முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நெயில் பாலிஷ் பயன்படுத்தினால் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருமா..? அதிர்ச்சி தரும் ஆய்வு..!

நெயில் பாலிஷ் பயன்படுத்தினால் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருமா..? அதிர்ச்சி தரும் ஆய்வு..!

நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களில் அடங்கி இருக்கும் கெமிக்கல்கள் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நெயில் பாலிஷ், ஷாம்பு மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற அழகு சாதன பொருட்களை நீங்கள் வழக்கமான அடிப்படையில் பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் ரெகுலராக பயன்படுத்தும் இது போன்ற பியூட்டி ப்ராடக்ட்ஸ்களில் இருக்கும் கெமிக்கல் கன்டென்ட்ஸை சரிபார்க்க வேண்டும்.

ஏனென்றால் நெயில் பாலிஷ், ஷாம்பு உள்ளிட்ட பொருட்களில் அடங்கி இருக்கும் கெமிக்கல்கள் பெண்களுக்கு டைப் 2 நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதே போல ஹேர் ஸ்ப்ரே, ஆஃப்டர் ஷேவ் உள்ளிட்ட தயாரிப்புகளில் காணப்படும் நச்சு ரசாயனங்கள் (toxic chemical) சருமத்தில் ஊடுருவி கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Endocrine Society-யின் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் எண்டோகிரைனாலஜி & மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில், மேற்கண்ட தயாரிப்புகளில் காணப்படும் என்டோகிரைன்-டிஸ்ரப்டிங் கெமிக்கல்ஸினால்(EDCs) பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Read More : குழந்தைகளை வாட்டும் சளி, காய்ச்சல், இருமல்.. குறையும் எதிர்ப்புசக்தி.. மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸ்..

Phthalates என்பது பர்சனல் கேர் ப்ராடக்ட்ஸ், குழந்தைகளுக்கான டாய்ஸ் மற்றும் ஃபுட் & பிவரேஜ் பேக்கேஜிங் போன்ற பிளாஸ்டிக்கில் பரவலாக பயன்படுத்தப்படும் கெமிக்கல்ஸ் ஆகும். Phthalates கலக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் கருவுறும் விகிதத்தில் சிக்கல், நீரிழிவு மற்றும் பிற நாளமில்லா சுரப்பிகளிள் கோளாறுகள் ஏற்படும் என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. University of Michigan School of Public Health-ஐ சேர்ந்த ஆய்வாளர் சங் க்யூன் பார்க் பேசுகையில், phthalates வெளிப்பாடு பெண்களுக்கு, ஆறு வருட காலத்தில் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும் என ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்றார்.

மக்களில் பலர் தினசரி phthalates வெளிப்பாடுகளுக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களில் பலருக்கு வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. EDC-க்கள் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதால் இப்போது அவற்றை பற்றி பேசுவது முக்கியமானது மற்றும் அவசியமானது என்றார்.

நீரிழிவு நோய்க்கு phthalates-கள் காரணமாக இருக்கின்றனவா என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் சுமார் 1,308 பெண்களை SWAN (Study of Women's Health Across the Nation) ஆய்வில் இருந்து தேர்வு செய்து சுமார் ஆறு ஆண்டுகளாக ஆய்வு செய்தனர். 6 ஆண்டுகளில் சுமார் 5% பெண்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர். இந்த பெண்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரிகளில், 2000s-களின் முற்பகுதியில் அமெரிக்க நடுத்தர வயதுப் பெண்களை போலவே இந்தப் பெண்களுக்கும் சிறுநீரில் phthalates-களின் செறிவு அதிகம் இருந்தது.

சில phthalates-களின் அதிக அளவு வெளிப்பாடு காரணமாக வெள்ளைப் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30-63 சதவீதம் அதிகமாக இருந்தது. அதே சமயம் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களால் ஆசிய பெண்களுக்கும் நீரிழிவு நோய் உண்டாகுமா என்பது பற்றிய தகவல்களை இணைக்கப்படவில்லை. வளர்சிதை மாற்ற நோய்களில் phthalates-களின் விளைவை நன்கு புரிந்து கொள்ள எங்கள் ஆராய்ச்சி சரியான திசையில் செல்லும் ஒரு படியாக இருக்கிறது. ஆனால் இன்னும் தீவிர ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்றார் சங் க்யூன்.

First published:

Tags: Diabetes, Diabetes symptoms, Nail polish, Shampoo, Women Health