• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சத்து மாத்திரைகள் பலன் அளிக்குமா..? எப்போது சாப்பிட வேண்டும்..?

ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சத்து மாத்திரைகள் பலன் அளிக்குமா..? எப்போது சாப்பிட வேண்டும்..?

 சத்துமாத்திரைகள்

சத்துமாத்திரைகள்

சப்ளிமெண்ட்ஸ் மிகப்பெரிய தொழில்துறையை உருவாக்கியுள்ளது. எனவே சில நேரங்களில் இவை மிகவும் தந்திரமானதாக தோன்றலாம்.

  • Share this:
சந்தையில் பல விதமான டயட்டரி சப்ளிமென்ட்டுகள் உள்ளன. டயட்டரி சப்ளிமென்ட் என்பது, உணவில் நமக்கு ஊட்டச்சத்து கிடைக்காத பட்சத்தில், எடுத்துக்கொள்ளும் இந்த சப்ளிமேன்ட்கள், உண்மையிலேயே நமக்குத் தேவையா? இவை பலன் அளிக்குமா? நம் ஊட்டச்சத்து குறைப்பாடு அல்லது தேவையை நிறைவேற்றுமா என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

சப்ளிமெண்ட்ஸ் என்பதே கொஞ்சம் குழப்பமாக இருக்கக்கூடும். பெயருக்கு ஏற்றது போல, சப்ளிமென்ட் என்பது ‘மாற்று’ என்று அர்த்தம் வழங்குகிறது. உணவுக்கு பதிலாக, உணவில் கிடைக்காத சத்துக்கு பதிலாக, சப்ளிமென்ட்ஸ் பயன்படுத்தப்படுகிறது. எளிதாக சொல்லவேண்டுமானால், சத்துமாத்திரைகள் என்று கூறலாம். இந்த மாத்திரைகள் உண்மையிலேயே உடலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது? எப்படி வேலை செய்கிறது? என பல கேள்விகள் உள்ளது.

சப்ளிமெண்ட்ஸ் மிகப்பெரிய தொழில்துறையை உருவாக்கியுள்ளது. எனவே சில நேரங்களில் இவை மிகவும் தந்திரமானதாக தோன்றலாம். எனவே, பெரும்பாலும், யாரேனும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பிராண்டு அல்லது ஒரு குறிப்பிட்ட சப்ளிமென்ட்டை மிகவும் பாராட்டி, அதன் பயன்களை எண்டார்ஸ் செய்வதை, அந்த சப்ளிமென்ட் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்ற கதைகளை எல்லாம் நீங்கள் கேட்டிருக்கலாம். இதிலே, எது உண்மை, மற்றும் கற்பனைகதை என்பதை பிரித்து பார்க்க பார்க்கலாம்.



நாம் இந்த மாத்திரைகளை பயன்படுத்த வேண்டுமா?

பல்வேறு நபர்களிடம் இருந்து நாம் பொதுவாக மற்றும் அடிக்கடி கேட்கும் ஒரு முக்கியமான விஷயம், உடலுக்கு தேவையான அனைத்தும் நம் உணவிலேயே கிடைக்கிறதா என்பது ஆகும். உணவுகள் நம்முடைய பெரும்பாலான ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்தாலும், அது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இயங்குகிறது.

உதாரணமாக, உங்கள் உணவுமுறை, உணவு வகைகள், உங்கள் நோய் அறிகுறிகள், மருத்துவ வரலாறு மற்றும் தற்போதைய உடல் நிலை, போன்றவை உணவு மட்டும் போதுமா என்பதை முடிவு செய்கிறது.

உங்களின் தற்போதைய உணவுப்பழக்கம், அழற்சி ஏற்படுத்தக் கூடியதாகவும், கட்டுப்பாடு நிறைந்ததாகவும், போதுமானதாக இல்லாமலும் இருந்தால், நீங்கள் உடலில் சத்து இல்லாமல் போக வாய்ப்புள்ளது. அந்த சூழ்நிலையில், உங்களுக்கு சப்ளிமென்ட்கள் உதவி தேவைப்படும். ஆனால், ஒரு மோசமான உணவுப்பழக்கத்தை சரி செய்ய நீங்கள் சப்ளிமென்ட்கள் பயன்படுத்தக்கூடாது.

உங்களுக்கு பல்வேறு நோய் அறிகுறிகள் அல்லது சத்து குறைபாடு அறிகுறிகள் காணப்பட்டால், தானே உடலை சரி செய்யும் அளவுக்கு, உங்கள் உடலுக்கு சரியான மற்றும் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை என்பது உறுதியாகிறது. உங்கள் உடலின் சில அமைப்புகள் போதிய அளவு செயல்படவில்லை என்றால், உங்களுக்கு குறிப்பிட்ட சப்ளிமென்ட்டுகள் தேவைப்படலாம்.



ஆரோக்கியம் மேம்பட சப்ளிமென்ட்களை உட்கொள்ளலாமா?

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் உணவுக் கட்டுபாட்டில் இருந்தால், மற்றும் சத்து குறைபாடு அல்லது நோய் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, கூடுதல் சப்ளிமென்ட்கள் உட்கொள்ள வேண்டும். மேலும், அடிப்படை செயல்பாடுகளில் உங்கள் உடல் அமைப்பு சிரமப்பட்டால், அடிப்படை சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வது, உங்கள் உடல் செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக மாற்றுகிறது.

இரத்த அழுத்தம் முதல் கேன்சர் வரை..நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் வரும் ஆபத்துகள்..!

எந்த சூழலில் சப்ளிமென்ட்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான சில வரையறைகள் :

வலைத்தளங்கள், கட்டுரைகள், தெரிந்தவர்களின் பரிந்துரைகள், புத்தகங்கள் அல்லது இன்ஃப்ளூயன்சர்கள் என்று நீங்கள் சப்ளிமென்ட்கள் பற்றி தெரிந்து கொள்ளும் போதெல்லாம், அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கூடுதல் சப்ளிமென்ட்கள் என்று உங்கள் அடுக்கிக்கொண்டே செல்லக் கூடாது. சப்ளிமென்ட்களை உடலுக்கு ஏற்றது போல மாற்றுவதில் கல்லீரிலின் பங்கு முக்கியமானது. இதனால், உங்கள் கல்லீரல் பாதிக்கலாம்.

உங்களுக்கு ஆரோக்கியத்தில் குறிப்பிட்ட பிரச்சனைகள் அல்லது உடல்நலக் குறைபாடு இருந்து, அதை உங்கள் உணவுப்பழக்கத்தால் சரிசெய்ய முடியாமல் போகும் போது, சப்ளிமென்ட்களை, மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்துவதில் தயக்கம் வேண்டாம். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் சப்ளிமென்ட்கள் ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.



சமீபத்தில், கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கும் மேலாக, அடிக்கடி மனநிலை மாற்றம் (mood swings), மற்றும் பதற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு ஆலோசனை வழங்கும் போது, அவர் உணவில் இருந்தே போதிய சத்துகளை பெற முடியும் என்று நினைத்திருந்தார். மேலும், அவர் நியூட்ரியன்ட்கள் மேல் ஏதோ வெறுப்பு கொண்டிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டது. இந்த சூழலில், அவருக்கு பதற்றம் நீங்க மருந்து கொடுப்பதற்கு முன்பு, போதிய ஊட்டச்சத்துகளை அவர் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

வைட்டமின் பி12, இரும்புச்சத்து, ஒமேகா -3 மற்றும் D3 உள்ளிட்ட பல சத்து குறைபாடுகள் அனைத்தும் பதற்றத்தின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். உங்கள் உடலில், ஃபேட்டி லிவர் (கல்லீரல் நோய், fatty liver) போன்ற அறிகுறிகள் இருந்து, அதனால் உடல் அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்றால், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த, உங்களுக்கு சப்ளிமென்ட்கள் தேவைப்படலாம். ஆனால், பொதுவான தகவல்களைப் படித்து, அதன் விளைவுகள் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்துவது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்.

என்ன தேவை என்பது அறிந்து, உங்கள் உடலுக்கு ஏற்றவாறு வேலை செய்யக்கூடிய சரியான கலவையை உருவாக்கக்கூடிய ஒரு சப்ளிமென்ட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் நீங்களே சப்ளிமென்ட் வாங்கி பயன்படுத்தத் தொடங்கினால், ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படும். மேலும், நீங்கள் அதிக கலோரிகள் நிறைந்த, அதிக சர்க்கரை சேர்க்கப்பட்ட, டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் போது, மிகச்சிறப்பாக செயல்படும், மிகவும் விலையுயர்ந்த சப்ளிமென்ட்கள் கூட உங்களுக்கு பலனளிக்காமல், உடல் உறுப்புகளை பாதிக்கலாம்.



அடிப்படை சப்ளிமென்ட்கள் :

ஒரு நல்ல மல்டிவைட்டமின் சப்ளிமென்ட்டை கண்டறிவது சுலபமில்லை. ஃபோலிக் ஆசிட், சைனோகொபாலமைன், ஆகிய இரண்டும் இருக்கக் கூடாது. ஆனால், அதற்கு பதிலாக, மெத்தில் ஃபோலேட் மற்றும் மெத்தில்கொபாலமைன் கண்டிப்பாக இருக்க வேண்டும். நல்ல மல்டிவைட்டமின்கள் GMO இல்லாத பொருட்களைபயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும், க்ளுட்டம், டெய்ரி, சர்க்கரை, சோளம், சோயா ஆகிய பொருட்களை சேர்க்கக் கூடாது. மேலும், ஹைப்போ அலர்ஜெனிக் என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பலரும் பயன்படுத்தும் மிகவும் பொதுவான சப்ளிமென்ட், கால்சியம் சப்ளிமென்ட்கள். இது சில நேரங்களில் அபாயகரமானது என்பதையே பலரும் உணராமல் பயன்படுத்தி வருகின்றனர். கால்சியம் உடலின் இரும்புச்சத்து கிரகிப்புத் தன்மையை பாதித்து, இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தலாம். கால்சியம் சப்ளிமென்ட் உட்கொள்ளும் போது, உடன் மெக்னீஷியம் மற்றும் D3 ஆகிய இரண்டையும் உட்கொள்ள வேண்டும்.

உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கு பலம் தரக்கூடிய பிரதான சத்து, வைட்டமின் சி. வைரஸ், பேக்டீரியா உட்பட அனைத்து நுன்கிருமிகளிடமிருந்தும் உங்கள் உடலை. வெள்ளை அணுக்களை பாதுகாக்கிறது.

வைட்டமின் டி சப்ளிமென்ட் உங்களுக்கு கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதை அறியாமலே, பலர் இதை பயன்படுத்தி வருகிறார்கள்.

எனவே, சப்ளிமென்ட்கள் பயன்பாடு என்று வரும் பொழுது, நீங்களே முடிவு செய்யக்கூடாது. உடலின் சில பகுதிகள் மற்றும் அமைப்புகள், உள்ளிட்டவற்றின் செயல்பாடு, நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் அலல்து ஊட்டச்சத்து ஆலோசர்களால் மட்டுமே மதிப்பிட முடியும். நீங்களே அடிப்படை சப்ளிமென்ட்கள் பயன்படுத்தினால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: