ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Egg Freezing : கருமுட்டையை உறைய வைக்கும் முறை பற்றி தெரியுமா..? யாரெல்லாம் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்..?

Egg Freezing : கருமுட்டையை உறைய வைக்கும் முறை பற்றி தெரியுமா..? யாரெல்லாம் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்..?

கருமுட்டையை உறைய வைக்கும் முறை

கருமுட்டையை உறைய வைக்கும் முறை

கருமுட்டைகளை நீண்ட நாட்களுக்கு உறைய வைத்து பாதுகாக்கும் இந்த முறை அறிவியலில் ஊசைட் ஃபிரீசிங்(oocyte Freezing) என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு பின்பு உறைநிலையில் வைக்கப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மருத்துவம், அறிவியலும் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில், கருத்தரிக்கும் முறையில் பல்வேறு விதமான சிகிச்சை முறைகளும் புதிய தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன. கருமுட்டைகளை வெளியே எடுத்து, உறைய வைத்து சேகரித்து பின்பு விரும்பும் நேரத்தில் கரு முட்டைகளை கருத்தரிக்க உதவும் எக் ஃபிரீசிங் என்னும் கருத்தரிக்கும் முறை குழந்தை பெற விரும்பும் பல தம்பதிகளுக்கு வர பிரசாதமாக அமைத்துள்ளது.

வளர்ந்து வரும் அறிவியல் முறைகளினாலும் மருத்துவ முறைகளினாலும் கருத்தரிக்கும் முறைகளில் புதிய புரட்சிகள் ஏற்பட்டு விதம் விதமான கருத்தரிக்கும் சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. பெண்கள் கருத்தரிக்கும் விகிதத்தை அதிகரிப்பதற்காக கருமுட்டைகளுக்கான மருந்துகள், ஹார்மோனுக்கான மருந்துகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் ஐவிஎஃப் எனப்படும் விட்ரோ கருத்தரிப்பு முறையும் அதிக அளவில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

இவற்றில் இன்னும் வித்தியாசமான புதுமையான முறையில் கருத்தரித்தலை அதிகரிக்கும் விதமாக, சமீப காலங்களில் கருமுட்டையை உறைய வைத்து சேகரிக்கும் எக்ஃப்ரீசிங் என்னும் முறை வழக்கத்திற்கு வந்துள்ளது. இருபதிலிருந்து முப்பது வயதிற்குட்பட்ட ஒரு பெண் பல்வேறு காரணங்களுக்காகவும், தங்களது வாழ்க்கை மற்றும் குழந்தை பேறு கருதியும் தன்னுடைய கருமுட்டையை வெளியே எடுத்து, உறைய வைத்து நீண்ட காலத்திற்கு பாதுகாக்கும் இந்த முறையை கருமுட்டை உறைய வைத்தல்(Egg freezing) என அழைக்கப்படுகிறது.

மருத்துவ காரணங்களுக்காக கருமுட்டை உறைய வைத்தல் (Clinical Egg freezing)

கருமுட்டைகளை நீண்ட நாட்களுக்கு உறைய வைத்து பாதுகாக்கும் இந்த முறை அறிவியலில் ஊசைட் ஃபிரீசிங்(oocyte Freezing) என அழைக்கப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு பின்பு உறைநிலையில் வைக்கப்படுகின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் கருத்தரிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களினாலும் கூட ஏற்கனவே சேகரித்து வைத்து தன்னுடைய கருமுட்டையை நவீன மருத்துவ அறிவியல் முறையில் கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

இந்த முறையை சாத்தியமாக்க பல ஆண்டுகள் கடினமாக முயற்சிசெய்து, பல ஆராய்சிகளை மேற்கொண்டு அதன் பின்பே நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், மிக நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இந்த கருமுட்டை உறைய வைத்தல் செய்யப்படுவதாகவும் பிர்லா பெர்டிலிட்டி மற்றும் ஐவிஎஃப் இன் கன்சல்டன்ட் டாக்டர் சவுரன் பட்டாச்சார்ஜி தெரிவித்துள்ளார்.

Also Read : ஹீல்ஸ் அணிவதால் என்னென்ன தீமைகள் ஏற்படும்..? 

மக்கள் பல்வேறு காரணங்களுக்காக “எக் ஃப்ரீசிங்” எனப்படும் கருமுட்டை உறையவைத்தல் முறையை விரும்புகின்றனர். உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் பெண்களுக்கும், உடல் நலத்தில் ஏதேனும் குறைபாடோ அல்லது இளவயது வாழ்க்கையை நன்றாக அனுபவித்துவிட்டு நடுத்தர வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் மக்களுக்கு இந்த கருமுட்டை சேகரிப்பு முறை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சேமித்து வைக்கப்படும் இந்த கருமுட்டை இயற்கையாக உருவாகும் கருமுட்டையை போலவே அதே தரத்துடன் இருக்கும் எனவும், 10 வருடங்கள் வரை இதனை சேமித்து வைக்க முடியும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் எதற்காக இந்த கருமுட்டையை உறைய வைத்து சேகரிக்கும் முறையில் கருத்தரிக்கலாம் என்பதற்கான காரணங்களை டாக்டர் பட்டாச்சார்ஜி கூறியுள்ளார். பெண்ணிற்கு புற்றுநோயோ அல்லது புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த கருமுட்டை உறைய வைக்கும் முறையில் முறையில் தன்னுடைய கருமுட்டையை சேமித்து வைக்கலாம். ஏனெனில் புற்று நோய்க்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் கீமோதெரபி மற்றும் ரேடியோ தெரபி ஆகிய சிகிச்சை முறைகள் பெண்ணின் கருப்பையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது அவர்கள் கருத்தரிப்பதில் ஏதேனும் பிரச்சினையை உண்டாக்கலாம்.

எனவே புற்று நோய்க்கான சிகிச்சை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அந்த பெண்ணினுடைய கருப்பையில் இருந்து கருமுட்டையை எடுத்து, ஆய்வகத்தில் சேமித்து வைத்து விட வேண்டும். எதிர்காலத்தில் புற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த பின்பு அல்லது தாம் விரும்பும் நேரத்திலும் கருமுட்டையை கருத்தரிக்க வைத்து குழந்தை பெற்று கொள்ள முடியும்.

Also Read : டீ சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா..? டீ குடிப்பதற்கு பின் இருக்கும் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

கருத்தரிக்க விரும்பும் பெண் ஐவிஎஃப் எனப்படும் முறையில் குழந்தை பெற விரும்பினால், இந்த கருமுட்டை உறைய வைத்து சேமிக்கும் முறையைபயன்படுத்தி கொள்ளலாம். தன்னுடைய ஆண் துணையிடம் சரியான அளவிலோ அல்லது தரமான உயிரணுக்கள் இல்லையென்றாலோ பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டையை சேமித்து வைத்துக்கொண்டு பிறகு ஆய்வகத்தில் பரிசோதனை செய்து தரமுள்ள உயிரணுக்களை கருமுட்டையில் செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும். கருத்தரிக்க வைக்கப்பட்ட முட்டையை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி இயற்கையான முறையில் குழந்தை பெற வைக்க முடியும்.

சமூக காரணங்களுக்காக கருமுட்டை உறைய வைக்கும் முறை:

மருத்துவ காரணங்கள் மட்டுமின்றி வாழ்வியல் ரீதியாகவும் பிற சமூக காரணங்களுக்காகவும் சிலர் கருமுட்டையை சேமித்து வைத்து விரும்புவர். உதாரணத்திற்கு தன்னுடைய தொழிலில் நன்றாக முன்னேற்றம் அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும், இளம் வயது வாழ்க்கை நன்றாக அனுபவித்து பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களும் அல்லது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகு நிதி ரீதியாக வலிமையான நிலையை அடைந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பவர்களுக்கும் இந்த கருமுட்டையை சேமித்து வைக்கும் முறையை பின்பற்றலாம்.

