Home /News /lifestyle /

Netra Suraksha | தேசத்தைப் பாதுக்காப்பவர்களின் கண்களைப் பாதுகாத்தல்..

Netra Suraksha | தேசத்தைப் பாதுக்காப்பவர்களின் கண்களைப் பாதுகாத்தல்..

Netra Suraksha

Netra Suraksha

Diabetic Retinopathy | நீரழிவுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 39 மில்லியன் இந்தியர்கள், பார்வை கொல்லி என்றும் அழைக்கப்படும் நீரழிவுநோய் காரணமான ரெட்டினோபதி (DR) போன்ற நோய்களால் பாதிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்வின்றி இருக்கின்றனர்.

  தேசத்தைக் கட்டியெழுப்புவது கடினமான பணியாகும், அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது இன்னும் சவாலானதாகும். இந்திய ராணுவமானது கடற்படை மற்றும் விமானப்படை மட்டுமல்லாமல், இந்திய கடலோர காவல்படை மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு போன்ற பல முகமைகளையும் உள்ளடக்கியுள்ளது, அத்துடன் இந்தியா உலகின் மிகப்பெரிய பாதுகாப்புப் படைகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

  இவற்றிற்காக மத்திய ஆயுதக் காவல் படைகளின் பல்வேறு வகைகளிலான பிரிவுகளால் ஆதரவு அளிக்கப்படுகின்றன. இவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று எல்லைப் பாதுகாப்புப் படையாகும், இது பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நமது எல்லைகளைப் பாதுகாக்கிறது. ஒருசேர எடுத்துக்கொண்டால், இந்திய பாதுக்காப்புப் படைகளில் 51 லட்சத்துக்கும் அதிகமான தைரியமான ஆண்களும் பெண்களும் உள்ளனர், அவர்கள் நமது உயிர்கள், நமது சொத்துக்கள் மற்றும் நமது சுதந்திரங்களைப் பாதுகாப்பதையே தங்கள் தலையாயப் பணியாகக் கொண்டுள்ளனர்.

  இருப்பினும், மருத்துவச் செலவினங்களை அதிகரித்து, பொருளாதாரத்தை சீர்குலைத்து, நமது குடும்பங்களில் எதிர்பாராத தனிப்பட்ட செலவுகளை ஏற்படுத்தும் ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்பு உண்டாக்கும் திடீர் அச்சுறுத்தல்களும் உள்ளன. இது நீரழிவுநோய் போன்ற வாழக்கை முறை சார்ந்த நோய்களினால் ஏற்படலாம், இந்தியாவில் இன்று 77 மில்லியன் நபர்கள் (2045 ஆம் அண்டு இது 134 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது), நீரழிவு  நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் பாதி பேருக்கு நோய்த்தாக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதாவது, நீரழிவுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 39 மில்லியன் இந்தியர்கள், பார்வை கொல்லி என்றும் அழைக்கப்படும் நீரழிவுநோய் காரணமான ரெட்டினோபதி (DR) போன்ற நோய்களால் பாதிக்கப்படுவது பற்றிய விழிப்புணர்வின்றி இருக்கின்றனர்.

  1980 மற்றும் 2008 க்கு இடையில் உலகளவில் 35 ஆய்வுகளில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில், நீரழிவுநோய் நோயாளிகளிடம் ரெட்டினல் இமேஜ்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்தமாக 35% நபர்களுக்கு DR பாதிப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் 12% நபர்களுக்கு DR காரணமாக பார்வைத்திறன் பறிபோகும் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதாவது நீரழிவுநோய் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு DR அதிகரிக்கும், மேலும் எட்டு நபர்களில் ஒருவருக்கு அவர்களின் பார்வைத் திறன் பறிபோகும் அச்சுறுத்தல் ஏற்படலாம். இதில் உள்ள சோகமான உண்மை என்னவென்றால், வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலமாக DR கோளாறு முற்றிலும் தடுக்கக்கூடியதாகும், மேலும் எளிமையான, வலியற்ற கண் பரிசோதனை மூலம் எளிதில் இதனை கண்டறியலாம்.

