Home /News /lifestyle /

NetraSuraksha | நீரிழிவு நோய் தொடர்பான கண் பார்வை பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாக பாதிக்கலாம்

NetraSuraksha | நீரிழிவு நோய் தொடர்பான கண் பார்வை பிரச்சனைகள் உங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தைக் கடுமையாக பாதிக்கலாம்

NetraSuraksha

NetraSuraksha

Diabetic Retinopathy | இங்கே NetraSuraksha சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

கண்பார்வை பறிபோவதைப் பற்றி யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். சொல்லப்போனால், அது மிகவும் விரும்பத்தகாத எண்ணம். இது இறுதியில் நீங்கள் தவறவிட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வைக்கும். உண்மையைச் சொல்லப்போனால், நீங்கள் உங்கள் வேலையைக் கைவிட வேண்டிவரும். நீங்கள் வேறு வகையான திறன்களை வளர்த்துக்கொள்ள செலவிடும் நேரத்தை இழக்க நேரிடும் (அதுவும், நீங்கள் பல முயற்சிகளைச் செய்த பிறகு, அதிகமாக பணத்தைச் சம்பாதிக்கத் தொடங்கிய நேரத்தில்!). உங்கள் அன்றாட வாழ்க்கை முறை மாறும். நீங்கள் இத்தகையச் சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது உங்களுக்குத் தேவைப்படும் உதவிகள்: உங்களுக்கு உதவியாளர் தேவையா? உங்கள் துணைவரும் வேலையைக் கைவிட வேண்டுமா? இது உங்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும்? இது அவர்களின் கல்வியை எவ்வாறு பாதிக்கும்? நீங்கள் இன்னும் வெளிநாட்டில் கல்வி பயில பணம் செலுத்த முடியுமா? மருத்துவ ரீதியாக எவ்வளவு செலவாகும்?

வாழ்க்கை மிகவும் எதிர்பார்க்காத வகையில் மாறும். ஆனால் இதைப் பற்றி இப்போது ஏன் பேசுகிறோம்? ஏனெனில், நீங்கள் பின்வரும் தரவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்:

  • 2019 ஆம் ஆண்டிண் கணக்கெடுப்பின்படி, 20-79 வயதுடைய சுமார் 463 மில்லியன் வயதுவந்தோர் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், இது உலக மக்கள்தொகையில் இந்த வயதினரில் 9.3% ஆகும். இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டில் 578 மில்லியனாகவும் (10.2%) 2045 ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் (10.9%) உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  • இருவரில் ஒருவர் (50.1%), அல்லது 463 மில்லியன் வயதுவந்தோர்களில் 231.9 மில்லியன் நபர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர், (பெரும்பாலும் வகை 2 நீரிழிவு நோய் கொண்ட 20-79 வயதுடையவர்கள்) இவர்கள் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை அறிந்திருக்கவில்லை.

  • இந்தியாவில், 2019 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 77 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் 43.9 மில்லியன் நபர்கள் நோய் கண்டறியப்படாதவர்கள்.


கடைசி தரவை நீங்கள் கவனிக்க வேண்டும் - இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளில் பாதியளவிற்கும் மேற்பட்டவர்கள் நோய் கண்டறியப்படாமல் விடப்படுகின்றனர். காலம் செல்லச் செல்ல இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. பயணம், நீண்ட வேலை நாள், மன அழுத்தம், வெளி உணவு பழக்கம், உடற்பயிற்சி செய்ய நேரமில்லாமை மற்றும் அமர்ந்து கொண்டே பணியாற்றுதல் ஆகியவற்றிற்கு மத்தியில், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில். ஆனால் கண்பார்வை இழப்பைப் பற்றி பேசிக் கொண்டிருந்த நாம் ஏன் நீரிழிவு நோய் பற்றிப் பேசுகிறோம்? இதோ மேலும் சில உண்மை நிலவரங்கள்:

  • நீரிழிவு கண் நோய் என்பது நீரிழிவு நோயின் மிகவும் தீவிரமான ஒரு சிக்கலாகும், இதில் முக்கியமாக நீரிழிவு ரெட்டினோபதி, நீரிழிவு மாகுலர் எடிமா, கண்புரை மற்றும் கண் அழுத்த நோய் ஆகியவை மட்டும் அல்லாமல், இரட்டை பார்வை மற்றும் கவனம் செலுத்த இயலாமை ஆகிய நோய்களும் அடங்கும்

  • பெரும்பாலான நாடுகளில், நீரிழிவு ரெட்டினோபதி நோய் என்பது, பேரழிவு தரும் தனிப்பட்ட மற்றும் சமூகப் பொருளாதார விளைவுகளுடன் உழைக்கும் வயதினரிடையே குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் ஒப்புக் கொள்ளப்படுகிறது.

  • 1980 மற்றும் 2008 க்கு இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 35 ஆய்வுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில், நீரிழிவு நோயாளிகளில் விழித்திரை படங்களைப் பயன்படுத்தி நீரிழிவு ரெட்டினோபதியின் ஒட்டுமொத்த பரவலானது 35% என மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் பார்வைக்கு அச்சுறுத்தலான நீரிழிவு ரெட்டினோபதி 12% உள்ளது.


இந்த தரவுகளை மீண்டும் பார்ப்போம். இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதியளவிற்கும் மேற்பட்டவர்கள் நோய் கண்டறியப்படாதவர்கள். மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு ரெட்டினோபதியின் சில வடிவங்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளனர், மேலும் எட்டில் ஒருவருக்கு அவர்களின் கண்பார்வையை அச்சுறுத்தும் அளவிற்கு மேம்பட்ட மற்றும் கடுமையான நீரிழிவு ரெட்டினோபதி இருக்கும்.

இந்த தரவு உங்களை வியப்பில் ஆழ்த்தியதா? எங்களையும் தான். எனவேதான், நீரிழிவு ரெட்டினோபதி நோயின் பிரச்சனையைச் சமாளிக்க உதவுவதற்காக, மருத்துவம், கொள்கை உருவாக்கம் மற்றும் சிந்தனைக் குழுக்கள் ஆகியவற்றில் உள்ள சிறப்பு நிபுணர்களை ஒன்றிணைக்க, Network18 நிறுவனம் Novartis உடன் இணைந்து  'Netra Suraksha' - நீரிழிவிற்கு எதிரான இந்தியா எனும் முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. 

நீரிழிவு ரெட்டினோபதி பற்றி நாம் தெரிந்துகொண்ட முதல் விஷயங்களில் ஒன்று, இது ஆரம்ப நிலைகளில் அறிகுறி இல்லாமல் இருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த நிலை சிகிச்சை மிகவும் பயனளிக்கக்கூடிய நிலை. அறிகுறிகள் தோன்றத் தொடங்கும் நேரத்தில், ஏற்கனவே ஓரளவு பார்வை இழப்பு ஏற்பட்டிருக்கும். மோசமான செய்தி என்னவென்றால், இந்த நோய் மூலம் தாக்கப்பட்டால் மீண்டும் அதிலிருந்து மீள முடியாது. ஆனால் நோயைக் கண்டறிந்துவிட்டால், நோயாளி குறிப்பாக அவர் மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதில் விடாமுயற்சியுடன் இருந்தால், இந்த நோயை மிகவும் திறம்பட நிர்வகிக்க முடியும். 

நாம் கற்றுக்கொண்ட மற்றொரு விஷயம், நீரிழிவு ரெட்டினோபதியைக் கண்டறிவது மிகவும் எளிதானது. அதற்குத் தேவையானது ஒரு எளிமையான, வலியற்ற, வழக்கமான கண் பரிசோதனை (கண் மருத்துவரிடம், கண்ணாடி கடையில் அல்ல!). வட்டமேசை விவாதங்கள், விளக்கக் காணொளிகள் மற்றும் கட்டுரைகள் மூலம் நேத்ரா சுரக்ஷா இதை ஒரு பணியாக செய்து வருகிறது. News18.com இல் உள்ள Netra Suraksha முன்முயற்சி பக்கத்தில் இந்த அனைத்து விவரங்களையும் நீங்கள் அணுகலாம். உங்கள் நோய் ஆபத்தை மதிப்பிடுவதற்கு ஆன்லைன் நீழிவு ரெட்டினோபதி சுய பரிசோதனையையும் நாங்கள் வடிவமைத்துள்ளோம்.

இங்கேயிருந்துதான் நீங்கள் தொடங்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆன்லைனில் நீரிழிவு ரெட்டினோபதி சுய பரிசோதனையை மேற்கொள்ளுங்கள், பின்னர் Netra Suraksha முன்முயற்சி பக்கத்தில் உள்ளவற்றைப் படிக்கவும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் உங்கள் மருத்துவரிடம் கண் பரிசோதனையை மேற்கொள்ள திட்டமிடுங்கள்.கூடவே, இரத்தப் பரிசோதனையையும் செய்துகொள்ள திட்டமிடுங்கள் மற்றும் உங்கள் சர்க்கரை அளவை சரிபாருங்கள. குடும்ப நாட்காட்டியில் இந்தச் பரிசோதனைகளைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள் - உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேதிகளுடன் நீங்கள் அவற்றை தொகுக்கவும் செய்யலாம், எனவே ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள மறக்க மாட்டீர்கள்.

இதைப் பரப்புங்கள்: உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நோய்க்கு தீர்வுகாண உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். மேலே உள்ள தரவுகளை மீண்டும் படிக்கவும். இந்த நோயை நாம் முறியடிக்க வேண்டும் என்றால், நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் கண் பரிசோதனையை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீரிழிவு மற்றும் நீரிழிவு ரெட்டினோபதி நோய்களைச் சிறப்பாக எதிர்த்து போராடுவோம். மேலும் வெற்றி பெறுவோம்.

குறிப்புகள்: 

  • IDF Atlas, International Diabetes Federation, 9th edition, 2019


  • Promoted Content
Published by:Selvi M
First published:

Tags: Diabetics, Eye care, Health, Netra Suraksha

அடுத்த செய்தி