• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தீபாவளி: நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

தீபாவளி: நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

எண்ணெய் குளியல்

எண்ணெய் குளியல்

நமது கலாசாரத்தில் சத்தான உணவு முறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, இதைத் தொடர்ந்து எண்ணெய்க் குளியலும் அடக்கம். ஆரோக்கியப் பிரச்சினையிலிருந்து உடலைப் பராமரிப்பதற்கு எண்ணெய்க் குளியல் சிறந்த முறையாகும்.

  • Share this:


    எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நம் பாரம்பரியக் குளியல் முறையே இன்று முற்றிலும் காணமல்போகும் நிலையில் இருக்கிறது. அதிகபட்சமாக ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியன்று மட்டும் எண்ணெய் குளியல் சம்பிரதாயமாக நடைபெறுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் எண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை ந குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது என்று வகுத்துள்ளனர். 

    எண்ணெய் குளியலின் அவசியம் என்ன?

    நமது உடலுக்கு எண்ணெய் சத்து என்பதும் அவசியமானது. முடி மற்றும் சருமம் இரண்டுக்கும் இயல்பிலேயே மிதமான கொழுப்பு மற்றும் எண்ணெய் சுரக்கும் தன்மை இருக்கிறது. இந்த இரண்டுமே நம் சருமத்தையும் கூந்தலையும் பாதுகாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன. இருப்பினும், வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

    பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

    எண்ணெய் குளியல் செய்ய சரியான நேரம் எது?

    எண்ணெய் குளியல் காலை 6.30 - க்குள் தொடங்கி விட வேண்டும். இதமான வென்நீரில் தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். சீயக்காய் அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும். எண்ணைக் குளியல் செய்த அன்று பாலுறவு கூடாது. பகலுறக்கம் கூடாது. கடுமையான வெய்யிலில் வேலை செய்யகூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக கூடாது.

    பலன்கள்

    எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நம்மைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் கோள்களிலிருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது. மேலும்  உடற்சூடு சீராகும், அழகுகூடும், சருமம் மென்மைபெரும், ஐம்புலனுக்கும் நல்ல பலன் கிடைக்கும், தலை முடி நன்கு வளரும், நல்ல குரல் வளம் கிடைக்கும், எலும்புகள் பலப்படும்.

    பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க சரியான நாள்

    ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.

    திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.

    செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்

    புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.

    வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.

    வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.

    சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.

    ஆண்களும் எண்ணெய் குளிப்பும்

    திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்.

    செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு கண்ட மாலை நோய் வரும்.

    வியாழக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.

    வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.

    இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் - அல்லது நினைக்கும் அன்பர்கள்

    சனி, புதன் நாட்களில் குளிக்கவும்.

    என்ன எண்ணெயை குளிக்கலாம்

    உடலில் தேய்ப்பதற்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களின் குளிர்மை சிலருக்கு ஒத்துவரவில்லை என்றால், மேற்படி எண்ணெயுடன் இரண்டு பூண்டு, ஒரு காய்ந்த மிளகாய், ஐந்து மிளகு சேர்த்து முப்பது விநாடி அடுப்பில் காய வைத்துத் தேய்த்துக் குளித்தால் குளிர்ச்சி குறைவாக இருக்கும். ரிஃபைண்டு ஆயில் வேண்டாம். சித்த மருத்துவர் ஆலோசனையுடன் நம் உடலுக்கு நலம் தரும் பிரத்யேக எண்ணெய்களையும் பயன்படுத்தலாம்.

    நீண்ட நாட்களாகவோ, ஆண்டுகளாகவோ எண்ணெய் குளியல் செய்யாதவர்கள் எண்ணெய் குளியல் செய்ய விரும்பும்போது ஆரம்பத்தில் சளி பிடித்தல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அதற்காகப் பயப்படத் தேவையில்லை. எண்ணெய் குளியலை முறையாகப் பின்பற்றினால், உடல் பழகிவிடும். மேற்கூறிய தொந்தரவுகள் விலகிவிடும்.

    மேலும் படிக்க... தீபாவளி பூஜைக்கு லட்சுமி சிலை வாங்க போரீங்களா?         

    Diwali 2021 : தீபாவளி அன்று விளக்கேற்றும்போது கவனிக்க வேண்டியவைகள் என்னென்ன?

    மேலும் படிக்க... தீபாவளி: லட்சுமி குபேர பூஜை செய்ய வழிமுறைகளும் நேரமும்!

    Diwali 2021: தீபாவளி எப்போது? கங்கா ஸ்நானம், பூஜை செய்யும் நேரம் குறித்த தகவல்கள்...   


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: