Home /News /lifestyle /

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

சர்க்கரை நோய் உள்ள பெண்கள் கருத்தரிக்க தாமதமாகுமா..? குழந்தையின்மையை உண்டாக்குமா..? மருத்துவர் விளக்கம்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர் 49 : அலோபதியை பொறுத்தவரை சுகருக்கு நிரந்தரமான தீர்வு கிடையாது . அதனால நம்ம இன்சுலினோ இல்ல அதுக்கு இணையான மாத்திரைகளோ எடுத்து தான் சுகர கண்ட்ரோலில் கொண்டு வர முடியும் . பல்வேறு வகைப்பட்ட ட்ரீட்மென்ட் இருந்தாலும் அதில் எல்லாருக்கும் குணமாகுதா? என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்யுது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஐஸ்வர்யா வங்கியில் பணி புரியும் பணிபுரியும் பெண். 27 வயது. திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. சமீபத்தில் அவருடைய அலுவலகத்தில் அனைவருக்கும் ரத்தப்பரிசோதனை, இலவசமாக செய்திருக்கிறார்கள். அதில் ஐஸ்வர்யாவுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

திருமணமாகி ஒரு வருடமான நிலையில், குழந்தைக்கு திட்டமிடலாம் என்று நினைக்கையில் சர்க்கரை நோய் இருப்பது தெரிந்ததும், ஐஸ்வர்யா மனமுடைந்து விட்டார் .

ஐஸ்வர்யாவின் எடை 80 கிலோவுக்கு அருகில் இருந்தது. தாய் தந்தை இருவருமே சர்க்கரை நோயாளிகள். தனக்கு இத்தனை சிறிய வயதில் சர்க்கரை வரும் என்று ஒருநாளும் எதிர்பார்க்காததால் , மிகப்பெரிய அதிர்ச்சியாகிவிட்டது.

இணையத்தில் சர்க்கரை நோய் பற்றிய பல்வேறு விதமான தகவல்களையும் படித்துவிட்டு மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார். அதற்குரிய ஆலோசனைக்காகத்தான் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

பதட்டமும் பயமும் வருத்தமும் ஐஸ்வர்யாவின் முகத்தில் நிறைய இருந்தது.

ஐஸ்வர்யா துவங்கினார், " ஏகப்பட்ட கேள்விகள் என் மண்டையை குடைந்துக்கொண்டு இருக்கிறது "

"ஓகே! ஐஸ்வர்யா! நீங்க வரிசையா கேள்விய கேட்டுக்கிட்டே வாங்க!. நான் பதில் சொல்லிக்கிட்டே வரேன்!." என்றேன்.1. என்னுடைய அப்பா அம்மாவுக்கு சுகர் இருக்குன்னாலும் அவங்களுக்கு 40வயதுக்கு மேல தான் சுகர் வந்தது.
எனக்கேன் இவ்வளவு சின்ன வயசுலயே சுகர் வந்துச்சு?

பதில்: நம்முடைய வாழ்க்கை முறையில ஏற்பட்ட பல மாற்றங்களால், குறிப்பாக இப்ப இருக்கிற உணவு முறையால, சின்ன வயசுலயே சுகர் வருது. உங்களுடைய அதிகமான உடல் எடை , அதுவும் சீக்கிரமே சுகர் வர காரணம்.

2. சுகர் , கர்ப்பமாவதை தடுக்குமா?

பதில்: நேரடியாக தடுக்கும்னு சொல்ல முடியாது . நான் நிறைய பேர் கர்ப்பமாகி வரத பார்த்திருக்கேன். ஆனா சுகர்னால வரக்கூடிய கிருமித்தொற்றால் கர்ப்பமடையறது தள்ளிப் போகலாம்.

கணவன்- மனைவி ஐடி துறையில் இரவு நேரப்பணி... இதனால் கருத்தரிப்பதில் தாமதமாகுமா..?

3. சர்க்கரை நோயாளிகள் ,கர்ப்பமானா குழந்தைக்கு பிரச்சனை வருமா?

பதில்: சுகர் இருக்கவங்க அது தெரியாமையோ இல்ல கண்ட்ரோல்ல இல்லாதப்பயோ, கர்ப்பமானால் குழந்தையை பாதிப்பதற்கான, வாய்ப்புகள் மிக மிக அதிகம். குறிப்பாக குழந்தையுடைய ஹார்ட்ல , எலும்புகள், நரம்பு ,முகத்துல, எல்லாத்துலயும் குறைபாடுகள் வரத்துக்கு வாய்ப்பு அதிகம். அதோட முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆகிற வாய்ப்புகளும் அதிகம்.4. பிரங்னன்ஸில சுகர் கண்ட்ரோல் பண்றதுக்கு என்ன செய்யறது?

