மிகவும் ஆழமாகவும் இருக்கும். எனவே, சில கடாய்க்கு பதில் குக்கரில் சிக்கனை வறுப்பார்கள். நீங்களும் அவ்வாறு செய்தால், கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால், குக்கர் அதிக வெப்பநிலையில் எண்ணெயை சூடாக்குவதற்காக உருவாக்கப்படவில்லை. எனவே, குக்கரை ஒருபோதும் பொரிப்பதற்கு பயன்படுத்த வேண்டாம்.
> காய்கறிகளை வதக்குவதற்கு குக்கரை பயன்படுத்துவது நல்லதல்ல. எனவே, வதக்குவதற்கு தனியாக வாணலி அல்லது கடாயைப் பயன்படுத்துவது நல்லது. காய்கறிகளை குக்கரில் சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைப்பதில்லை. எனவே, அவற்றை கடாயில் சமைப்பது நல்லது.
Also Read | இனி வீட்டிலேயே மொறு மொறுனு KFC ஸ்டைல் சிக்கன் செய்யலாம்.. ரெசிபி இதோ...
> நமது வீட்டில் இருப்பவர்கள் கூறுவார்கள். சாதத்தை குக்கரில் வைக்க வேண்டாம் என. அது, சுவைக்காக மட்டும் அல்ல. அரிசியை குக்கரில் வைப்பதால் அரிசியில் உள்ள தேவையற்ற அதீத கொழுப்புகள் அரிசியிலேயே தங்கி விடுகின்றனர். மேலும், அரிசியில் இருந்து வெளியாகும் ஸ்டார்ச் ஒரு ரசாயனத்தை உருவாக்குகிறது, இது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
> பருப்பு வகைகளை குக்கரில் சமைப்பது நல்லதல்ல. கடாயில் எப்படி சமைக்க முடியும் என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு ஆகியவை குக்கரில் சமைக்கலாம். ஆனால், பாசிப்பருக்கு, துவரம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவை எளிமையாக சமைக்க கூடிய பருப்புகள். அவற்றை நாம் கடாயிலேயே எளிமையாக சமைக்கலாம். குக்கரில் பருப்புவகைகளை சமைப்பதால் அதன் அமைப்பும் மாறுவதுடன், சுவையும் கெட்டுவிடும். எனவே அவற்றை எப்போதும் கடாயில் குறைந்த தீயில் சமைக்கவும்.
> நம்மில் பலரும் உருளைக்கிழங்கு வேகவைக்க குக்கரை பயன்படுத்துவோம். ஆனால், அரிசியைப் போல உருளைக்கிழங்கையும் குக்கரில் சமைக்கக் கூடாது. பிரஷர் குக்கரில் சமைப்பதால், உணவின் சத்து குறைவதாக உணவு மற்றும் வேளாண்மை பொது அறிவியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உருளைக்கிழங்கிலும் ஸ்டார்ச் இருப்பதால், அது ஒரு வகையான ரசாயனத்தை உருவாக்குகிறது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pressure Cooker, Rice cooker