கற்பனைகளை காட்சிப்படுத்த முடியவில்லையா..? அப்போ உங்களுக்கு இந்த குறைபாடு இருக்கலாம்..

மாதிரி படம்

இதற்கு அபந்தாசியா பாதிப்பு (APHANTASIA) என்று கூறப்படுகிறது.

  • Share this:
ஒரு பொருளையோ, இடத்தையோ உங்களின் மனக்கண்ணில் உங்களால் காட்சிபடுத்த முடியவில்லை என்றால் உங்களுக்கு காட்சி நினைவாற்றல் குறைபாடு எனப்படும் அபந்தாசியா பாதிப்பு (APHANTASIA) உள்ளது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

காட்சி நினைவாற்றல் குறைபாடு எனப்படும் அபந்தாசியா குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அதாவது, ஒரு சிலருக்கு ஒரு இடத்தயோ அல்லது பொருளையோ தங்களின் மனக்கண்ணில் வரைய முடியாது. இதனை மனக்கண்ணில் உருவாகும் கரும்புள்ளிகள் அல்லது அபந்தாசியா குறைபாடு என கோர்டெக்ஸ் இதழில் வெளியாகியுள்ள ஆய்வில் ஆய்வாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அதில், Mind's Eye எனப்படும் மனதின் கண் என்ற வார்த்தையே அவர்களுக்கு தெரியாது அல்லது புதிதாக இருக்கும் என கூறியுள்ளனர்.

இது பிறவிக்குறைபாடாகவோ அல்லது அதிர்ச்சியினால் ஏற்பட்டதாகக்கூட இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அபந்தாசியாவால் (APHANTASIA) பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதில் ஒரு பொருளை உருவகப்படுத்த முடியும் என்று கூட அவர்களால் நம்பமுடியவில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஒரு ஆடு அல்லது மாட்டை சாதாரணமானவர்கள் பார்க்காமலேயே தங்களின் மணக்கண்ணில் உருவகப்படுத்த முடியும், ஆனால் அபந்தாசியாவினால் பாதிக்கப்பட்டவர்களால் ஒரு பொருளை நேரடியாக பார்க்காமல் தங்களின் மனக்கண்ணில் அப்படி செய்ய முடியாது என அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக உதவி பேராசிரியர் வில்மா பெயின்ப்ரிட்ஜ் கூறினார்.



மூளை நரம்பியல் எனப்படும் நியூரோ சையின்ஸில் நிபுணத்துவம் பெற்றவரான அவர், அபந்தாசியா பாதிப்பை சரியாக வகைப்படுத்த வேண்டும் என ஒரு முயற்சி எடுத்தார். அதனடிப்படையில் அவரது நண்பர்கள் 3 பேருடன் இணைந்து ஒரு சில அறைகளின் படங்களை இரு வெவ்வேறு குழுக்களுக்கு காட்டினர். அப்போது, ஒரு முறை நினைவில் உள்ள புகைப்படத்தை வரையுமாறும், மற்றொரு முறை புகைப்படத்தை பார்த்தும் வரையுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். சாதாரண நபர்கள், ஒரு அறையில் இருக்கக்கூடிய மிக முக்கயமான அனைத்து பொருட்களையும் வரைந்தனர்.

நீங்கள் தேர்வு செய்யும் ஆடைக்கும், சாப்பிடும் உணவுக்கும் தொடர்பு உண்டாம்.. எப்படி தெரியுமா?

குறிப்பாக, வண்ணம், முக்கிய வடிவமைப்பு உள்ளிட்ட தகவல்களுடன் அவர்களின் வரைபடம் இருந்தது. ஆனால், அபந்தாசியா குறைபாடு (APHANTASIA) உடையவர்களால் அப்படி வரையமுடியவில்லை. இருப்பினும், வழக்கமான நபர்களைப் போல் அனைத்து பொருட்களையும் அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு சில பொருட்களையும் சரியாக வரைந்தனர். மேலும், ஒரு முறை பார்த்த பொருளை மற்றொரு முறை காண்பிக்கும்போது சரியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்.

அபந்தாசியாவினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். ஆனால் அவர்களை தங்களின் மனக்கண்ணில் காட்சிப்படுத்த முடியவில்லை. பெரிய மக்கள் குழுவில், மிகச்சிறிய குழுவினர் மட்டுமே அபந்தாசியா குறைபாட்டால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், ஓர் அறையில் காண்பிக்கப்பட்ட பொருள் எங்கிருக்கிறது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை.



நேரடியாக பார்க்கும்போது அந்த பொருளின் இடத்தை சரியாக சொல்கிறார்கள் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்மைக்காலமாக இந்தக் குறைபாடு மக்களிடையே தென்படுவதாக தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 61 பேரில் 52 பேர் மனக்கண்ணில் பொருளை உருவகப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் எனக் கூறியுள்ளனர். 2800 ஆன்லைன் தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பார்த்து வரைவதில் இரு தரப்பினருமே சரிசம மான புள்ளிகளை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Published by:Sivaranjani E
First published: