யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். நமது உடல் ஆரோக்கிய செயல்பாடுகளும் கூட ஏறத்தாழ அப்படித்தான். எந்த நோயும் திடீரென்று ஒரே நாளில் நம் உடலுக்குள் இறங்கி விடுவது கிடையாது. நோயின் தொடக்கம் முதல் நமது உடல் ஒருசில அறிகுறிகளை காட்டத் தொடங்கும். அந்த அறிகுறிகள் எதற்கானது என்பது தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை புறக்கணித்து செல்பவர்கள் தான் நாளடைவில் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
ஈறுகளில் ரத்த கசிவுநீங்கள் பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது என்றால் ஈறு சம்பந்தப்பட்ட நோய் என்பது மட்டுமல்லாமல், பல பாதிப்புகளுடன் தொடர்புடையதாகவும் இருக்கிறது. குறிப்பாக, ஈறுகளில் ரத்தக் கசிவு இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்டிரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகம் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.விட்டமின் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு ஈறுகள் வீக்கமடையும். அத்தகைய சூழலில் மல்டிவிட்டமின் மாத்திரைகள், ஒமேகா 3 ஃபேட்டி ஆயில் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
வெள்ளை நிற நாக்குமெல்லிய வெள்ளை படலம் நாக்கில் இருப்பது இயல்பான ஒன்றுதான். ஆனால், மிக தீவிரமான வெள்ளை என்பது கிருமித் தொற்று அல்லது புற்றுநோய் போன்றவற்றின் அறிகுறிகள் ஆகும். இது மட்டுமல்லாமல் எஸ்டிஐ சிப்ளிஸ் என்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும் இதுபோல தென்படும்.
வாய்ப்புண்வாய்ப்புண் மிக பொதுவான விஷயம். ஓரிரு நாட்களில் தானாக குணமாகிவிடும். ஆனால், சில சமயம் வைட்டமின் பி, ஜிங்க், இரும்புச்சத்து போன்ற குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம். ஹெச்ஐவி அல்லது லூபஸ் போன்ற கொடிய நோய்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதன் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
மோசமான சுவாசம்மோசமான வாய் சுகாதாரம் அல்லது சில வகை உணவுகள் காரணமாக சுவாசம் மோசமானதாக இருக்கலாம். ஆனால், இதுவே வழக்கமானதாக இருந்தால் சைனஸ் அல்லது தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கலாம். சில புற்றுநோய்கள் அல்லது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் ஆகியவையும் சுவாசத்தை மோசமானதாக்கும்.
வாயில் வெடிப்புகள்வாய் மற்றும் உதடு போன்ற இடங்களில் வெடிப்புகள் தோன்றும். இது செரிமான கட்டமைப்பில் உள்ள கோளாறுகளின் அறிகுறிகள் ஆகும். வைட்டமின் குறைபாடுகளும் இதற்கு காரணமாகும்.
வாய் புற்றுநோய் அறிகுறிகள்உதடு, ஈறுகள், நாக்கு, உள்தாடை போன்ற வாயின் எந்தப் பகுதிகளிலும் கூட புற்றுநோய் ஏற்படும். பற்கள் உறுதியை இழப்பது, உதடு அல்லது வாயில் ஏற்படும் புண் ஆறாமல் இருப்பது போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
விட்டமின் பற்றாக்குறை அறிகுறிகள்* வெளிறிய நகம் மற்றும் முடி* இரவில் மங்கலான பார்வை, கண்களில் வெள்ளைப்படலம்* முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லை* சருமத்தில் சிவப்பு அல்லது வெள்ளை திட்டுக்கள்
மருத்துவரை அணுக வேண்டும்எந்தவொரு அறிகுறிகளும் சில வாரங்களுக்கு மேல் நீடித்தது என்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யவும். கொடிய நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதையும் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளவும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.