முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த 6 பாகங்களில் அறிகுறி இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி..!

இந்த 6 பாகங்களில் அறிகுறி இருந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி..!

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தமது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது,

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தமது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, களைப்பு மற்றும் பார்வை குறைபாடு உடல் எடை குறைதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.

அதுபோலவே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அவை ரத்த நாளங்களை சுருங்க வைத்து உடலில் உறுப்புகளுக்கு ரத்தம் கடத்தப்படுவதை தடுக்கிறது.இது சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தானதாக முடியலாம். பொதுவாகவே ஒருவருக்கு நீரிழிவு நோய் இருந்தால் உடலின் பல பாகங்களில் அதற்கான அறிகுறிகள் தென்படும்.

கண்கள்:

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அவை கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிக்கிறது. இதனால் பார்வை சம்பந்தப்பட்ட குறைபாடுகள் உண்டாகின்றன. இதனை டயாபட்டிக் ரொட்டினோபதி என்று அழைக்கிறார்கள். இந்த நோய் ஒருவரை தாக்கும் பட்சத்தில் அவரது கண்களில் உள்ள ரெட்டினாவில் பாதிப்பு உண்டாக்கி பார்வைத் திறனில் குறைபாடு ஏற்படுகிறது. இதனை சரியாக சிகிச்சை அளிக்காமல் விட்டால் முழுவதுமாக பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.

பாதம்:

நீரிழிவு நோயானது இரண்டு விதங்களில் நமது பாதங்களை பாதிப்படைய செய்கிறது. முதலில் பாதங்களுக்கு செல்லும் நரம்பு மண்டலத்தை பாதிப்படைய செய்து அங்கு உணர்வுகளை இழக்க செய்கிறது. இரண்டாவதாக பாதங்களுக்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுத்தி ரத்தம் கடத்தப்படுவதை தடுக்கிறது. எனவே பாதத்தில் ஏதேனும் காயம் உண்டானால் காயங்கள் குணமடைய நீண்ட நாட்கள் எடுக்கும்.

சிறுநீரகங்கள்:

சிறுநீரகங்கள் உடலில் உள்ள உறுப்புகளில் மிக முக்கியமானவை ஆகும். உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகம் முக்கிய பங்காற்றுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது அவை உடலில் உள்ள ரத்த நாளங்களை பாதிப்படையை செய்கின்றன. இது டயாபெடிக் நெப்ரொபதிஎன்ற நோயை உண்டாக்குகிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம், பாதங்களில் வீக்கம், மூட்டுகளில் வீக்கம், கை மற்றும் கண்களில் வீக்கம் ஆகியவையும் இதன் அறிகுறிகள் ஆகும். இதை தவிர உடல் சோர்வு, மயக்கம், வாந்தி எடுப்பது போன்ற அறிகுறிகளும் சிறுநீரகங்கள் பாதிப்படைந்துள்ளதர்கான அறிகுறிகள் ஆகும்.

நரம்பு மண்டலம்:

டயாபட்டிக் நெப்ரோபதியை போலவே சர்க்கரை நோயானது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை முழுவதுமாக பாதிக்கிறது. இதன் காரணமாக உடல் உறுப்புகளில் ஏற்படும் உணர்ச்சிகள் மூளைக்கு கடத்தப்படுவதில் சிக்கல் உண்டாகிறது. வலி, வெப்பம், குளிர், தசைப்பிடிப்புகள் போன்றவற்றை இந்த பிரச்சனை இருந்தால் சரிவர உணர முடிவதில்லை.

Also Read : புற்றுநோய் முதல் கொலஸ்ட்ரால் வரை... ஏலக்காயின் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

இதயம் மற்றும் ரத்த நாளங்கள்:

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இரத்த நாளங்களை பாதிப்படைய செய்து இதயத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது. அதிகபட்சமாக மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்சனைகளும் இதனால் உண்டாகக்கூடும். கிடைத்துள்ள தரவுகளின்படி அறிக்கையின்படி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளினால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர்.

ஈறுகள்:

சர்க்கரை நோய் ஒருவருக்கு அதிகரித்தால் அது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களையும் உண்க்குகிறது. சர்க்கரை வியாதியால் ரத்த நாளங்கள் சுருங்குவதால் ஈறுகளுக்கு ரத்தம் கடத்தப்படுவது தடுக்கப்பட்து ஈறுகள் வலுவிழக்க செய்யப்படுகின்றனர். மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை அது உண்டாக்கி தருகிறது. ஈறுகளில் ரத்தம் வடிதல் அதிகப்படியான வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

சர்க்கரை வியாதி இருப்பதற்கான பொதுவான அறிகுறிகள்

- அடிக்கடி தாகம் எடுப்பதாக உணர்வது

- அடிக்கடி சிறுநீர் கழிப்பது

- திடீர் உடல் எடை குறைவு

- களைப்பாக உணர்வது

- மனநிலை மாற்றம்

- பார்வைத் திறனில் குறைபாடு

- காயங்கள் குணமடைய நாட்கள் அதிகமாவது

சர்க்கரை நோய் பாதிப்பு உண்டாகாமல் இருக்க நமது உடல் எடையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவில் கவனம் செலுத்துவதும், உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதும், சரியான உடல் எடையை பின்பற்றுவதும் சர்க்கரை நோய் ஏற்படாமல் இருக்க உதவும். அதுபோலவே புகைப்பிடிப்பது மது அருந்துவது போன்ற பழக்கங்களையும் கைவிட வேண்டும்.

உணவு பழக்க வழக்கங்கள்:

- உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கும் பட்சத்தில் அதிகபடியான கொழுப்புகள் நிறைந்த உணவுகளையும், அரிசி, ரொட்டிகள், பாஸ்டா, யோகர்ட் மற்றும் உலர் பழங்கள் ஆகியவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.

- கார்போஹைட்ரேட்டுகள், புரதம், மற்றும் நார்ச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.

இதைத் தவிர உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

First published:

Tags: Diabetes, Diabetes symptoms