• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவது உயிரைப்பறிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும்: ஆய்வில் அதிர்ச்சி

அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவது உயிரைப்பறிக்கும் நோய்களுக்கு வழிவகுக்கும்: ஆய்வில் அதிர்ச்சி

Hotel Food | ஹோட்டல் உணவுகள்

Hotel Food | ஹோட்டல் உணவுகள்

வெளியில் சாப்பிடுவது, உடல் பருமன் மற்றும் நீரிழிவு மற்றும் பிற நாட்பட்ட நோய்களின் பயோமார்க்ஸ் போன்ற நோய்களுக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது.

  • Share this:
அடிக்கடி வெளியே சாப்பிடுவது இருதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்துடன் கணிசமாக தொடர்புடையது என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எல்சேவியர் வெளியிட்ட அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ் ஜர்னலில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சாப்பாடு என்பது உலகளவில் உள்ள அனைத்து மக்களுக்கும் பிடித்த ஒரு விஷயமாகும். ஆனால் சுகாதார விளைவுகளுடனான அதன் தொடர்பு குறித்து எந்தவிதமான ஆராய்ச்சிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் வெளியே சாப்பிடுவதற்கும் மரண ஆபத்துக்கும் இடையிலான தொடர்பை புலனாய்வாளர்கள் கண்காணித்தனர். மேலும் அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவது அனைத்து காரணிகளிலும் ஏற்படும் மரண ஆபத்துடன் தொடர்புடையது என்ற முடிவுக்கு வந்தனர். இதுதொடர்பான மேலும் பல விசாரணைக்கு இந்த ஆய்வு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் அமெரிக்க வேளாண் துறை மதிப்பிட்டுள்ளதாவது, வீட்டில் சமைத்து சாப்பிடாமல் தினசரி வெளியே கடைகளுக்கு சென்று சாப்பிடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 1977-1978 ஆம் ஆண்டில் 17 சதவீதத்திலிருந்து 2011-2012 ஆம் ஆண்டில் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில், உணவகங்களின் எண்ணிக்கையும் சீராக வளர்ந்துள்ளது. மேலும் உணவகம் சார்ந்த தொழில் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் எனவும் ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. சில உணவகங்கள் உயர்தர உணவுகளை வழங்கினாலும், வீட்டில் சமைக்கும் உணவுகளின் தரங்கள் எப்போதும் உயர்ந்தவை. குறிப்பாக கடைகளில் சாப்பிடும் துரித உணவுகள், பொதுவாக வீட்டில் சமைக்கப்படும் உணவுகளுடன் ஒப்பிடும்போது சத்து குறைவானதாகவே இருக்கும். கடைகளில் வாங்கி சாப்பிடும் உணவுகளில் ஆற்றல் அடர்த்தி, கொழுப்பு மற்றும் சோடியம் ஆகியவை அதிகமாக இருப்பதற்கான சான்றுகளும் எடுத்துக்காட்டப்படுகின்றன.



ஆனால் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து கொண்ட உணவு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பாதுகாப்பு ஊட்டச்சத்துக்களில் அவை மிகவும் குறைவாக உள்ளன. இதுகுறித்து தொற்றுநோயியல் துறையின் உதவி பேராசிரியரரும் முன்னணி புலனாய்வாளருமான வீ பாவோ கூறியதாவது, " வெளியில் சாப்பிடுவது, உடல் பருமன் மற்றும் நீரிழிவு மற்றும் பிற நாட்பட்ட நோய்களின் பயோமார்க்ஸ் போன்ற நோய்களுக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்பதற்கான சான்றுகள் இருப்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன" என்று கூறினார்.

இருப்பினும், வீட்டில் சமைத்து சாப்பிடாமல் வெளியில் உணவை உட்கொள்வதற்கும் இறப்பு அபாயத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றி அதிகம் அறியப்படவில்லை என்று பாவோ மேலும் கூறினார். 1999 முதல் 2014 வரை தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தேர்வுக் கணக்கெடுப்பில் பங்கேற்ற 20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய 35,084 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. மேலும் அவர்களின் உணவு நிர்வாகம் குறித்து பதிலளிக்கும்படி கேள்வித்தாள்களும் கொடுக்கப்பட்டன. அதில் பெறப்பட்ட பதில்களிலிருந்து தரவை ஆய்வாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். பதிலளித்தவர்கள் உணவகங்களில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுதல் உள்ளிட்ட உணவுப் பழக்கங்களைப் பற்றி பரவலாக குறிப்பிட்டுள்ளனர்.



இதுபற்றி தொற்றுநோயியல் துறை உறுப்பினர் எழுத்தாளர் யாங் டு கூறுகையில், "டிசம்பர் 31, 2015 வரை சேகரிக்கப்பட்ட இந்த பதிவுகளை இறப்பு பதிவுகளுடன் இணைத்தோம். குறிப்பாக பிற காரணங்களால் இறப்பு ஏற்படுவது, இருதய இறப்பு மற்றும் புற்றுநோய் இறப்பு ஆகியவற்றைப் ஆராய்ந்தோம்" என்று பேசினார். சுமார் 291,475 நபர்களைப் பின்தொடர்ந்ததில், 2,781 இறப்புகள் நிகழ்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதில் இருதய நோயால் 511 இறப்புகளும், புற்றுநோயால் 638 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கோடைகாலத்தில் தினமும் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் - ஏன் தெரியுமா?

மேலும், வயது, பாலினம், இனம், சமூக பொருளாதார நிலை, உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் உடல் நிறை குறியீட்டெண் ஆகியவற்றிற்கான சரிசெய்தலுக்குப் பிறகு, வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை அடிக்கடி சாப்பிட்ட பங்கேற்பாளர்களை ஒப்பிடும்போது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை எப்போதாவது சாப்பிட்டவர்களில் இறப்பு அபாய விகிதம் சற்று அதிகமாக இருந்தது. அதில் அனைத்து காரணங்களுக்கான இறப்பு 1.49% ஆக இருந்தது. இருதய இறப்பு 1.18% - ஆகவும், புற்றுநோய் இறப்பு 1.67% -ஆகவும் இருந்தது.



இதிலிருந்து வெளியில் தயாரிக்கப்பட்ட உணவை அடிக்கடி உட்கொள்வது அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்பு அபாயத்துடன் கணிசமாக தொடர்புடையது என்பதை ஆய்வுக் காட்டுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். வெளியே சாப்பிடுவதற்கும் இறப்புக்கும் இடையிலான தொடர்பை அளவிடுவதற்கான முதல் ஆய்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: