Home /News /lifestyle /

டிஎன்ஏவுக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் இப்படியொரு தொடர்பா..? ஆய்வில் ஆச்சரியம்

டிஎன்ஏவுக்கும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும் இப்படியொரு தொடர்பா..? ஆய்வில் ஆச்சரியம்

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

உடல் செயல்பாடு மற்றும் நோய் தடுப்பில் டிஎன்ஏ பங்களிப்பு குறித்து உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, 51 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
டிஎன்ஏ-வில் தான் ஒரு உயிரினத்தின் மொத்த மரபணு தகவல்களும் பதிவாகியுள்ளன. கண்ணின் நிறம் முதல் உருவம், சரும நிறம், குணாதிசயங்கள் ஆகியவற்றை ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடந்துகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கும், ஸ்கிரீனையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கும் சோம்பலான வாழ்க்கை முறைக்கும் காரணமான டிஎன்ஏ மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர்.

சுவீடனில் அமைந்துள்ள உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில், ஒருவர் ஓய்வு நேரத்தை உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற ஆக்டிவான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கும், டிவி, செல்போன், வீடியோகேம் என ஸ்கிரீனுக்கு முன்பே கழிப்பவர்களுக்கும் காரணமான டிஎன்ஏ பகுதிகளைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் நேச்சர் ஜெனிடிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உடல் செயல்பாடு மற்றும் நோய் தடுப்பில் டிஎன்ஏ பங்களிப்பு குறித்து உப்சாலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, 51 ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 70 ஆயிரம் நபர்களிடம் இருந்து பெறப்பட்ட மரபணு தரவுகளைக் கொண்டு அடத்தப்பட்ட சோதனையில், 99 டிஎன்ஏ பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை மக்களின் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நேரத்தை செலவிடுவது மற்றும் ஆக்டிவான வாழ்க்கை முறையோடு தொடர்புடையது என அறிவித்துள்ளனர்.



கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் உள்ள நோவோ நார்டிஸ்க் அறக்கட்டளை அடிப்படை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ரூத் லூஸ் கூறுகையில், "மக்கள் உடல் செயல்பாடுகளில் எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளோம். ஆய்வில் பங்கேற்ற பாதி நபருக்கும் மேலானோரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவும், அவர்கள் அணிந்திருந்த கருவிகளில் பதிவான உடல் செயல்பாடுகள் குறித்த அளவும் சமமாக இருந்தது எங்களுடைய நம்பகத் தன்மையை அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்..? தெரிந்துகொள்ளுங்கள்

மேலும் ஸ்கிரீன் டைமைக் குறைத்துக்கொண்டு உடற்பயிற்சி போன்ற உடல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் மிதமாக அல்லது தீவிரமாக செயல்படுவது நீரிழிவு, கவனக்குறைவு, மனச்சோர்வு மற்றும் ஆயுட் காலம் குறைவது போன்றவற்றை தடுக்க உதவுவதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள சினாய் மலையில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் ஆய்வறிக்கையின் முதல் ஆசிரியரான Zhe Wang கூறுகையில், உடல் சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் உடல் பருமனை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கவும் உதவுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.



ஓய்வு நேரத்தை ஸ்கிரீன் முன்னால் செலவிடும் நபரின் டிஎன்ஏ மாறுபாடுகள் பெரும்பாலும், அதிதீவிரமாக பயிற்சி செய்து தசைகளை மேம்படுத்துவதற்காக மாற்றப்படும் டிஎன்ஏவுக்கு அருகிலேயே அமைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே ஸ்கிரீன் டைமை அதிகமாக பயன்படுத்த தூண்டும் டிஎன்ஏ உடற்பயிற்சி செய்யத்தூண்டும் டிஎன்ஏவில் தாக்கத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட நபரின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பாதிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் 99 டிஎன்ஏ பகுதிகளில் 46 மரபணுக்களை அடையாளம் கண்டுள்ளனர், அவை மரபியல் மற்றும் உடல் செயல்பாடுகளை இணைக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: DNA Test, Lifestyle, Workout

அடுத்த செய்தி