  போதிய விழிப்புணர்வின்மையும் பரிசோதனைக்கான போதிய அணுகலுமே இதில் உள்ள மிகப் பெரிய பிரச்சனை ஆகும். எனவே தான் Network18 இந்த ஆண்டு Novartis உடன் இணைந்து 'Netra Suraksha' – நீரழிவுநோயிற்கு எதிரான இந்தியா’ எனப்படும் மிகவும் வெற்றிகரமான முன்முயற்சியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செயல்படுத்த Network18 இன் தளங்களைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்த ஆண்டு 'Netra Suraksha' - நீரழிவுநோயிற்கு எதிரான இந்தியா' என்ற முன்முயற்சியில் நாடு முழுவதும் கள விழிப்புணர்வு முகாம்களை நடத்தவுள்ளது.

  இந்த முன்முயற்சி நம் நாட்டின் மக்கள்தொகையில் பின்வரும் சிறப்புப் பிரிவினரின் மீது கவனம் செலுத்தும்: நமது சுதந்திரம், நமது எல்லைகள் மற்றும் நமது நல்வாழ்வைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அனைவரின் குடும்பங்கள். இந்த நல்ல நோக்கத்திற்காக, இந்த முன்முயற்சியானது ஜூன் 14 ஆம் தேதி, குஜராத்தில் உள்ள கட்ச், தர்மஷாலா (BSF) போர் நினைவிடத்தில் தொடங்கப்பட்டது. இதில் , CNN-News18 நிறுவன மூத்த இணை ஆசிரியர் ஷிவானி குப்தா, முதன்மை விருந்தினராக குஜராத் சட்டமன்றத்தின் மாண்புமிகு சபாநாயகர் ஸ்ரீமதி டாக்டர் நிமாபென் ஆச்சார்யா, மற்றும் DIG, BSF, கச்சத் துறையைச் சேர்ந்த திரு. சஞ்சய் ஸ்ரீவஸ்தவா, அவர்களுடன் இந்தியாவில் Novartis தலைவர் - தகவல் தொடர்பு, ஈடுபாடு மற்றும் CSR துறையைச் சார்ந்த திருமதி வைஷாலி ஐயர்; டாக்டர் மனிஷா அகர்வால், செயலாளர், VRSI; மற்றும் மருத்துவ சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் கையில்’ ரேடிகல் ஹெல்த்தின் இணை நிறுவனர் ரிட்டோ மித்ரா போன்ற பல பிரபலங்கள் இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் முடிவில், அங்கிருந்த அனைத்து வீரர்களுக்கும் நீரழிவு காரணமான ரெட்டினோபதிக்கான எளிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

  இந்த மறக்கமுடியாத நிகழ்வை ஜூலை 30ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கும், ஜூலை 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது, இதை CNBC TV18 இல் மட்டுமே காணலாம்.

  இந்த ஆண்டு, 'Netra Suraksha' - நீரழிவுநோயிற்கு எதிரான இந்தியா' முன்முயற்சியானது, கள விழிப்புணர்வு முகாம்களில் கவனம் செலுத்தி அவை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. நீரழிவுநோய் காரணமான ரெட்டினோபதி பற்றியும் மேலும் அது உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள, இந்த தளத்தைப் பார்வையிடவும் . Netra Suraksha முன்முயற்சியைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு News18.comஐப் பின்தொடரவும், மேலும் நீரழிவுநோய் காரணமான ரெட்டினோபதிக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்த தயாராகுங்கள். 

  குறிப்பு:

  IDF Atlas, சர்வதேச நீரழிவுநோய் கூட்டமைப்பு, 9வது பதிப்பு, 2019
  Published by:Selvi M
  First published:

  Tags: Diabetics, Indian army

  அடுத்த செய்தி