ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ரொம்ப நேரம் உட்கார்ந்துகிட்டே வேலை செய்தால் சீக்கிரமே வயதாகிவிடும்..! எச்சரிக்கும் ஆய்வு

ரொம்ப நேரம் உட்கார்ந்துகிட்டே வேலை செய்தால் சீக்கிரமே வயதாகிவிடும்..! எச்சரிக்கும் ஆய்வு

முதுகு வலி

முதுகு வலி

குறைந்தது 60 முதல் 75 நிமிடங்கள் வரையிலாவது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய செயல்கள் ஏதேனும் செய்ய வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு எளிதில் வயதானதை போன்ற தோற்றம் ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடலை அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைப்பதற்கு ஒவ்வொருவரும் என்னென்னவோ செய்து வருகிறார்கள். உடற்பயிற்சி செய்வது, அழகு பொருட்கள் பயன்படுத்துவது, சருமத்திற்கு பளபளப்பை கூட்ட புதிய புதிய கிரீம்களை பயன்படுத்துவது என என்னென்னவோ செய்து வருகிறார்கள். ஆனால் நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பவராக இருந்தால், இவை அனைத்துமே வீண் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு உட்கார்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு வழக்கத்தை விட, வயது கூடியது போன்ற உடல் தோற்றம் ஏற்படும் எனவும் தெரியவந்துள்ளது.

இன்றைய நவீன யுகத்தில் அலுவலகத்தில் செல்லும் பலரும் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் முதுகு வலி, தண்டுவட பிரச்சனை, கழுத்து வலி பிரச்சனைகள் ஆகியவை தான் ஏற்படும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேலையில், அதிகம் உட்கார்ந்து இருப்பதால் வயதாகிவிடும் என்ற புதிய ஆராய்ச்சி முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அலுவலகத்தில் நாள் முழுவதும் உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்கள் நிலை தான் பாவமாக உள்ளது.

Also Read: உங்கள் முதுகு வலியை அலட்சியப்படுத்துகிறீர்களா..? அதனால் வரும் விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

 “அமெரிக்கன் ஜார்னல் ஆஃப் பிரிவெண்டிங் மெடிசன்” வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின்படி நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது முதுகு வலி, சர்க்கரை வியாதி மற்றும் பல உடல் சம்பந்தப்பட்ட கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் இருதய நோய் அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் உடலின் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டு, அந்த நபருக்கு விரைவிலேயே வயது முதிர்ந்ததைப் போன்ற உடல் தோற்றம் உண்டாகக்கூடும் என்பதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயோ கிளினிக் வெளியிட்ட மற்றொரு ஆய்வறிக்கையில், அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பதால், அதிக ரத்த அழுத்தம் அல்லது ரத்த அழுத்தத்தில் குறைபாடு, உடல் பருமன். இடுப்பை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் அதிகப்படியான எடை கூடுவது, உடலுக்கு தீமை தரக்கூடிய தேவையற்ற கொழுப்புகள் சேர்வது ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக நேரம் உட்காருவதால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு, குறைந்தது 60 முதல் 75 நிமிடங்கள் வரையிலாவது உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடிய செயல்கள் ஏதேனும் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை செய்த பின், உடம்பை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறுது நேரம் நடைப்பயிற்சி செய்துவிட்டு வரலாம்.

Also Read: முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் பெற உதவும் ஆயுர்வேத டிப்ஸ்..!

 மேலும் முடிந்தால் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கலாம். ஃபோன் பேசும்போது நடந்து கொண்டே பேச முயற்சிக்கலாம். நண்பர்களுடன் வெளியில் சிறிது நேரம் நடந்து கொண்டே கதை பேசி விட்டு வரலாம். இவ்வாறு நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வதற்காக பிரேக் எடுப்பதில் எந்த தவறும் இல்லை.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Back pain, Health, Health tips