Home /News /lifestyle /

டயட் கோக் குடிப்பதால் ஆபத்து... இந்த 5 பக்கவிளைவுகளை பற்றி தெரியுமா? 

டயட் கோக் குடிப்பதால் ஆபத்து... இந்த 5 பக்கவிளைவுகளை பற்றி தெரியுமா? 

டயட் கோக்

டயட் கோக்

எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பராம்பரிய உணவுப் பழக்கத்தில் இருந்து மாறி வரும் இன்றைய தலைமுறையின் வாழ்க்கையில் குளிர்பானங்கள் இரண்டற கலந்துவிட்டன. பிரியாணி முதல் பீட்சா வரை எதைச் சாப்பிட்டாலும் விருந்தை நிறைவு செய்ய குளிர்பானங்களை குடிப்பது ஒரு பழக்கமாகவே மாறிவருகிறது. இயற்கையாக அல்லாத செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.

அவற்றில் கெமிக்கல்கள், சர்க்கரை மற்றும் தண்ணீர் இதைத் தவிர ஒன்றுமே இருக்காது. எந்த சத்துமில்லாத, ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள இவ்வகை குளிர்பானங்களை எதற்காக விரும்பி அருந்துகின்றனர் என்று தெரியாமலே பலர் அருந்தி வருகின்றனர்.

கோககோலா, பெப்சி, தம்ஸ் அப், ஸ்பிரைட் போன்றவற்றை குடித்தால் தான் கெடுதல், டயட் கோக் குடித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் என இளம் தலைமுறையினர் தவறாக புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். பிற சாஃப்ட் ட்ரிங்குகளில் இருப்பதை விட சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவு என எண்ணி ஃபிட்னஸ் மீது ஆர்வமுள்ளவர்கள் டயட் கோக்கை அதிக அளவில் பருகின்றனர்.

டயட் கோக் உண்மையிலேயே உடலுக்கு ஆரோக்கியமானதா? இதனை பருகுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்...நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய டயட் கோக்கின் 5 பக்க விளைவுகள்:

1. சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும்:

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் சிறுநீரகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனால் டயட் கோக்கை அதிக அளவில் உட்கொள்ளும் போது சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு டயட் கோக் கேன்களுக்கு மேல் குடிப்பவர்களுக்கு சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொண்டை வலியால் அவதிப்படுகிறீர்களா..? இந்த வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்...

2. எடை அதிகரிக்கும்:

டயட் என்ற வார்த்தை இருப்பதாலேயே டயட் கோக்கில் குறைவான கலோரிகள் உள்ளதாக அர்த்தமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருசில ஆய்வுகளின் படி, டயட் கோக் குறைவான கலோரிகளை கொண்டுள்ளது என நம்பப்படுவது வெறும் கட்டுக்கதை என நிரூபிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக தொடர்ந்து டயட் கோக்கை குடிக்கும் நபரின் இருப்பளவு சாதாரண சாப்ட் ட்ரிங்ஸ் வகைகளை அருந்துவோரை விட 70 சதவீதம் பெரியதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.3. பற்களை பாதிக்கும்:

டயட் கோக் அமிலத்தன்மை கொண்டதாக இருப்பதால், அது பற்சிப்பியைக் கரைப்பதன் மூலம் உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. எவ்வளவு அதிகமாக டயட் கோக்கைஉட்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பல் சிதைவு, பல் சொத்தை, பற் தேய்மானம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

வெயிட் லாஸ் ஆவதற்காக இதை மட்டும் செய்யாதீங்க.. மலச்சிக்கல் ஏற்படும்.. எச்சரிக்கும் மருத்துவர்!

4. கொலஸ்ட்ரால் அளவு உயரும்:

டயட் கோக்கை உட்கொள்பவர்களுக்கு சாதாரண எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை விட அதிகமாக இருப்பதால், பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது.5. நீரிழப்பை ஏற்படுத்தும்:

பெரும்பாலானோர் தாகத்தை தணிக்கவே டயட் கோக் போன்ற சாப்ட் ட்ரிங்ஸை பருகிறோம். ஆனால் இதில் உள்ள காஃபின், டையூரிக்காக செயல்பட்டு உடலில் நீரிழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே டயட் கோக்கை விட தண்ணீர் அல்லது மூலிகை தேநீர் மூலம் தாகத்தை தணிக்க முயற்சிப்பது சிறந்தது என பரிந்துரைக்கப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Coke, Side effects

அடுத்த செய்தி