முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொரோனாவிற்குப் பின் உண்டாகும் சோர்வை சரிசெய்ய புரோட்டீன் உணவு உட்கொள்வது அவசியம்..!

கொரோனாவிற்குப் பின் உண்டாகும் சோர்வை சரிசெய்ய புரோட்டீன் உணவு உட்கொள்வது அவசியம்..!

பசிக்காமல் மந்தமாக இருப்பது குறித்து நமக்கு தெரியும். ஆனால் உப்புசத்தால் ஏற்படும் கோளாறுகளை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல், வாய்வு தொல்லை, சாப்பிட்டதும் ஏற்படும் ஒருவித அசௌகர்ய உணர்வு, வயிற்று இரைச்சல், வயிற்றுப்பிடிப்பு, குமட்டல் உள்ளிட்டவை உப்புசத்தால் ஏற்படுகின்றன. இப்போது பண்டிகை கால பதார்த்தங்களை சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுககளில் இருந்து மீள ருஜுதா திவேகர் கூறி இருக்கும் வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

பசிக்காமல் மந்தமாக இருப்பது குறித்து நமக்கு தெரியும். ஆனால் உப்புசத்தால் ஏற்படும் கோளாறுகளை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். வயிறு அல்லது அடிவயிறு வீங்குதல், வாய்வு தொல்லை, சாப்பிட்டதும் ஏற்படும் ஒருவித அசௌகர்ய உணர்வு, வயிற்று இரைச்சல், வயிற்றுப்பிடிப்பு, குமட்டல் உள்ளிட்டவை உப்புசத்தால் ஏற்படுகின்றன. இப்போது பண்டிகை கால பதார்த்தங்களை சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுககளில் இருந்து மீள ருஜுதா திவேகர் கூறி இருக்கும் வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு உந்துதலாக இருப்பது புரத உணவுகள் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைய உயர் புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடல் சுகாதாரத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் குறித்தும், மேலும் வைரஸால் ஏற்படும் சில இணைப்பு நோய்கள் குறித்தும் புரிந்துகொள்ள இன்னும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட சிலர் மற்றும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலர் கடுமையான முடி உதிர்தல், சோர்வு, மோசமான தூக்கம், மற்றும் ஹார்மோன் சீர்குலைவு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் சில ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, கொரோனாவால் பாதித்த ஒருசிலர் வெகு விரைவாக குணமடைந்து விடுகின்றனர். ஆனால் சிலரோ நீண்ட நாட்களுக்கு சிகிச்சை எடுத்து வருவதையும் நாம் காண்கிறோம்.

இத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது நமது நோய் எதிர்ப்பு மண்டலம் தான். ஒருவரின் நோய் எதிர்ப்பு திறன் காரணமாகவே சிலர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு எந்த எதிர்வினைகளையும் சந்திப்பதில்லை. அதேபோல, கொரோனா பாதிப்பில் இருந்து சீக்கிரம் குணமடைந்து விடுகின்றனர். அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒரு உந்துதலாக இருப்பது புரத உணவுகள் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் குணமடைய உயர் புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

கொரோனா விஷயத்தில் புரத உணவுகளின் பங்கு என்ன?

எந்த ஒரு நோயினாலும் பாதிக்கப்பட்ட குணமடைய, ஒருவர் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருக்க வேண்டும். வைரஸில் இருந்து குணமடைந்த ஒருவர் தனது நோயெதிர்ப்பு மண்டலத்தை மீண்டும் பலப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். அதாவது, COVID-19 என்பது உடலில் அதிக அழுத்தத்தின் ஒரு வடிவம். இத்தகைய அபரிமிதமான மன அழுத்தத்தின் எந்தவொரு சூழ்நிலையிலும், உங்கள் உடல் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இனப்பெருக்க செயல்பாட்டை மட்டுப்படுத்துகிறது. மேலும், அதிக ஊக்க மருந்துகளின் தாக்கமும் உடலில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக புரதத்தின் குறைபாடு உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மோசமான செயல்பாட்டிற்கு வழிவகுக்கலாம்.

இதன் காரணமாக கொரோனா பாதிப்புக்கு உங்கள் உடல் அடிபணியலாம். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை மீண்டும் உருவாக்க வேண்டியது அவசியம். இதற்கு ப்ரோடீன் நிறைந்த உணவுகள் மிக அவசியம். இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்தவும், அட்ரீனல் செயல்பாட்டை சரியாக பராமரிக்கவும், ஹார்மோன்களை சமப்படுத்தவும், தோல், முடி மற்றும் நகங்களை சரிசெய்யவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை மேம்படுத்தவும், கொரோனவால் பாதித்த ஒருவர் குணமடைவதற்கும் புரதம் பேருதவி புரிகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் புரத உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறதா?

தடுப்பூசி கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மாற்றும். இது சோர்வு, காய்ச்சல், ஹார்மோன் மாற்றங்கள், மனநிலையில் மாற்றம் மற்றும் தூக்கத்தின் தாக்கம் போன்ற பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும். எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர், எதிர்வினைகளை சந்திக்காமல் இருக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம்.

உயர் புரதம் கொண்ட 6 முக்கிய உணவுகள்:

1. முட்டை:

இதில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்களை கொண்ட இவை, கொரோனா பாதிப்பால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது. முட்டைகளில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் சிறந்த மூலமாகும். அவை இரத்த சர்க்கரையை சமப்படுத்த உதவுகின்றன. இது அட்ரீனல் செயல்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலையை மீட்டெடுப்பதற்கு மிக முக்கியம்.

2) மைக்ரோபையோமி :

குடலை குணப்படுத்துவதில் நுண்ணுயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்-குளுட்டமைன் ஒரு அமினோ அமிலம். இது மியூகோசல் சிகிச்சைமுறை மற்றும் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறைக்கு உதவுகிறது. இது உயர் ஸ்டெராய்டுகள் அல்லது தடுப்பூசிகளின் தாகத்திற்கு பிறகு குடல் புறணியை மீண்டும் பலப்படுத்த உதவுகிறது. இதை ஒரு ஊட்டச்சத்தாக சேர்ப்பது பற்றி உங்கள் ஊட்டச்சத்து நிபுணரிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். அல்லது முட்டைக்கோஸ், கீரைகள், மீன், கோழி, பயறு போன்ற சில உணவுகளிலிருந்தும் இந்த ஊட்டச்சத்தை நீங்கள் பெறலாம்.

இரத்த அழுத்தம் முதல் கேன்சர் வரை..நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் வரும் ஆபத்துகள்..!

3) பருப்பு வகைகள்:

இவை புரதத்தின் சிறந்த சைவ மூலமாகும். பருப்பு வகைகளை வேகவைத்து சாப்பிடுவதும், பருப்பு சாம்பார் ரெசிபிக்களை சாப்பிடுவதும் மிக முக்கியம். ஒவ்வொரு டயட்டிலும் ஒரு கிண்ணம் பயறு, பீன்ஸ் அல்லது கொண்டைக்கடலை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

4) மீன்:

மீன் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது செரிமானத்திற்கு எளிதானது மற்றும் அதிக அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

5) இறைச்சி:

ஆடு, கோழி போன்ற தாவர வகைகளை உண்ணும் சிவப்பு இறைச்சியில் அமினோ அமிலங்கள் மற்றும் குடலை குணப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கொரோனாவில் இருந்து மீள ஒருவருக்கு மிக அவசியம்.

6) முளைகட்டிய பயிறு:

இவை சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் தேவையான புரதமாகும். பச்சை பயிறு, அல்பால்ஃபா, கொண்டைக்கடலை, மற்றும் ஆளி அல்லது சியா உள்ளிட்டவை குடலை ஜீரணிக்க எளிதாக்குகிறது மற்றும் உங்கள் புரத தேவைகளை உடனடியாக சமன் செய்கிறது. உடலில் புரதத்தை உயர்த்த ஒவ்வொரு உணவிலும் ஒரு கப் முளைகட்டிய பச்சை பயிறுகளை சாப்பிட வேண்டும்.

உயர்தர புரதங்களில் தாவரங்களை உண்ணும் மாமிசங்களான, மாட்டிறைச்சி, கோழி, மீன், மற்றும் ஸ்காலப்ஸ், சிப்பிகள், கிளாம்கள், இறால், மத்தி, கொலாஜன், முட்டை, பருப்பு வகைகள், சுண்டல், பீன்ஸ், நட்ஸ், விதைகள், டோஃபு, பட்டாணி மற்றும் பால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஹார்மோன்கள் இல்லாத ஒரு நல்ல ஆகாரத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால், சகிப்புத்தன்மை, மனச்சோர்வு, பொது பலவீனம், நோய்த்தொற்றுக்கு மோசமான எதிர்ப்பு, அதிக ட்ரைகிளிசரைடுகள், மோசமான இரும்பு உறிஞ்சுதல், முடி உதிர்தல் மற்றும் மோசமான தோல் ஆகிய பிரச்சனைகளை கட்டாயம் தவிர்க்கலாம்.

First published:

Tags: Fatigue syndrome, Immunity, Post Corona Symptoms, Protein Diet