ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பலவித நோய் பாதிப்புகளும் அதனுடன் சேர்ந்து வருவது இன்றைய வாழ்க்கை சூழலில் பொதுவான ஒன்றாக மாறியுள்ளது. அதன்படி, குறைவான ரத்த அழுத்தம் என்கிற ஹைபோடென்ஷன், ரத்த அழுத்தம் சாதாரண அளவை விட குறையும் போது ஏற்படுகிறது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் எழுந்து நின்றாலே மயக்கம் வருவது போன்ற உணர்வு இருக்கும். இதை தான் 'ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்' என்று சொல்கின்றனர்.
ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன்
இது ஒரு நபர் எழுந்து நிற்கும் போது ஏற்படும் ரத்த அழுத்தம் குறைவதைக் குறிக்கிறது. ஆர்த்தோஸ்டேடிக் என்பது உடலின் தோரணையை குறிப்பதாகும்; ஹைபோடென்ஷன் என்பது குறைந்த ரத்த அழுத்தத்தை குறிக்கிறது. இது போஸ்டுரல் ஹைபோடென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபர் உட்கார்ந்து இருக்கும் போதோ அல்லது தூங்கும் நிலையில் இருந்து எழுந்து நிற்கும் போதோ, உடல் புதிய நிலைக்கு ஏற்ப சரிசெய்ய முயற்சிக்கிறது. அந்த நேரத்தில், உடலுக்கு ரத்தத்தை மேல்நோக்கி தள்ளுவதும் மூளைக்கு ஆக்ஸிஜனை வழங்குவதும் அவசியம். உடல் அதைச் செய்யத் தவறினால், ரத்த அழுத்தம் குறையும். இதன் காரணமாக லேசான தலைவலி ஏற்படலாம்.
எப்படி பரிசோதிப்பது?
உங்களுக்கு இதன் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க, 10-15 நிமிடங்கள் படுத்துக் கொள்ளுங்கள். பிறகு ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு விகிதத்தை குறித்து வையுங்கள். 10-15 நிமிடத்திற்கு படுத்த பிறகு எழுந்து நிற்கவும். 2 மற்றும் 4 நிமிடங்களுக்குப் பிறகு இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு விகிதத்தை உடனடியாக அளவிடவும்.
அளவு நிலைகள்
ஒருவரின் ரத்த அழுத்தமானது 90/60mmHg மற்றும் 120/80mmHg இடையே இருந்தால் அது நார்மல் என்று அர்த்தம். அனால், இதுவே, 90/60 mmHg-க்கு கீழே இருந்தால், குறைந்த ரத்த அழுத்தம் என்று அறியப்படுகிறது. ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் நிலையம் ஒருவரின் ரத்த அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரின் இரத்த அழுத்தம் சிஸ்டாலிக் அழுத்தத்தில் 20mmHg மற்றும் டயஸ்டாலிக் அழுத்தத்தில் 10mmHg-க்கும் அதிகமாகக் குறைந்தால், அவருக்கு ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
மன ஆரோக்கியத்திற்கும் உடல் பருமனுக்கும் இடையே தொடர்பு உள்ளதா..!
அறிகுறிகள்
மிகக் குறைந்த ரத்த அழுத்தம், குமட்டல், தோரணையை மாற்றிய பின் அல்லது நீண்ட நேரம் நிற்கும் போது மயக்கம், மங்கலான பார்வை, திடீரென்று விழுதல், சோர்வு அல்லது பலவீனம், மயக்கம், லேசான வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள், இதய செயலிழப்பு மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற பல தீவிர நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
எப்படி தடுப்பது?
உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளி எப்போதும் அதிக திரவங்களை குடிப்பதன் மூலம் நீரேற்றமாக இருக்க முடியும். மற்றும் மது பழக்கத்தை கைவிடுவதாலும் இதன் பாதிப்பை தடுக்க முடியும். மேலும், உணவில் அதிக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்கவும். மேலும் எந்த நிலையில் இருந்தும் எழுந்து நிற்கும்போது, முதலில் சிறிது நேரம் உட்காருவதும், பிறகு எழுந்திருப்பதும் அவசியம். இதனால் உடல் தன்னை சரிசெய்து கொள்ள போதுமான நேரம் கிடைக்கும். குறிப்பாக கோடை அல்லது வெப்பமான காலநிலையில் அதிக உடற்பயிற்சி செய்யாதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Blood Pressure