அரிப்பு உண்டாகும்போது சொறியாவிட்டால் நோய் பரவுமா..?

உடம்பு முழுவதும் அரிப்பை உண்டாக்கினால் அது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்,

news18
Updated: August 29, 2019, 12:01 PM IST
அரிப்பு உண்டாகும்போது சொறியாவிட்டால் நோய் பரவுமா..?
அரிப்பு
news18
Updated: August 29, 2019, 12:01 PM IST
சில நேரங்களில் அரிப்பு உண்டானால் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது கூட கவனத்தில் கொள்ளாமல் சொறிந்துவிடுவோம். பின் அந்த அரிப்பு நின்று விடும்.

நம்மை அறியாமல் திடீரென செய்யும் இந்த செயல் ஏன் உண்டாகிறது என்பது தெரியுமா..?

அதாவது நம் உடலில் ஏதேனும் கிருமித் தொற்று தாக்க வந்தால் அதற்கான சிக்னலை மூளைக்குக் கொடுப்பதுதான் இந்த அரிப்பு. அதை சுதாரித்துக்கொண்டு உடல் அதற்கு எதிர்வினையாற்றும் இதுதான் அரிப்புக்கான காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அதாவது நம் உடல் அதற்கு முன்பு வரை பார்க்காத பொருளை முதல் முறையாகப் பயன்படுத்தும்போது அது புரதமாக இரத்தத்தில் தேங்கியிருக்கும். மீண்டும் அந்த பொருள் உடலுக்குள் செலுத்தப்படும்போது அது ஒவ்வாமை செல்களான மாஸ்ட் செல்களை தூண்டி நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவாகவே அரிப்பு உண்டாகிறது.

அதேசமயம் அரிப்பை சாதாரணமாகவும் கடந்துவிடக் கூடாது. காரணம் சில நேரங்களின் உடலுக்கு ஒவ்வாத நோய்த் தொற்று ஏற்பட்டாலும் அரிப்பை உண்டாக்கும்.

உதாரணமாக ஆசன வாயில் அரிப்பு உண்டானால் நூல் புழு காரணமாக இருக்கலாம். அதுவே உடம்பு முழுவதும் அரிப்பை உண்டாக்கினால் அது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

Loading...

அதேபோல் குடல் பகுதியில் புழுக்கள் தேங்கியிருந்தாலும் உடம்பில் தீவிரமான அரிப்பை உண்டாக்கலாம்.இவை தவிர நீரிழிவு, இரத்த சோகை, சிறுநீரகக் கோளாறு, பித்தப்பை பிரச்னை, மூளை நரம்புப் பிரச்னை போன்றவற்றிற்கும் அரிப்பு மிக முக்கிய அறிகுறி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

அரிப்பு வருகிறதெனில் அதை அலட்சியமாக விட்டுவிடாமல் தீவிரம் காட்டுவது அவசியம் என்கின்றனர்.

அதேபோல் கை , கால்களில் அரிப்பு உண்டாகும் போது சொறியாமல் விட்டுவிடாதீர்கள் என்றும் எச்சரிக்கின்றனர். காரணம் கிருமி தொற்று தோலில் தொற்றிக் கொண்டிருக்கும்போது உடல் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் அரிப்பை உடனே சொறிந்துவிட்டால், அந்த கிருமிகள் கீறல்களால் சிதறிவிடும் வாய்ப்புகள் அதிமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே..நீங்கள் அந்த நேரத்தில் சொறியாமல் விடுவது நோயின் தேக்கத்தையும் அதிகரிக்கும்.

First published: August 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...