முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வயிற்றுப்போக்கு ஏற்பட குடிநீர் கூட காரணமாக இருக்கலாம்.. இதை முதலில் செக் பண்ணுங்க..!

வயிற்றுப்போக்கு ஏற்பட குடிநீர் கூட காரணமாக இருக்கலாம்.. இதை முதலில் செக் பண்ணுங்க..!

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு 2-3 நாட்களுக்கு மேல் நீடித்தாலும், காய்ச்சல் குறையவில்லை என்றாலும் ஒருவர் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • tamil, India

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தின் பல கிராமங்களில் சமீப நாட்களாக வயிற்றுப்போக்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹமிர்பூர் மாவட்ட கிராமங்களில் மொத்தம் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் இதுவரை வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன், ஜான்ட்கி குஜ்ரான், ஜந்தலி ராஜ்புதன், பன்யாலா, பத்தியாலு, நியாதி, தைன் மற்றும் சங்கார் உள்ளிட்ட பல கிராமங்கள் இந்த திடீர் வயிற்றுப்போக்கு நிகழ்வுகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த திடீர் பாதிப்புகளுக்கு என்ன காரணம்?

பொதுவாக அசுத்தமான தண்ணீர் பயன்பாடு வயிற்றுப்போக்கு நோய்க்கு மிகப்பெரிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இமாச்சலப் பிரதேசத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து ஜல் சக்தி துறை அதிகாரிகள் பொதுமக்கள் பயன்படுத்திய தண்ணீர் மாதிரிகளை பரிசோதித்தனர்.

முதற்கட்ட பரிசோதனையில் சோதிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் மாசுபாடு எதுவும் இல்லை என கூறியுள்ளனர். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அருகிலுள்ள khads-ஸ்களில் இருந்து தான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தங்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீர் முறையாக குளோரினேஷன் செய்யப்படவில்லை என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தண்ணீரை குடித்ததால் தங்களது வீட்டிலும் 2-3 பேர் வரை வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அறிகுறிகள்:

அசுத்த தண்ணீரை பருகுவதால் ஏற்படும் மற்றும் பரவும் நோயின் பொதுவான அறிகுறிகளில் வாந்தி மற்றும் காய்ச்சல் முக்கியமானவை. வயிற்றுப்போக்கு என்பது ஒரு நபர் ஒரே நாளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை லூஸ் மோஷன் செல்லும் நிலையாகும். பொதுவாக வயிற்றுப்போக்கு பாதிப்புடன் நெருங்கிய தொடர்புடைய சிக்கல்களில் வயிற்று வலி, உப்பசம், குமட்டல், மலத்தில் ரத்தம் வருவது, அவசரமாக மலம் கழிக்க வேண்டிய நிர்பந்த நிலை உள்ளிட்டவை அடக்கம்.

வயிற்றுப்போக்கு 2-3 நாட்களுக்கு மேல் நீடித்தாலும், காய்ச்சல் குறையவில்லை என்றாலும் ஒருவர் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். மருத்துவரீதியாக 3 வகையான வயிற்றுப்போக்கு உள்ளன. அக்யூட் வாட்டரி டயரியா - இது பல மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் நீடிக்கும் மற்றும் காலராவை உள்ளடக்கியது. அக்யூட் பிளட்டி டயரியா - இது டிசன்ட்ரி என்றும் குறிப்பிடப்படும். மூன்றாவது பெர்சிஸ்டென்ட் டயரியா என்று அழைக்கப்படுகிறது, இது 14 நாட்களுக்கு மேல் நீடிக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட வேறு காரணங்கள்:

பொதுவான காரணம் அசுத்தமான நீர். இருப்பினும் இந்த நோயைப் பற்றி புரிந்து கொள்ள குறைவாக அறியப்பட்ட பிற காரணங்களும் உள்ளன. ஃபுட் அலர்ஜி , கிரோன் டிசீஸ் அல்லது அல்சரேட்டிவ் கொலைட்டிஸ், செரிப்பதற்கு மிகவும் கடினமான உணவுகளை உண்ணுதல், ஃபுட் பாய்சனிங் , மலமிளக்கியின் அதிக பயன்பாடு, செரிமானம் அல்லது உணவில் இருந்து சில ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதில் உள்ள சிரமம், சப்ளிமென்ட்ஸ்களை அதிகம் எடுப்பது உள்ளிட்டவையும் வயிற்றுப்போக்கு ஏற்பட காரணங்களாக இருக்கின்றன. தவிர கேன்சர் மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை போன்ற பிற தீவிர நிலைகளும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

டிஹைட்ரேஷன்:

டிஹைட்ரேஷன் அதாவது உடலில் இருக்கும் நீர்சத்து இழப்புஎன்பது வயிற்றுப்போக்கின் தீவிர பக்க விளைவு ஆகும். உடனடியாக இதை கவனிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு காரணமாக அடிக்கடி மலம் கழிப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட் வெளியேறுகிறது. இதன் விளைவாக நோயாளி மிக விரைவில் டிஹைட்ரேட்டாகிறார் இதன் விளைவாக பலவீனமடைகிறார். டிஹைட்ரேஷன் ஏற்பட்ட உடன் விரைவில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

சிகிச்சை...

போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் ஏற்படும் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் இழப்பை ஈடுகட்ட, மருத்துவர் பரிந்துரைக்கும் ORS கரைசலை தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ORS பவுடரை தண்ணீரில் கலக்கும் முன் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைக்க வேண்டும். மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் ஜிங்க் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளலாம். ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ் வயிற்றுப்போக்கை வெகுவாக குறைக்கிறது மற்றும் மலத்தின் அளவில் 30% வரை குறைக்கும்.

Also Read : வயிறு கோளாறு ஏற்படும் போது சாப்பிட வேண்டிய உணவுகள் எவை?

எப்போது தீவிரமாகும்.?

பாதிக்கப்பட்ட நபருக்கு டிஹைட்ரேஷன் ஏற்படும் போது, 102 F-க்கு மேல் காய்ச்சல் அடிக்கும் போது, மலத்தில் ரத்தம் அல்லது சளி இருந்தால் வயிற்றுப்போக்கு தீவிரமடைந்துள்ளது மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடுமையான வயிற்று வலி அல்லது மலக்குடல் வலியும் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு இரண்டாவது முக்கிய காரணம். கடந்த 2019-ல் 3,70,000 குழந்தைகளின் இறப்புக்கு வயிற்றுப்போக்கு காரணமாக இருந்துள்ளது.

First published:

Tags: Diarrhoea, Health tips, Stomach Pain