அவர்களின் கருப்பையில் இருந்து சேமித்து வைக்கப்படும் கருமுட்டை பின்வரும் காலங்களில் அவர்கள் விரும்பும் நேரத்தில் கருவூட்டல் செய்யப்பட்டு, அந்தப் பெண் விரும்பினால் மீண்டும் அவர்களுடைய கருப்பைக்குள்ளேயே செலுத்தி குழந்தை பெற்று கொள்ள முடியும்.

Also Read :  மஞ்சள் கலந்த தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் பற்றி தெரியுமா.?

மேற்கூறிய இந்த கருமுட்டையை உறைய வைத்து, விரும்பும் நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் முதலில் உடல் தகுதிகள் தங்களுக்கு உள்ளனவா என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த எக் ஃப்ரீசிங் முறையை செய்வதற்கு வயது ஒரு முக்கிய காரணியாக அமைகிறது. ஏனெனில் இளம் வயதில் தரமான கரு முட்டைகள் உருவாக்கம் செய்யப்படுகின்றன.

எனவே இந்த முறையில் குழந்தை பெற விரும்பும் தம்பதிகள் ஏதேனும் ஐவிஎஃப் கிளினிக்கை அணுகி அவர்கள் சொல்லும்படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி எக்ஃப்ரீசிங் செய்வதற்கு தங்களுக்கு தகுதி உள்ளதா அதற்கான வயது உள்ளதா மேலும் கருமுட்டை வெளியே எடுத்து சேமிக்கும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்குமா போன்றவற்றை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அப்பொழுதுதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும். எதற்காக தம்பதிகளிடம் இந்த முறையை பின்பற்ற விரும்புகிறார்கள் என்ற விசாரணை, ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் கவுன்சிலிங் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த கருமுட்டையை உறைய வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் முறை பற்றி பல்வேறு தவறான கருத்துக்கள் மக்களிடம் பரவியுள்ளது. இப்படி ஆய்வகத்திலோ அல்லது கருமுட்டை வெளியே எடுத்து அதன் பிறகு கருவூட்டப்பட்டு பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்காது என்பது போன்ற கருத்துக்கள் மக்களிடையே நிலவி வருகின்றன. இவை மிகவும் தவறானதும் உண்மைக்கு புறம்பானதும் ஆகும். மேலும் கருமுட்டை உறைய வைக்கும் போது அவை சேதம் அடையலாம் அல்லது மற்றும் அதன் தரத்தில் குறைபாடு ஏற்படலாம் என்பது போன்ற கருத்துக்களும் பரவி வருகின்றன.

இவை அனைத்துமே பொய்யான தகவல்கள். இவை எதையும் நம்ப வேண்டாம். மேலும் இப்படி கருமுட்டையை உறைய வைத்து சேமிக்கும் முறையை பின்பற்றுவதற்கு, உங்களுக்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும் அல்லது பார்ட்னர் இருந்தால்தான் இந்த முறை பின்பற்ற முடியும் என்பது போன்ற விதிமுறைகள் எல்லாம் கிடையாது. நீங்கள் எப்போது விரும்பினாலும் உங்களது கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என டாக்டர் பட்டார்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக காரணங்களுக்காக எக் ஃப்ரீசிங் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் எந்த வயதிலும் இதனை செய்யலாம் அல்லது எந்த உடல் ரீதியான காரணங்களும் இதனை பாதிக்காது என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். உண்மையில் இது தவறான ஒன்று. பெண்களில் இருந்து பெறப்படும் கருமுட்டையானது அவர்களின் வயது மற்றும் உடல் நிலையை பொறுத்து கருமுட்டையின் தரமும் மாறுபடும். எனவே இப்படி கருமுட்டை சேகரிக்க விரும்பும் பெண்கள் இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைத்து சேமித்து வைக்க வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Fertility possibilities, Pregnancy