Home /News /lifestyle /

Diabetes : சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா... இதோ சில டிப்ஸ்கள்! 

Diabetes : சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியுமா... இதோ சில டிப்ஸ்கள்! 

நீரழிவு நோய்

நீரழிவு நோய்

Diabetes: "வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதைக் கைவிடுவது உடலை இயற்கையாகவே நீரழிவு நோய்க்கு எதிராக போராட வைக்கும்” என்கிறார்.

இனிப்பு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. ஆனால் ‘காபியில் சர்க்கரை வேண்டாம் எனக்கு சுகர் இருக்கு’ என்ற வார்த்தையை இப்போதெல்லாம் 30 வயதினர் கூட சொல்லக் கேட்பது ஷாக்காக உள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாகவும், சுமார் 1.6 மில்லியன் மக்கள் இந்த நோயால் உயிரிழப்பதாகவும் WHO எச்சரித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி சுமார் 7 சதவீத மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் போது கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலர் நம் கண்முன்னே உயிரிழந்தது மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடியது போன்ற கொடுமையான நிகழ்வுகளை கண்டிருப்போம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, கண் விழித்திரை பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம், மூட்டுக்கு கீழ் காலை அகற்றுவது என பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. நீரழிவு நோயை சரியாக நிர்வகித்து, அதில் இருந்து விடுபட நிபுணர் கூறும் சில முறையான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : மெனோபாஸ் நெருங்கும் நேரத்தில் உடல் எடையை குறைக்கலாமா? நிபுணர்கள் தரும் விளக்கம்

உணவுமுறை, உடற்பயிற்சி, மருந்துகள், சிகிச்சை, வழக்கமான பரிசோதனைகள் மூலமாக சர்க்கரை நோயை தாமதப்படுத்தவோ, தவிர்க்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீரழிவு நோய் அதிக முக்கியமாக பின்பற்ற வேண்டியது, உணவை தவிர்க்காமல் இருப்பது ஆகும். அப்படித் தவிர்ப்பது இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரையின் சமநிலையை சீர்குலைக்கும். அது உடலுக்குள் இருக்கும் உள் உறுப்புகளை பாதிக்க வழி வகை செய்யக்கூடும்.

Type 1 மற்றும் Type 2 என நீரழிவு நோய் இருவகைகளாக பிரிக்கப்படுகிறது. முதலாவது மரபணுக் கோளாறால் உருவாவது என்றும், இரண்டாம் வகை உணவு பழக்க மற்றும் வாழ்க்கை முறை மாறுபடுவதால் உருவாவதாக தொழில்முறை உடற்பயிற்சி நிபுணர் மற்றும் செயல்பாட்டு மருத்துவ பயிற்சியாளருமான விஜய் தக்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்- அலர்ட் பதிவு!

"வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதைக் கைவிடுவது உடலை இயற்கையாகவே நீரழிவு நோய்க்கு எதிராக போராட வைக்கும்” என்கிறார்.

நீரழிவு நோயில் இருந்து விடுபடுவதற்கான டிப்ஸ்களையும் விஜய் தக்கர் பகிர்ந்துள்ளார். அவற்றில் சில இதோ.

1. நார்சத்து நிறைந்த உணவுகள், பச்சை காய்கறிகள், கொழுப்பு இல்லாத இறைச்சி, பழங்கள், கொட்டைகள், முழு தானிய உணவுகள், பருப்பு வகைகள் என குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை பின்பற்றலாம்.

இதையும் படியுங்கள் :  40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினசரி 10 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் - ஆய்வில் தகவல்

2. உடல் எடையை சரியாக பராமரிப்பது நீரழிவு நோயை தலைகீழாக மாற்றலாம். ஆரோக்கியமான உணவு முறை மூலமாக உங்களுடைய உடலில் அதிகரிக்க கூடிய எடையை குறைக்கலாம். மேலும் எடையை அதிகரிக்க கூடிய நொறுக்கி தீனிகள் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

3. பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும், குறிப்பாக வெள்ளை மாவு மற்றும் சர்க்கரை உள்ளடங்கியவை நல்லது அல்ல, ஏனென்றால் இவை இரண்டிலும் கொழுப்பு மற்றும் உடல் பருமனை அதிகரிக்கும் காரணிகள் நிறைந்துள்ளது என எச்சரிக்கிறார் விஜய் தக்கர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Diabetes

அடுத்த செய்தி