Home /News /lifestyle /

நல்ல கொலஸ்ட்ராலுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலுக்கும் என்ன வித்தியாசம்..?

நல்ல கொலஸ்ட்ராலுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலுக்கும் என்ன வித்தியாசம்..?

நல்ல கொலஸ்ட்ராலுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலுக்கும் என்ன வித்தியாசம்..?

நல்ல கொலஸ்ட்ராலுக்கும் கெட்ட கொலஸ்ட்ராலுக்கும் என்ன வித்தியாசம்..?

உடற்பயிற்சி கொலஸ்ட்ராலில் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது உங்கள் உடலில் HDL கொழுப்பின் அளவை உயர்த்துகிறது, மேலும் இது LDL கொழுப்பைக் குறைக்கிறது. இது கரோனரி தமனி சுவர்களில் பிளேக் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

    கொலஸ்ட்ரால் என்பது ஒரு கொழுப்பு. இது உடலின் அனைத்து செல்களிலும் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். செரிமானத்திற்கு உதவும் ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய உங்கள் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. உடல் தனக்குத் தேவையான அனைத்து கொலஸ்ட்ராலையும் உற்பத்தி செய்கிறது.

    குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) மற்றும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) என்ற இரண்டு வகைகள் உள்ளன. HDL கொலஸ்ட்ரால் "நல்ல" கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது இரத்தத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது. LDL கொலஸ்ட்ரால் "கெட்ட" கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

    HDL கொழுப்பு

    உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது HDL இதய ஆரோக்கியத்திற்கு அவசியம். அதாவது, இந்த கொலஸ்ட்ராலில், அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளது. இதுவே உடலுக்குத் தேவை. உடலில் இருந்து கழிவுப்பொருட்களை வடிகட்ட கல்லீரலுக்கு நேரடியாகச் செல்வதே இதற்கான காரணமாகும்.
    எச்டிஎல் கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் சேரும் அதிகப்படியான கொலஸ்ட்ராலை நீக்கும் திறன் கொண்டது. இந்த கொலஸ்ட்ரால் உங்கள் தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. சுருக்கமாக, அவை மாரடைப்பு மற்றும் பிற உடல்நல அபாயங்களை ஓரளவு குறைக்க உதவுகின்றன.

    HDL அளவுகள் தோராயமாக 60 mg / dl அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும், மேலும் 40 mg / dl க்கும் குறையாமல் இருக்க வேண்டும். ஒருவரது உடலில் எச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவு அவரது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    பெண்களுக்கு குறைந்தபட்சம் 55 mg / dl இருக்க வேண்டும். ஆண்களுக்கு குறைந்தபட்சம் 45 mg / dl இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



    உங்கள் HDL கொழுப்பை எவ்வாறு உயர்த்துவது?

    உங்கள் HDL கொழுப்பு தேவையான அளவை விட குறைவாக இருந்தால், அதை அதிகரிக்க உங்கள் மருத்துவர் வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைக்கலாம்.

    சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) படி, சாச்சுரேட்டட் கொழுப்பு பால் பொருட்கள் உட்பட இறைச்சிகளிலும் காணப்படுகின்றன. மேலும் பல பதப்படுத்தப்பட்ட உணவுகள் உங்கள் எல்டிஎல் மற்றும் மொத்த கொழுப்பை அதிகரிக்கலாம். எனவே இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதே போல, டிரான்ஸ் கொழுப்புகள் சில நேரங்களில் துரித உணவுகள், ரொட்டிகள், குக்கீகள், கேக்குகள், சிப்ஸ் மற்றும் வறுத்த உணவுகளில் காணப்படுகின்றன. அவை உங்கள் HDL கொழுப்பைக் குறைக்கும். அதற்கு பதிலாக, பழங்கள், காய்கறிகள், கோழி, மீன், கொட்டைகள் மற்றும் தாவர எண்ணெய்கள் நிறைந்த உணவை AHA பரிந்துரைக்கிறது.

    ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிட ஏரோபிக் உடற்பயிற்சியை AHA பரிந்துரைக்கிறது. உடற்பயிற்சி கொலஸ்ட்ராலில் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது உங்கள் உடலில் HDL கொழுப்பின் அளவை உயர்த்துகிறது, மேலும் இது LDL கொழுப்பைக் குறைக்கிறது. இது கரோனரி தமனி சுவர்களில் பிளேக் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.

    உடலுக்கு அத்தியாவசியமான நல்ல கொலஸ்டிரால் பற்றி தெரியுமா..? எந்த உணவில் கிடைக்கிறது..?

    உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது முக்கியம். உயர் இரத்த சர்க்கரை அளவுகள் எல்டிஎல் கொழுப்பை உயர்த்தலாம், எச்டிஎல் கொழுப்பைக் குறைக்கலாம் மற்றும் தமனிப் புறணியை பலவீனப்படுத்தலாம்.
    புகைபிடிப்பதை நிறுத்துவது அதிக கொலஸ்ட்ராலைத் தடுக்க உதவும். புகை வெளியேற்றம் உங்கள் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்துகிறது மற்றும் பிளேக் கட்டமைக்க எளிதாக்குகிறது. புகைபிடித்தல் HDL கொழுப்பின் அளவையும் குறைக்கிறது.

    உடல் BMI 30 அல்லது அதற்கு மேல் இருப்பது அசாதாரண கொலஸ்ட்ரால் அதிக ஆபத்துடன் தொடர்புடையது.
    அதிக எடை அல்லது பருமனாக இருப்பவர்களுக்கும் மெட்டபாலிக் சிண்ட்ரோம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதாவது, அதிக கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம், உயர் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நிலைமைகளின் கலவையைக் கொண்டவர்கள் குறைந்த HDL அளவைக் கொண்டுள்ளனர்.

    மருந்து (பரிந்துரைக்கப்பட்டால்): எச்டிஎல் கொழுப்பை அதிகரிக்க மருத்துவர்கள் பொதுவாக மருந்துகளை பரிந்துரைப்பதில்லை என்றாலும், குறைந்த எச்டிஎல் மற்றும் அதிக எல்டிஎல் கொழுப்பு உள்ளவர்கள் எல்டிஎல்லைக் குறைக்கவும், எச்டிஎல்லை அதிகரிக்கவும் ஸ்டேடின்களை பரிந்துரைக்கலாம்.



    எல்டிஎல் கொழுப்பு

    எல்டிஎல் அல்லது குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் என்பது அதிக கொழுப்பு மற்றும் குறைந்த புரதம் கொண்ட ஒரு புரதமாகும். இதன் அளவை அதிகரிப்பது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த கொலஸ்ட்ரால்கள் நேரடியாக உங்கள் தமனிகளுக்குள் செல்கின்றன. அவை இரத்த நாளங்களில் பிளேகை உருவாக்கி இயற்கையான இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன. பெருந்தமனி தடிப்பு என்பது இதயத்தின் தமனிகளில் பிளேக் உருவாகும் ஒரு நிலை. இது இரத்த உறைவு மற்றும் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கிறது. உறைந்த இரத்தம் தமனிகளில் நுழைந்து அவற்றை அடைத்தால், அது திடீரென மாரடைப்புக்கு வழிவகுக்கும். இந்த வகை உறைவு உங்கள் மூளைக்கு இரத்த நாளங்கள் வழியாக சென்றால் பக்கவாதம் ஏற்படலாம்.

    எல்டிஎல் என்றால் என்ன? கெட்ட கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

    எல்டிஎல் கொலஸ்ட்ரால் உங்கள் உடலில் எவ்வளவு குறைவாக இருக்கிறதோ, அவ்வளவு சிறந்தது. மற்ற ஆபத்து காரணிகள் இல்லாவிட்டால், இதன் அளவு 130 ml / dL ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. மறுபுறம், வேறு நிபந்தனைகள் இருந்தால், LDL கொழுப்பின் அளவு 100 ml / dL ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.

    அதிக எல்டிஎல் கொழுப்பின் அபாயங்கள்

    உங்கள் உடலில் அதிக அளவு எல்டிஎல் கொலஸ்ட்ரால் இருப்பதால், இந்தப் பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது:

    · கரோனரி தமனி நோய்
    · புற தமனி நோய்
    · மார்பு வலி (ஆஞ்சினா) மற்றும் மாரடைப்பு
    · பக்கவாதம்



    அடுத்த 10 ஆண்டுகளில் உங்கள் பிரச்சனைகளை மதிப்பிடுவதற்கு மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் கால்குலேட்டரைப் பயன்படுத்துகின்றனர். கால்குலேட்டர் முக்கியமாக பின்வருவனவற்றைக் கருதுகிறது:

    · கொலஸ்ட்ரால் அளவு
    · வயது
    · இரத்த அழுத்தம்
    · புகைபிடித்தல்
    · உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்து

    உயர் LDL கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைப்பது?

    ஆரோக்கியமான உணவு: நிறைவுற்ற கொழுப்பு, கொலஸ்ட்ரால் அல்லது சர்க்கரை மற்றும் மாவு போன்ற எளிய கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள்.

    வழக்கமான உடற்பயிற்சி: உங்கள் இதயத்தை அதிக இரத்தத்தை பம்ப் செய்யும் பயிற்சிகளை செய்யுங்கள்

    எடையைக் குறைக்கவும்: தேவைக்கேற்ப உங்கள் எடையைக் குறைப்பது உங்கள் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தும்.

    புகைபிடிப்பதை நிறுத்துங்கள்: நிறுத்துவதில் சிரமம் இருந்தால், மருத்துவரை அணுகவும்.

    மருந்து: ஸ்டேடின்ஸ் போன்ற சில மருந்துகள் உங்கள் உடல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்வதைத் தடுக்க உதவுகின்றன. இது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து உங்கள் உடல் பெறும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Bad Cholesterol, Good Cholesterol

    அடுத்த செய்தி