பதில்: பிரக்னன்சில சுகர் கண்ட்ரோல் பண்றதுக்கு மாத்திரை மற்றும் இன்சுலின் இரண்டுமே எடுக்கனும். பெரும்பாலும் இன்சுலின் அளவு பாப்பா வளர வளர அதிகமாயிட்டே போகும். அதனால பயப்பட வேண்டியதில்லை.

5. டெலிவரி நார்மல் ஆகுமா? இல்ல சிசேரியன் தான் ஆகுமா?

பதில்: லேசான சுகர் இருக்கறவங்களுக்கு நார்மல் டெலிவரி வாய்ப்புகள் அதிகமா இருக்கும் . அதிகமான அளவு இன்சுலின் எடுக்கிறப்ப, பிரசவ வலியில் ரொம்ப நேரம் விட முடியாது. அதனால சிசேரியனுக்கு வாய்ப்புகள் அவங்களுக்கு அதிகமாக இருக்கும்.

ஜங்க் ஃபுட் சாப்பிட்டால் குழந்தையின்மை ஏற்படுமா..? மருத்துவர் விளக்கம்

6. ஒரு தடவை சுகர் வந்தா லைப் பூரா மாத்திரை எடுத்து தான் ஆகணுமா?

பதில் : வாழ்க்கை முறையை மாற்றி, ஓரளவு உணவு கட்டுப்பாடோடு இருந்தால் மாத்திரையை சாப்பிடாமல் இருக்கக்கூடிய நிலை கூட வரலாம். பொதுவா வயது அதிகமாக அதிகமாக சர்க்கரை நோயினுடைய அளவு அதிகமாகிட்டே தான் போகும். அதனால பெரும்பாலும் மாத்திரைகளை தொடர்ந்து போட்டுக் கொள்ளும் படியாக தான் இருக்கும்.7. மருந்து மாத்திரை எடுக்காமல் நேச்சுரலா ஏதாவது செஞ்சு சுகர குறைக்க முடியுமா? வேறு நிறைய நேச்சுரல் டிரீட்மென்ட் இருக்கே, அதுல எதுலையாவது போனா சுகர் கண்ட்ரோல்ல வருமா? அப்படி போறது சரியா?

பதில் : சுகர் வருவதற்கு முன்னாடி, வருமுன் காப்பா எடையை அளவா வச்சிக்கிறது. உணவு முறைகளை சரியா ஃபாலோ பண்றதனால , சுகர் வர்றதை தள்ளி போடலாம். ஆனால் சுகர் வந்த பிறகு அதற்கு சரியான டிரீட்மென்ட் எடுக்கிறதுதான் கரெக்ட்டா இருக்கும். ட்ரீட்மென்ட் எடுத்து சுகர் கண்ட்ரோல்ல இருக்கப்ப எடையை குறைத்து நம்முடைய உணவு முறையை மாற்றி மாத்திரைகள் அளவை குறைவா வச்சுக்கலாம் .

கணவரின் சிகரெட் பழக்கம் கருவையும் பாதிக்குமா..? Passive Smoking பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை...

அலோபதியை பொறுத்தவரை சுகருக்கு நிரந்தரமான தீர்வு கிடையாது . அதனால நம்ம இன்சுலினோ இல்ல அதுக்கு இணையான மாத்திரைகளோ எடுத்து தான் சுகர கண்ட்ரோலில் கொண்டு வர முடியும் . பல்வேறு வகைப்பட்ட ட்ரீட்மென்ட் இருந்தாலும் அதில் எல்லாருக்கும் குணமாகுதா? என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்யுது.

அதிகமான சுகர் இருந்தால் நம்முடைய ரத்தக் குழாய்களை பாதிக்கும். அதன் மூலமாக கண், கிட்னி ,நரம்புகள் எல்லாமே பாதிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. எனவே எந்த ட்ரீட்மெண்ட் எடுத்தாலும் சுகர் கண்ட்ரோலில் இருக்கா அப்படிங்கிறத தொடர்ந்து கண்காணிக்கறது நல்லது.8. எப்ப நான் கர்ப்பம் ஆகலாம்?

பதில் : HbA1C அப்படிங்கற ரத்தப்பரிசோதனை, கடந்த மூன்று மாதத்தில் சுகர் அளவு எவ்ளோ இருக்குங்கற டெஸ்ட். அந்த டெஸ்டினுடைய அளவு 6 அல்லது அதற்கு கீழே இருக்கும் போது தான் சுகர் பேஷண்ட்ஸ் கர்ப்பம் ஆகணும். அப்பதான் குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராமல் இருக்கும். கர்ப்பமும் ஆரோக்கியமா இருக்கும்.

"டாக்டர்! ஏறக்குறைய என்னுடைய எல்லா கேள்விகளுக்குமே பதில் சொல்லிட்டீங்க! மனசு தெளிவா இருக்கு! வேறு சந்தேகங்கள் இருந்தால் மீண்டும் வருவேன்.

மிக்க நன்றி !! "என்று புறப்பட்டார், ஐஸ்வரியா.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Infertility, பெண்குயின் கார்னர்

அடுத்த செய்தி