• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பூஸ்டர் ஷாட்களை விட மிக்ஸிங் தடுப்பூசிகள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தருமா? நிபுணர்கள் சொல்வது என்ன ?

பூஸ்டர் ஷாட்களை விட மிக்ஸிங் தடுப்பூசிகள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தருமா? நிபுணர்கள் சொல்வது என்ன ?

காட்சி படம்

காட்சி படம்

பூஸ்டர் டோஸ் அல்லது மிக்ஸிங் டோஸ் இரண்டில் எது நமக்கு அதிக பாதுகாப்பை தரும்?

  • Share this:
பெருந்தொற்றுக்கு எதிரான போரில் தடுப்பூசிகள் முக்கிய கேடயமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பின் ஒருவருக்கு கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி திடீரென குறைவது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால் முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்டுள்ளவர்களுக்கும் கொரோனா ஆபத்து இருந்து வருகிறது. உருமாறிய வைரஸ்களால் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களும் ஆபத்தில் சிக்கும் நிலை காணப்படுகிறது.

எனினும் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட பின்னரும் பாதிக்கப்பட கூடிய அபாயத்தில் இருப்பவர்களுக்கு, சில நாடுகள் பூஸ்டர் டோஸ் (3-வது டோஸ்) தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தி உள்ள நிலையில், வெவ்வேறு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை "மிக்ஸ் அண்ட் மேட்ச்" செய்து, பூஸ்டர் டோஸை விட வலுவான நோயெதிர்ப்பு திறனை உருவாக்கும் தீவிர முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். அடுத்தடுத்து உருமாறிய கொரோனா வைரஸ்கள் படை எடுத்து வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் அல்லது மிக்ஸிங் டோஸ் இரண்டில் எது நமக்கு அதிக பாதுகாப்பை தரும்?

கோவிட் தடுப்பூசிகள் தொற்றின் தீவிரம் மற்றும் இறப்பு அபாயங்களை குறைக்க உதவுகின்றன என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனினும் பொதுவாக தடுப்பூசிகள் மூலம் பெறப்படும் நோயெதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிப்பதில்லை. காலப்போக்கில் சில மாதங்களுக்கு பிறகு குறைந்து விடும் என கூறப்படுகிறது. கோவிட் தடுப்பூசிகள் எவ்வளவு நாட்கள் பாதுகாப்பு தரும் என்பதற்கான உரிய தரவுகள் இல்லை. தடுப்பூசிகளின் இந்த தன்மை நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் அல்லது தடுப்பூசி போட்டு பல மாதங்கள் ஆனவர்களுக்கு நீடித்து வரும் தொற்றால் இன்னும் ஆபத்து இருப்பதாக கருதப்படுகிறது.

எனவே கோவிட் தடுப்பூசிகள் மூலம் கிடைக்கும் நோயெதிர்ப்பு பாதுகாப்பை அதிகரிக்க பல யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதில் Booster vaccination என்பது மக்கள் இதற்கு முன் போட்டு கொண்டுள்ள 2 டோஸ் தடுப்பூசியின் அடுத்த டோஸ் அதாவது மூன்றாவது டோஸ் ஆகும். மற்றொரு முறையான mix and match vaccines என்பது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 2 வெவ்வேறு தடுப்பூசிகளை குறிப்பிட்ட விகிதத்தில் மிக்ஸ் மற்றும் மேட்ச் செய்து மக்களுக்கு செலுத்துவது.

also read : கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா ?

இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ்களின் எண்ணிக்கை மற்றும் வீரியம் உள்ளிட்டவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு முழுமையாக தடுப்பூசி போட்டு கொண்ட மக்களுக்கு, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல கோவிட் தடுப்பூசிகளை மிக்ஸிங் செய்வதன் மூலம் வலுவானநோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி இருக்கிறார்கள். பூஸ்டர் தடுப்பூசிகள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்பே பல ஆய்வுகள் கோவிட் -19 தடுப்பூசி டோஸ்களை ஒன்றாகக் கலப்பதில் கவனம் செலுத்தி இருக்கின்றன.

mRNA + அடினோவைரஸ்/வைரஸ் வெக்டார் தடுப்பூசிகள் போன்ற கோவிட் தடுப்பூசிகளை மிக்ஸ் அண்ட் மேட்ச் செய்வது அதிகபட்ச பாதுகாப்பு மற்றும் நன்மைகளைப் பெற உதவும் சக்திவாய்ந்த கலவையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். மேலும் இந்த முறையில் நிச்சயமற்ற அபாயங்கள் எதுவும் அதிகம் காணப்படவில்லை, மாறாக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் முடிவுகள் காணப்பட்டதாக ஆரய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி நடைமுறையில் பின்பற்ற எளிதாக இருக்கும் நிலையில், மிக்ஸிங் தடுப்பூசி டோஸ்கள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைக்குரியதாக கூறப்பட்டு உள்ளது. எனினும் mix and match vaccine முறையில் காணப்படும் லாஜிஸ்டிக்ஸ் & ரிசோர்ஸ்களை கையாள்வது தொடர்பான சிக்கல்கள் இருப்பதால், உலகளவில் இம்முறை ஏற்று கொள்ளப்படுவதற்கு முன் இன்னும் அதிக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. மிக்ஸிங் தடுப்பூசிகள் எவ்வளவு பாதுகாப்பானவை என்பதை மேலும் பகுப்பாய்வு செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: