உலகத்தையே சிறிது காலத்திற்கு முற்றிலும் முடக்கிய கொரோனா வைரஸ், சில விஷயங்களை மக்களிடையே புதிய இயல்பாக்கியுள்ளது. அவற்றில் மாஸ்க்களின் பயன்பாடு முக்கியமானது, இது COVID-19 ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் (SARS-CoV-2) பரவுவதை மெதுவாக்க உதவும் முதன்மையான பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும். மல்டிலேயர் மாஸ்க் பரிந்துரை நமக்கு புதியதல்ல, ஆனால் புதிய ஆராய்ச்சி 3 அடுக்கு மாஸ்க் ஒற்றை அல்லது இரட்டை அடுக்கு மாஸ்க்குகளை விட பாதுகாப்பானது என்றும் ஏரோசல் உற்பத்தியைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறுகிறது.
UC சான் டியாகோ மற்றும் டொராண்டோ பொறியியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெங்களூரை தளமாகக் கொண்ட இந்திய அறிவியல் கழகத்தின் (Indian Institute of Science (IISc)) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் ஆராய்ச்சியானது, ஒரு நபர் மாஸ்க் அணிந்து இருமும்போது, பெரிய நீர்த்துளிகள் (200 மைக்ரானுக்கு மேல்) அந்த மாஸ்க்கின் உள் மேற்பரப்பை அதிக வேகத்தில் தாக்கும் போது, இந்த நீர்த்துளிகள் மாஸ்க் துணிமேல் மோதி சிறிய துளிகளாக உடைந்து விடுகின்றன, இதன் விளைவாக அதிக அளவில் ஏரோசோலைசேஷன் மற்றும் அதன் மூலம் வைரஸ்களை பரவும் வாய்ப்பு குறைகிறது.
ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு மாஸ்க், அசல் நீர்த்துளிகளின் சில திரவ தொகுதிகளைத் தடுப்பதில் பாதுகாப்பை அளித்ததாகவும், மாஸ்க் அணியாமல் இருப்பதை விட இந்த ஒற்றை மற்றும் இரட்டை அடுக்கு மாஸ்க் ஓரளவிற்கு சிறந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூன்று அடுக்கு மாஸ்க்கில் சிறிய நீர் துகள்கள் மாஸ்க்கில் உள்ள துளைகளை கடந்து செல்வதைத் தடுக்கிறது என்றும் ஆய்வு கூறியது. தும்மல் அல்லது இருமலில் இருந்து வெளிவரும் பெரிய நீர்த்துளிகளை சிறிய துளிகளாக தடுப்பதில் மூன்று அடுக்கு மாஸ்க்குகள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் இப்போதும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வைரஸ் எமுலேட்டிங் துகள்கள் (Virus Emulating Particles (VEPs)) கொண்ட இருமல் போன்ற நீர்த்துளிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அவர்கள் ஒரு ட்ராப்லெட் ஜெனரேட்டர் மற்றும் அதிவேக கேமராக்களைப் பயன்படுத்தினர். இதேபோன்ற சோதனைகள் டபுள் மற்றும் மல்டி லேயர் மாஸ்க்குகளில் மேற்கொள்ளப்பட்டன, அதோடு மாஸ்க்கின் துணி வழியாக ஊடுருவிய நீர்த்துளிகளின் அளவையும் அது பயணிக்கும் தூரத்தையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சிங்கிள் மற்றும் டபுள் லேயர் மாஸ்க்குகளில், இந்த அணு துளிகள் 100 மைக்ரான்களைக் காட்டிலும் குறைவான ஏரோசோல்களை கொண்டுள்ளது என்று அவர்களின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்துளிகள் நீண்ட நேரம் காற்றில் இடைநிறுத்தப்பட்டு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். பல அடுக்கு மாஸ்க்குகள் கிடைக்காதபோது, ஒரு அடுக்கு மாஸ்க் கூட சில நேரங்களில் பாதுகாப்பை வழங்கும் என்றும், சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.