• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா ?

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா ?

காட்சி படம்

காட்சி படம்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு தடுப்பூசி வந்துவிட்டதா ?

  • Share this:
    கடந்த ஒரு வருடமாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் அரசாங்க தகவல் சேனல்களில் கொரோனா மற்றும் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு, விநியோகம் தொடர்பான செய்திகளின் வெளிப்பாடுதான் அதிகமானாக இருந்து வருகிறது. இந்த நேரத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்த சிறிய விழிப்புணர்வு ஊடகங்கள் மூலம் மக்களிடையே பரவியுள்ளது.

    இந்திய பெண்கள் மத்தியில், இரண்டாவது மிக உயர்ந்த இறப்புகளுக்கு காரணமாக அமைவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகளவில் நகரங்களில் இருக்கும் பெண்களை விட கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் தான் இந்த புற்றுநோய்க்கு ஆளாவதாக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு பெண் இறக்கிறார் என்றும், வருடத்துக்கு 2 இலட்சத்து 80,000 பெண்கள் இந்த கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. தற்போது இந்தியாவில் கிடைக்கக்கூடிய HPV தடுப்பூசி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்க உதவுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் போது ஹியூமன் பாப்பிலோமா வைரசால் (HPV) ஏற்படும் தொடர் தொற்றுநோயால் உண்டாகிறது. மேலும், பாப் ஸ்மியர் சோதனை எனப்படும் எளிய ஸ்கிரீனிங் செயல்முறை மூலம் இதனை எளிதில் கண்டறிய முடியும்.

    இருப்பினும், பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஏராளமான களங்கங்களும் அவமானங்களும் இருப்பதால், பெரும்பாலான இந்திய பெண்கள் இத்தகைய வழக்கமான சுகாதார பரிசோதனைகளைத் தேர்வு செய்வதில்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, மருத்துவர்களை அணுகும் நேரத்தில் இந்த நோய் தீவிரமடைவதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த புற்றுநோய் ஒரு மேம்பட்ட நிலைக்கு முன்னேறி காணப்படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து, மும்பையின் அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனையின் அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ராகேஷ் பாதே கூறியதாவது, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் நம் நாட்டில் பிறப்புறுப்பு சுகாதாரம் மோசமாக உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    பிறப்புறுப்பு சுகாதாரத்தை மிகவும் கடுமையாக பின்பற்றும் சமூகங்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன என்றும் கூறியுள்ளார். ஆனால் தற்போது இந்த பிரச்சனைக்கு ஒரு விடிவுகாலம் வந்து விட்டதாக அவர் கூறினார். HPV தடுப்பூசி பாலியல் உறவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கிறது. இதனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தவிர்க்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த தடுப்பூசி கர்ப்பப்பை வாய் இன்ட்ராபிதெலியல் நியோபிளாசியாவையும் தடுக்கிறது. இது HPV யால் ஏற்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

    தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது?

    ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV), பொதுவாக பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும் நபர்களில் காணப்படுகிறது என மகப்பேறு மருத்துவ ஆலோசகர் நேஹா குமார் என்பவர் கூறியுள்ளார். இருப்பினும், அவர்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் நோய் எதிர்ப்பு சக்தியின் மூலம் இந்த வைரஸை எதிர்த்துப் போராட முடியும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், இந்த வைரஸ் பல ஆண்டுகளாக நீடிக்கும். இது தான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளார்.

    தற்போது இதனை தடுக்க இரண்டு வகையான ஹெச்பிவி தடுப்பூசிகள் உள்ளன. அவை பைவலண்ட் (bivalent) மற்றும் குவாட்ரிவலண்ட் (quadrivalent). பைவலண்ட் ஹெச்பிவியின் இரண்டு விகாரங்களை உள்ளடக்கியது. குவாட்ரிவலண்ட் நான்கு விகாரங்களை உள்ளடக்கியது. இப்போதெல்லாம் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது குவாட்ரிவலண்ட் தடுப்பூசி தான். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு காரணமான 16 மற்றும் 18 HPV விகாரங்களை உள்ளடக்கியது. மேலும், 90 சதவிகித பிறப்புறுப்பு மருக்களுக்கு காரணமான HPV விகாரங்கள் 6 மற்றும் 11-ஐ உள்ளடக்கியுள்ளது.

    Also Read : கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டு கொள்வோருக்கு இந்த அறிகுறிகள் இருக்குமாம்

    இந்த தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் யார்?

    தற்போதைய நிலவரப்படி, இளம் வயதினருக்கு HPV தடுப்பூசி வழங்கப்படுகிறது. பாலியல் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பு அதாவது 11 முதல் 12 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இளம் பெண்களில், தடுப்பூசி முன்னர் குறிப்பிட்ட HPV விகாரங்களால் ஏற்படும் தொற்றுநோயைத் தடுக்கிறது. இருப்பினும், இது 70 சதவீத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை மட்டுமே  தடுக்கிறது. எனவே, நீங்கள் HPV தடுப்பூசி போட்டுக்கொண்டால் அதன்பிறகு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஒருபோதும் உருவாகாது என்பது அர்த்தமல்ல.

    இந்த தடுப்பூசி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன என்பதே இதன் பொருள். இந்த தடுப்பூசி முழுமையான உத்தரவாதத்தை வழங்காததால், உடலுறவில் ஈடுபடும் பெண்கள் தடுப்பூசி போட்ட பிறகும் வழக்கமான ஸ்க்ரீனிங்கை தொடர வேண்டும் என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இளம் பருவத்தினர் தவிர, 13-26 வயதுக்குட்பட்ட பெண்களும் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், அவற்றின் அளவு வேறுபடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: