• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய சாப்பிட வேண்டிய உணவுகள் , கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய சாப்பிட வேண்டிய உணவுகள் , கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்

டெங்கு

டெங்கு

டெங்குவால் பாதிக்கப்டுபவர்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் இருப்பதால் அவர்கள் உடலை போதுமான நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம்.

 • Share this:
  சர்வதேச அளவில் ஆண்டு தோறும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் கொசுக்களால் பரவும் நோய்களில் டெங்கு முக்கியமான நோயாகும். இன்னும் குறிப்பிட்ட சிகிச்சை கிடைக்காத நோய்களில் டெங்கு வைரஸ் நோயும் ஒன்று ஆகும். மழை காலம் துவங்கி விட்டாலே இந்தியாவில் டெங்கு நோயின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படும். பருவமழை சீசனில் இந்தியாவில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியம் டெங்குவால் பாதிப்படுகிறது.

  ஏற்கனவே பெருந்தொற்று இந்தியாவில் இன்னும் நீடித்து வரும் நிலையில், டெங்குவிலிருந்து நாம் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பது மிக முக்கியம். நாட்டின் சில மாநிலங்களில் கோவிட் தொற்றுடன் சேர்ந்து டெங்குவும் மக்களை பாதித்துள்ளது. நாட்டின் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும், ஒருவேளை டெங்குவால் பாதிக்கப்பட்டால் விரைவாக அதிலிருந்து குணமடையும் வழிமுறைகளையும் தெரிந்து வைத்து கொள்வது அவசியம்.

  டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்க சுகாதாரமாக இருப்பது, உடலின் பெரும்பாலான பாகங்களை கவர் செய்யும் படியான உடைகளை அணிவது, சுற்றுப்புறம் மற்றும் வீடுகளில் உற்பத்தியாகும் கொசுக்களை குறைப்பது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

  அதிக காய்ச்சல், தலைவலி, கடும் உடல் வலி, முதுகு வலி, குமட்டல் உள்ளிட்டவை டெங்குவின் பொதுவான அறிகுறிகள். டெங்குவால் பாதிக்கப்டுபவர்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயம் இருப்பதால் அவர்கள் உடலை போதுமான நீர்ச்சத்துடன் வைத்திருப்பது அவசியம். தவிர எளிதில் செரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். டெங்கு இருப்பது கண்டறியப்பட்டால் பின்வரும் டிப்ஸ்களை பின்பற்றுவது சிறந்த பலனை தரும்.  ஓய்வு:

  எந்த நோயிலிருந்தும் குணமடைய போதுமான அளவு ஓய்வு எடுப்பது மிகவும் அவசியம். டெங்கு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்பதால் முடிந்த வரை ஓய்வு எடுப்பது அல்லது தூங்குவது இன்றியமையாத ஒன்று.

  கத்திரிக்காயில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா ?

  தண்ணீர்:

  டெங்கு நோயாளிகள் நாளொன்றுக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். தவிர சர்க்கரை கலக்காமல் ஜூஸ் அருந்தலாம். டெங்குவிலிருந்து விரைவாக குணமடைய நிறைய திரவம் எடுத்து கொள்ள வேண்டும்.

  சாப்பிட கூடாதவை:

  சிட்ரஸ் பழங்களான ஆம்லா, கிவி, ஆரஞ்சு மற்றும் அன்னாசிப்பழங்கள் மாதுளை மற்றும் பப்பாளி & காய்கறி சூப்களை தயக்கமின்றி எடுத்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு 2 முறை மோர் குடிப்பது உடல் நீர்ச்சத்து பெறவும் செரிமானத்திற்கு உதவுகிறது. ஆனால் பதப்படுத்தப்பட்ட அல்லது துரித உணவு மற்றும் சர்க்கரை உணவுகள் நோயிலிருந்து குணமாவதை தாமதப்படுத்தும் என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும்.  விரைவில் குணமடைய..

  * பப்பாளி இலை ஜூஸை சாப்பிடுவது டெங்குவிலிருந்து விரைவில் குணமடைய உதவும். 20 மிலி அளவுடைய பப்பாளி இலை ஜூஸை தினமும் 2 அல்லது 3 குடிப்பது, பிளேட்லெட்டுகளை மேம்படுத்த மிகவும் உதவும். இது கசப்பான ஜூஸ் என்பதால் றிது தேன் கலந்து குடிக்கலாம்.

  * ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றியமையாத மூலிகையாக பயன்படுத்தப்படும் சீந்திலின் (Giloy -T. cordifolia) சாற்றுடன், நெல்லிக்காய் மற்றும் கோதுமை தளிர் சாற்றை (wheat grass) குடிப்பது, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் பிளேட்லெட்டுகளை மேம்படுத்த உதவுகிறது.

  கருப்பு உலர் திராட்சை Vs மஞ்சள் உலர் திராட்சை...இரண்டில் எது ஆரோக்கியம் அதிகம்..?

  * படிப்படியாக குணமடைந்த பின் வைட்டமின் டி அவசியம் என்பதால் முடிந்தவரை சூரிய ஒளியில் எளிய உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

  * வெள்ளை சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு இல்லாத சமச்சீர் மற்றும் ஆரோக்கிய உணவை தொடர்வது முக்கியம்

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: