ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதை தொற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதை தொற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதை தொற்று

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதை தொற்று

சர்க்கரை அளவைக்கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக மருத்துவர்களின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றுகின்றனர். இருந்தப்போதும் சர்க்கரை அளவை முறையாகக் கண்காணிக்காமல் பல உடல் நலப் பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கும் போது, சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகளவு உற்பத்தியாகி சிறுநீரக பாதைத் தொற்று பிரச்சனை (UTI) ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இன்றைக்கு என்ன சாப்பிட வேண்டும்? என்பது முதல் எந்த நேரத்தில் எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும்? என்பது வரை மருத்துவர்களிடம் கேட்டறிந்து தான் சாப்பிடும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நம்முடைய உடல் ஆரோக்கியமும் அந்தளவிற்கு சீர்க்கெட்டுப் போயுள்ளது. குறிப்பாக இன்றைக்கு இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பெரும்பாலும் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சர்க்கரை நோய். சரியான விகிதத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது முதல் அதிகப்படியான இனிப்புகள், டீ, காபி போன்றவை அருந்துவதால் சர்க்கரை நோய் பலரை எளிதில் பாதித்துவிடுகிறது. ஜெனிடிக் ரீதியாகவும் பலருக்கு சர்க்கரை நோய் பிரச்சனை ஏற்படுகிறது.

எனவே சர்க்கரை அளவைக்கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக மருத்துவர்களின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றுகின்றனர். இருந்தப்போதும் சர்க்கரை அளவை முறையாகக் கண்காணிக்காமல் பல உடல் நலப் பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது. இந்த வரிசையில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காவிடில், சிறுநீரக பாதைத் தொற்று பிரச்சனைகளும் ஏற்படக்கூடும் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். எப்படி தொற்று பெண்களை அதிகளவில் தாக்குகிறது? சரிசெய்யும் முறை என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்..

Also Read : டெர்மினல் கேன்சர் என்றால் என்ன..? அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

சர்க்கரை நோயாளிகளைப் பாதிக்கும் சிறுநீரக தொற்று:

உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது, சிறுநீரில் உள்ள சர்க்கரையில் குளுக்கோஸ்மற்றும் பாக்டீரியா வேகமாக பரவுகிறது. இதனால் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஆய்வுகள். குறிப்பாக சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் ஒரு முக்கியமான இயற்கை ஆண்டிபயாடிக் என்கிற சொரியாசின் நமது உடலில் உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் பற்றாக்குறையை ஏற்படுத்தி பிரச்சனையை நமக்கு ஏற்படுத்துகிறது. மேலும் இதுகுறித்து ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் போது, உடலில் அதிக சர்க்கரை அளவு காரணமாக நீரழிவு நோயாளிகளில் நோயெதிர்ப்பு அமைப்பு மெதுவாக பாதிப்பை சந்திக்கிறது. மேலும் எபிடெலியல் மற்றும் எண்டோடெலியல் செல்களுக்கு பாக்டீரியாவை பிணைப்பை தடுக்கிறது.

பெண்களை பொறுத்தவரை, பிறப்புறுப்பு பாதையில் அதிக குளுக்கோஸ் அளவுகள் இருக்கக்கூடும். எனவே பிறப்புறுப்பு பகுதியில் தொற்று அல்லது அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எனவே எப்பொழுதும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாடோடு வைத்திருக்க வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் கிரீம்கள் வறட்சியை போக்க உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, UTI