ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நெஞ்சு எரிச்சல்... வயிறு ஜீரணம் ஆகாத மாதிரியே இருக்கா..? இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க..!

நெஞ்சு எரிச்சல்... வயிறு ஜீரணம் ஆகாத மாதிரியே இருக்கா..? இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க..!

நார்ச்சத்து கொண்டது. இதனால் செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராது.

நார்ச்சத்து கொண்டது. இதனால் செரிமானம் சீராக இருக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராது.

”சிலர் அஜீரணமாக உள்ளது என்பதால் கொக்ககோலா, லெமன் சோடா, லிம்கா என அருந்துவார்கள் அது அஜீரணத்தை மேலும் அதிகரிக்கும்”

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சாப்பிடும் உணவை துகள்கள் போல் உடைப்பது உடலில் சுரக்கும் என்சைம் என்னும் அமிலம்தான். அது சரியாக சுராக்காத போதுதான் ஜீரண சக்தியை உடல் இழக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல், வயிற்று மந்தம்,  வாயுத் தொல்லை , வாந்தி, குமட்டல் , வயிற்றுப்போக்கு , மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடும்.

இதற்கு என்ன செய்யலாம்..?

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும்போது உணவை மிதமாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஏகப்பட்ட அயிட்டங்களை சாப்பிடாதீர்கள். அதேபோல் ஜீரணிக்கக் கூடிய உணவுகளாக சாப்பிட வேண்டும்.

எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் ?

கார்போ ஹைட்ரேட், புரோட்டீன் , ஃபைபர் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அதில் உணவை குழைத்து ஜீரணிக்க உதவும் என்சைம் அதிகம் உள்ளது. உதாரணத்திற்கு இஞ்சி, அன்னாசி பழம், வாழைப்பழம் , அவோகடா, தேன்,மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களில் என்சைம் இயற்கையாகவே உள்ளது.

அஜீரணமாக இருக்கும் சமயத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் அருந்துவதால் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை உடல் உறிஞ்சுவதற்கு உதவியாக இருக்கும். சிலர் அஜீரணமாக உள்ளது என்பதால் கொக்ககோலா, லெமன் சோடா, லிம்கா என அருந்துவார்கள் அது அஜீரணத்தை மேலும் அதிகரிக்கும்.

அதேபோல் சாப்பிட்டவுடன் உடனே படுக்கச் செல்லாதீர்கள். இது ஜீரண சக்தியை தடைசெய்யும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாந்தி போன்ற உபாதைகள் உண்டாகும்.

பார்க்க :

First published:

Tags: Health