Home /News /lifestyle /

வெல்லம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்...

வெல்லம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தா..? தெரிந்துகொள்ளுங்கள்...

வெல்லம்

வெல்லம்

பலரும் நினைப்பது போன்று வெல்லம் என்பது அதிக மருத்துவ குணம் கொண்டதுதான். இதில் இரும்புச்சத்து இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களின் உணவு பழக்கம் என்பது முற்றிலுமாக மாறியுள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்களின் உணவில் சர்க்கரையை முழுவதுமாக தவிர்த்து விடுவார்கள். சர்க்கரைக்கு மாற்றாக சிலர் வெல்லத்தை பயன்படுத்துவது உண்டு. ஆனால், உண்மையில் இந்த வெல்லம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது தானா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை. இதை பற்றிய விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெல்லம் என்கிற உணவு பொருள் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் முதன்மையாக உட்கொள்ளப்படும் கரும்புச் சாற்றின் செறிவினால் தயாரிக்கப்படும் ஒரு இயற்கையான, பாரம்பரிய இனிப்பாகும். வெல்லம் மற்றும் தேன் கூட ஆகியவை வெள்ளை மற்றும் பழுப்பு சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. கரும்புச் சாற்றில் காணப்படும் அனைத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் வெல்லத்தில் அடங்கியுள்ளதால் இது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நீரிழிவு வகை 1 மற்றும் வகை 2 நோயாளிகள் இந்த வெல்லத்தை சாப்பிடலாம் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இருப்பினும் மக்கள் இதை இனிப்புக்கு மாற்றாக பரிந்துரைக்கின்றனர். மேலும், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெல்லத்தை சேர்க்க வேண்டுமா இல்லையா என்பது குறித்த விவரங்களை மருத்துவர்கள் விவரித்துள்ளனர். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் வெல்லத்தை சேர்க்கலாம் என்று பலர் நம்புகின்றனர்.



பலரும் நினைப்பது போன்று வெல்லம் என்பது அதிக மருத்துவ குணம் கொண்டதுதான். இதில் இரும்புச்சத்து இருப்பதால் இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும், வெல்லத்தில் சுமார் 65 முதல் 85 சதவீதம் சுக்ரோஸ் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

66 நாட்களுக்கு இந்த 12 விஷயங்களை பின்பற்றினால் நோயின்றி நீண்ட காலம் ஜம்முனு வாழலாம்...

ஒரு சர்க்கரை நோயாளியின் சிறந்த உணவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் இருக்கப்பட்ட வேண்டும். அதே நேரத்தில் வெல்லம் மிக உயர்ந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இதை உட்கொள்ளும் போது, ​​இது உடனடியாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது மற்றும் சிறுநீரக நோய், இதய நோய், உறுப்புகள் செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நல விளைவுகளுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு அதிகம்.



100 கிராம் வெல்லத்தில் 383 கலோரிகள், 65-85 கிராம் சுக்ரோஸ், 10-15 கிராம் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை உள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்தால் மற்றும் இரத்தச் சர்க்கரைக் கோளாறுகள் ஏதும் இல்லை என்றால், நீங்கள் வெல்லத்தை வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக உட்கொள்ளலாம். ஆனால், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், வெல்லத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தாலும் உயிர் வாழ்வதற்கான சிறந்த அணுகுமுறை இரத்த சர்க்கரையை சீரான அளவில் வைத்து கொள்வதாகும். மேலும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது என்பது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதற்கான வழியாகும். எனவே, எந்தவொரு உணவு பொருளையும் சாப்பிடுவதற்கு முன், நீரிழிவு நோயாளிகள் தங்கள் கிளைசெமிக் அளவை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் சர்க்கரை நோயாளிகள் எதைச் சாப்பிடலாம் மற்றும் சாப்பிடக்கூடாது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetics, Jaggery

அடுத்த செய்தி