நம்மில் பலரும் ஹார்ட் அட்டாக் என அழைக்கப்படும் மாரடைப்பு மற்றும் கார்டியாக் அரெஸ்ட் அழைக்கப்படும் இதய நின்று போவதும் ஒன்றுதான் என நினைத்து கொண்டிருக்கிறோம். உண்மையிலேயே மாரடைப்பு மற்றும் இதயம் நின்று போதல் ஆகியவை இரண்டும் வெவ்வேறானவை.
கார்டியோக் அரெஸ்ட் மூலம் இறப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதயம் நின்று போன பின் நமது உடலில் செல்லும் ரத்த ஓட்டம் முழுவதுமாக நிறுத்தப்படுகிறது. நான்கிலிருந்து ஆறு நிமிடங்கள் வரை மூளை இயங்கி, அதன் பின் மூளை இயங்குவதும் நின்று போகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளி உயிர்பிழைக்கும் வாய்ப்பானது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழிலிருந்து பத்து சதவீதம் வரை குறைந்து கொண்டே வரும்.
மாரடைப்பு ( Heart Attack):
நமது இதயம் சீராக இயங்குவதற்கு ரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. ரத்தத்தின் மூலம் தான் இதயம் இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவை ரத்தக் குழாய்களின் மூலம் நமது இதயத்திற்கு ரத்தத்தை கடத்துகின்றன. இவ்வாறு ரத்தத்தை கடத்தும் தமனிகளில் அடைப்புகள் ஏற்படும் போதோ, ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் போதோ இதயத்திற்கு ரத்தம் கடத்தப்படுவது தடுக்கப்படுகிறது. இவற்றை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கவில்லை எனில் அவை இதயத்தில் உள்ள தசைகளில் நிரந்தரமான பாதிப்புகளை உண்டாக்கக் கூடும். இவ்வாறு இதயத்திற்கு செல்லப்படும் ரத்த நாளங்கள் அடைபடுவதை தான் மாரடைப்பு என அழைக்கிறோம்.
இதயம் நின்று போதல் (Cardiac Arrest):
இதயம் துடிப்பது மொத்தமாக நின்று போவதையே கார்டியாக் அரெஸ்ட் என்று அழைக்கிறோம். இதனால் உடலுக்கு ரத்தத்தை அனுப்பும் செயல்முறை தடை செய்யப்பட்டு, உடலில் ஒட்டுமொத்த உறுப்புகளும் உடனடியாக தங்களது இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன முக்கியமாக மூளையும் இதனால் தனது செயல்முறையை நிறுத்தி விடுகின்றது. உடனடியாக நோயாளி தனது நினைவை இழந்து, சில மணித்துளிகளிலேயே உயிரிழந்து விடுவார். இவ்வாறு உடனடியாக இதயம் நின்று போவதற்கு பலவித காரணங்கள் இருக்கின்றன.
கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன..?
இதய துடிப்பு சீரற்று இருப்பதே இந்த திடீர் கார்டியாக்கரஸ்ட் பிரச்சனைக்கு காரணமாக கூறப்படுகிறது. இது வென்றிகுலர் பைப்பிரிலியேஷன் என அழைக்கப்படுகிறது. சாதாரணமாக லேசான மின் தூண்டுதல்கள் இதயத்தின் அறைகள் முழுவதும் பரவி இதயத்தை சுருங்கி விரிய செய்கிறது. இதன் மூலமே இதயத்தில் இருந்து உடல் முழுவதும் உள்ள உறுப்புகளுக்கு ரத்தமானது பம்ப் செய்யப்படுகிறது. சில சமயங்களில் இவ்வாறு தூண்டப்படும் மின் தூண்டுதல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, அவை சீரற்ற இதயத் துடிப்பிற்கு வழி வகுக்கின்றன. இதனால் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புகள் உண்டு.
Also Read : படபடப்பு, தலைசுற்றல், நெஞ்சுவலி இருக்கா..? அசால்டா இருக்காதீங்க.. இதய நோய் அறிகுறியாக இருக்கலாம்..!
இதை தவிர தமணிகளில் உண்டாகும் அடைப்புகளினாலும் இதயம் நின்று போகும் அபாயம் உள்ளது. பொதுவாக மாரடைப்புகளை இந்த கொரோனரி ஆர்டரி டிசீஸ் என்பது தமணிகளின் பாதிப்பால் உண்டாகிறது. ஆனால் உன்னிப்பாக ஆராய்ந்து பார்க்கையில் இவை இரண்டும் வெவ்வேறானவை. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படலாம்.
இந்தியர்களிடையே அதிகரிக்கும் கார்டியாக் அரெஸ்ட்:
சமீப காலமாக இந்தியர்களிடையே கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் அபாயமானது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் உலக சுகாதார மையம் அளித்த அறிக்கை படி ஒரு லட்சத்தில், 4280 பேர் கார்டியாக் அரெஸ்டினால் உயிரிழக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
முதல் உதவி:
இதயம் நின்று போய் மயக்கம் நிலையில் இருக்கும் ஒருவருக்கு மருத்துவ உதவி வரும் வரை காத்திருக்க முடியாது. அவருக்கு உடனடியாக முதலுதவி செய்வதன் மூலம் உயிர் பிழைக்கும் வாய்ப்பை நம்மால் அதிகரிக்க முடியும். இந்த முதலுதவியை BLS (Basic Life Support) என அழைக்கின்றனர்.
அதாவது முதலில் ஒருவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டவுடன் அங்கிருக்கும் சூழலை கவனிக்க வேண்டும். அந்த இடம் அவருக்கு முதலுதவி அளிக்க பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும் இல்லை எனில் அவரை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த வேண்டும்.
பிறகு உடனடியாக மருத்துவ உதவி வேண்டி தகவல் அளிக்க வேண்டும்.
அடுத்ததாக நோயாளியின் சுவாசம் மற்றும் நாடி ஆகியவற்றை சோதனை செய்ய வேண்டும். சுவாசம் சீராக நடைபெறுகிறதா என்பதை மார்பகத்தின் இயக்கத்தை வைத்தும், நாடியை கழுத்திலோ அல்லது மணிக்கட்டின் மூலமோ சரி பார்க்க முடியும். இவை அனைத்திற்கும் பத்து நொடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
சுவாசமும் நாடித்துடிப்பும் இல்லையெனில் நோயாளிக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். முப்பது முறை அழுத்தத்திற்கு இரண்டு முறை சுவாசம் என்று விகிதத்தில் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சிபிஆர் சிகிச்சை மூலம் மருத்துவ உதவி வரும் வரை நோயாளியை நம்மால் உயிருடன் வைத்திருக்க முயற்சி செய்ய முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cardiac Arrest, Heart attack, Heart disease, Heart Failure