ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த விஷயத்தை 10 வினாடிகள் கூட செய்ய முடியாவிட்டால் 10 ஆண்டுகளுக்குள் இறக்கும் அபாயம் : எச்சரிக்கும் ஆய்வு..!

இந்த விஷயத்தை 10 வினாடிகள் கூட செய்ய முடியாவிட்டால் 10 ஆண்டுகளுக்குள் இறக்கும் அபாயம் : எச்சரிக்கும் ஆய்வு..!

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம்

இந்த எளிய டெஸ்ட்டில் தோல்வியுறுபவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் எந்த காரணத்தினாலும் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல் ஆரோக்கியம் மற்றும் நம் ஆயுள் பற்றிய பல சிக்கலான ஆய்வுகள் பல விஷயங்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் சமீபத்திய புதிய மற்றும் மிக எளிமையான ஆய்வு ஒன்று நடுத்தர வயதுடையவர்களில் ஏற்படும் மரண அபாயம் பற்றி வெளிப்படுத்தி உள்ளது.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வில், நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட வினாடிகள் நிற்க முடியாவிட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறி இருக்கிறது.

என்னது, நிற்க முடியாவிட்டால் அது மரணத்தின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். இது 2 கால்களை பயன்படுத்தி சாதாரணமாக நிற்பதை பற்றியதல்ல. மாறாக ஒரு காலில் நிற்பதை பற்றியது.

ஆம், ஒற்றை காலில் 10 வினாடிகள் கூட நிற்க முடியாத நடுத்தர வயதுடையவர்கள் அல்லது முதியவர்கள் (குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்) அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயிரை இழக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. வயதான காலத்தில் ஒரு காலில் நிற்க இயலாமை, முன்கூட்டிய மரணத்தின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆய்வு சமநிலை மற்றும் இறப்புக்கு இடையிலான தொடர்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மேலும் இந்த எளிய மற்றும் பாதுகாப்பான பேலன்ஸ் டெஸ்ட்டானது வயதானவர்களுக்கான வழக்கமான சுகாதார சோதனைகளில் சேர்க்கப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏரோபிக் ஃபிட்னஸ், மசில் ஸ்ட்ரென்த் மற்றும் ஃபிளெக்ஸிபிலிட்டி போலல்லாமல் பேலன்ஸானது (ஒப்பீட்டளவில் விரைவாக குறைய தொடங்கும் வரை) ஒருவரின் 60 வயது வரை சரியாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

Also Read :  தூக்கம் சரியாக இல்லை எனில் இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் இருக்குமா..? மேம்படுத்தும் வழிகள் என்ன..?

இந்த எளிய டெஸ்ட்டில் தோல்வியுறுபவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் எந்த காரணத்தினாலும் இறக்கும் அபாயத்தை இரட்டிப்பாக்குவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த எளிய சோதனைக்குட்படுத்தப்பட்டவர்களில் ஆறில் ஒருவர் பத்தாண்டுகளுக்குள் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், 22 பேருக்கு ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர்.

சமீபத்திய இந்த ஆய்வில் பிப்ரவரி 2009 மற்றும் டிசம்பர் 2020-க்கு இடையில் 51 முதல் 75 வயது வரையிலான (சராசரி வயது 61) 1,700 பங்கேற்பாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். இதில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு (68%) ஆண்கள். அதே போல உறுதியான நடை கொண்டவர்கள் மட்டுமே சோதனையில் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களின் எடை, தோல் மடிப்பு தடிமன் மற்றும் இடுப்பு அளவு ஆகியவற்றின் பல அளவீடுகள் அளக்கப்பட்டது. இவர்களின் மருத்துவ வரலாறு குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டது.

பங்கேற்பாளர்கள் சப்போர்ட் இல்லாமல் கைகளை பக்கவாட்டில் வைத்தபடி 10 வினாடிகளுக்கு ஒற்றைக் காலில் நிற்க வேண்டும். ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு காலிலும் மூன்று முறை முயற்சி செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இந்த சோதனையில் ஐந்தில் ஒருவர் (20.5%) தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிவிட்டனர். மேலும் இந்த சதவீதம் வயதுக்கு ஏற்ப உயர்ந்தது. 51 முதல் 55 வரையிலானவர்களில், கிட்டத்தட்ட 5% பேர் சோதனையில் தோல்வியடைந்தனர். 56 முதல் 60 வயது வரையில் 8% பேரும், 61 முதல் 65 வயதுக்குள் இருப்பவர்களில் 18% பேரும் தோல்வியுற்றனர். மேலும் 66 முதல் 70 வயதுக்குள் மூவரில் ஒருவர் (37%) தோல்வியடைந்தனர்.

Also Read :  மன அழுத்தம் வாழ்க்கையிலிருந்து விடு பட நினைக்கிறீர்களா..? மகிழ்ச்சிக்கான வழிகள் இதோ...

71 முதல் 75 வயதிற்குட்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதில் வெற்றி பெறவில்லை. மேலும் இதில் 7 வருட கண்காணிப்பு காலத்தில் சுமார் 123 பேர் இறந்துவிட்டனர். அதே போல பொதுவாக, சோதனையில் தோல்வியுற்றவர்களுக்கு மோசமான ஆரோக்கியம் இருந்தது.

அதிக உடல் பருமன், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற ரத்த கொழுப்பு உள்ளிட்ட கோளாறுகள் இருந்தன. இருப்பினும் வயது, பாலினம் மற்றும் அடிப்படை நிலைமைகளைக் கணக்கிட்ட பிறகு இறுதியாக 10 வினாடிகள் கூட ஒற்றை காலில் நிற்கமுடியாதவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் இறப்பதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். முந்தைய ஆய்வுகள் 20 வினாடிகளுக்கு மேல் ஒரு காலில் நிற்க இயலாமை மைக்ரோபிளீட்ஸ் மற்றும் "அமைதியான" பக்கவாதம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக காட்டுவது குறிப்பிடத்தக்கது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Death, Health tips