Home /News /lifestyle /

தீபாவளி புகை மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலை எப்படி பாதுகாப்பது..? உங்களுக்கான சில ஆலோசனைகள்

தீபாவளி புகை மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலை எப்படி பாதுகாப்பது..? உங்களுக்கான சில ஆலோசனைகள்

தீபாவளி புகை மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலை எப்படி பாதுகாப்பது..?

தீபாவளி புகை மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலை எப்படி பாதுகாப்பது..?

பட்டாசுகளால் வெளியிடப்படும் புகை மற்றும் மாசுபாடு ஆஸ்துமா நோயாளிகளின் நிலைமையை மோசமாக்குகிறது, இது  இருமல், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கலாம்.

தீபாவளி என்றாலே ஒளி, நெருப்புதான். அது மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியது என்றாலும் அதிலிருந்து வரும் புகை ஆபத்தானது. குறிப்பாக ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் கோளாறுகள் மற்றும் பிற சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு கடினமான விஷயம். பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் நச்சுப் புகையால் காற்றில் உள்ள துகள்களின் உள்ளடக்கம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதால், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

மேலும், பட்டாசுகள் வெளியிடும் நச்சுப் புகைகள், கோவிட்19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அதனால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அபாயத்தை அதிகரிக்கலாம். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு இறப்பு மற்றும் COVID19 - இன் அறிகுறிகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறுகிறது.

தொற்றுநோய் கட்டுப்பாடுகள் பட்டாசுகள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தினாலும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது போதாது. குறிப்பாக, கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான இந்தியர்கள் நீண்ட-கோவிட்19 நோய்க்குறியை அனுபவித்து வருகின்றனர். சுவாச பிரச்சனைகளின் மோசமான வடிவங்களுக்கு இது வழிவகுக்கும்.

பட்டாசுகளால் வெளியிடப்படும் புகை மற்றும் மாசுபாடு ஆஸ்துமா நோயாளிகளின் நிலைமையை மோசமாக்குகிறது, இது  இருமல், மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளை உண்டாக்கலாம்.

வாஷி-ஏ ஃபோர்டிஸ் நெட்வொர்க் மருத்துவமனையின் ஹிராநந்தனி இன்டர்னல் மெடிசின் இயக்குநர் டாக்டர் ஃபரா இங்கேல் ஆகிய இருவர் நுரையீரலை காற்று மாசுபாட்டிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த குறிப்புகளைப் இந்தியா.காம் இணையத்திற்குப் பகிர்ந்துள்ளார்.அவற்றில் சில உங்களுக்காக...நுரையீரலை பாதுகாக்க செய்ய வேண்டியவை :

 • வீட்டிற்குள் மெழுகுவர்த்திகள் மற்றும் விளக்குகள் ஏற்றுவதைத் தவிர்க்கவும். இதனால் உட்புற மாசுபாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்கும். துகள்களை வெளியிடாத, நிலையான LED விளக்குகளைப் பயன்படுத்தலாம்.

 • பட்டாசு வெடிக்கும் இடங்களைத் தவிர்க்கவும். பொதுவாக அதிலிருந்து தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளிப்படுகின்றன.

 • வெளியே செல்லும் போது முகமூடியை அணியுங்கள். மாசு எதிர்ப்பு முகமூடியைத் தேர்ந்தெடுக்கவும். இது புகை சுவாச அமைப்புக்குள் நுழைவதைத் தடுக்கும்.

 • மிகவும் மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தவிர்க்க, முடிந்தால், காற்றோட்டத்துடன் வீட்டிற்குள் இருக்க முயற்சி செய்யுங்கள்.
  பல பெரிய இந்திய நகரங்களில் உள்ள காற்றின் தரத்தை கருத்தில் கொண்டு, தற்போதைய சூழ்நிலையில் காற்று சுத்திகரிப்பு கருவிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அது இப்போது மட்டுமல்ல எப்போதும் உதவும். இந்த காற்று சுத்திகரிப்பாளர்கள் உட்புற காற்றிலிருந்து மாசுகள், நச்சுகள் மற்றும் ஒவ்வாமைகளை வடிகட்டுகின்றன.

 • சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் தங்கள் அவசர மருந்துகள், நெபுலைசர்கள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். தினமும் போடக்கூடிய மருந்து மாத்திரைகள் ஏதேனும் இருந்தால், தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

 • நீங்கள் ஆஸ்துமா அல்லது சுவாச நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மீட்பு இன்ஹேலரை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்.

 • நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய சத்தான உணவை உண்ணுங்கள். இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

 • நீரேற்றமாக இருக்கவும். அதிக அமிலத்தன்மையைத் தடுக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.

 • தொடர்ந்து இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் எவரும் மருத்துவரை அணுகுங்கள். மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Air pollution, Deepavali, Diwali festival, Festival, Lungs health

அடுத்த செய்தி