ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தயிர் சாப்பிட்டால் ஆண்களுக்கு செக்ஸ் ஆற்றல் அதிகரிக்குமா..? உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்!

தயிர் சாப்பிட்டால் ஆண்களுக்கு செக்ஸ் ஆற்றல் அதிகரிக்குமா..? உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்!

காட்சி படம்

காட்சி படம்

உடலுக்கு இயற்கையாகவே குளிர்ச்சியை தரக் கூடிய தயிரில் புரோபயாடிக், விட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. தயிரில் என்னென்ன நன்மைகள் உண்டு என்பது குறித்து நூற்றுக்கணக்கான தரவுகளை நாம் முன்னெடுத்து வைக்க முடியும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்திய வீடுகள் அனைத்திலும் தவறாமல் இடம்பெறும் உணவுப் பொருள் தயிர் ஆகும். பால் சார்ந்த உணவுப் பொருளான தயிர் இல்லாமல் எந்தவொரு வீட்டிலும் உணவு என்பது முழுமை அடையாது. குறிப்பாக கோடை காலத்தில் தயிர் உணவின் தேவை எந்த அளவுக்கு முக்கியமானது என்பது குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உடலுக்கு இயற்கையாகவே குளிர்ச்சியை தரக் கூடிய தயிரில் புரோபயாடிக், விட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. தயிரில் என்னென்ன நன்மைகள் உண்டு என்பது குறித்து நூற்றுக்கணக்கான தரவுகளை நாம் முன்னெடுத்து வைக்க முடியும். அதே சமயம், தினசரி தயிர் சாப்பிட்டால் ஆண்களுக்கான பாலுணர்சி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

விரைப்புதன்மையுடன் ஏன் தயிர் சம்பந்தப்படுத்தப்படுகிறது?

தயிரில் லேக்டோபேசில்லஸ் பாக்டீரியா என்னும் பொருள் நிறைந்துள்ளது. லேக்டோஸ் சத்து குறைபாட்டால் அவதியுறும் மக்களுக்கு தீர்வு அளிக்கக் கூடிய நல்ல பாக்டீரியாவாக இது இருக்கிறது. ஆண்களின் விறைப்புத்தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியதாகவும் தயிர் இருக்கிறது.

இது மட்டுமன்றி நமது குடல் நலன் பேணவும், எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கவும் தயிர் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களும் தொடர்ந்து தயிர் சாப்பிட்டு வரலாம். எனினும், தயிர் நமது பாலுறவை மேம்படுத்த உதவும் என்ற தகவல் பலருக்கும் தெரியாமல் உள்ளது.

பீரியட்ஸ் நாட்களில் வலி சமாளிக்க பாதாமையும் வாழைப்பழத்தையும் இப்படி சாப்பிடுங்க

உண்மையில் இது விரைப்புத்தன்மையை அதிகரிக்குமா

மருத்துவ ஆய்வு ஒன்றில் 40 ஆண் எலிகள் மற்றும் 40 பெண் எலிகளுக்கு தொடர்ச்சியாக தயிர் வழங்கப்பட்டு வந்தது. ஆய்வின் முடிவில், தயிர் சாப்பிட்ட எலிகளின் பாலுணர்ச்சி என்பது, சாதாரண உணவுகளை சாப்பிட்ட எலிகளை ஒப்பிடுகையில் 15 சதவீதம் கூடுதலாக இருந்தது. இதேபோன்று தயிர் சாப்பிட்ட பெண் எலிகள் கூடுதலான குட்டிகள் ஈன்றதும் உறுதி செய்யப்பட்டது.

இறுதியான முடிவு என்ன

தயிர் சாப்பிட்டால் ஆண், பெண் இருவருக்குமே பாலுணர்ச்சி அதிகரிக்கும் என்றும், இனப்பெருக்க திறன் மேம்படும் என்றும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆண்களைப் பொருத்தவரையில் தினசரி தயிர் சாப்பிட்டு வந்தால் அவர்களது விரைப்புத்தன்மை அதிகரிக்கிறது. மேலும் உயிர் அணுக்களின் தரமும் மேம்படுகிறது.

தயிர் சாப்பிடுவதால், பாலுறவு நோக்கிய நமது எண்ணப்போக்கு மேம்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. பாலுறவு சிறப்பானதாக அமைய தினசரி ஒருவேளை தயிர் அல்லது புளிக்காத தயிர் சாப்பிட்டு வரலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Published by:Sivaranjani E
First published:

Tags: Curd, Sex Drive