ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெங்காயத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது : ஆய்வில் உறுதி..!

வெங்காயத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது : ஆய்வில் உறுதி..!

வெங்காயம்

வெங்காயம்

சமீபத்தில், சமையலில் சுவையை அதிகரிக்கும் வெங்காயம் எந்தளவிற்கு நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது, ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோயுடன் இருந்த 3 எலிகளைச் சோதனைக்காக பயன்படுத்தியுள்ளனர். 3 எலிகளுக்கும் வேறுபட்ட அளவுகளுடன் வெங்காய சாறு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் ஒன்றாக உள்ளது சர்க்கரை நோய். மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் தான் சர்க்கரை நோய் பிரச்சனைக்கு மூல காரணமாக அமைகிறது என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள். குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் சுமார் 422 மில்லின் மக்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்படுவதோடு, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நீரிழிவு நோய் ஆரம்பத்தில் எவ்வித பிரச்சனையையும் நமக்கு ஏற்படுத்தவில்லை என்றாலும், நமது உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் பல விபரீதமான முடிவுகளை சந்திக்க நேரிடும். இதோடு இதை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு மருந்துகள் எதுவும் இல்லை என்பதால் ஆரோக்கியமான உணவு முறைகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஆய்வில் நடந்தது என்ன?...

இந்நிலையில் தான் சமீபத்தில், சமையலில் சுவையை அதிகரிக்கும் வெங்காயம் எந்தளவிற்கு நீரழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது, ஆராய்ச்சியாளர்கள் சர்க்கரை நோயுடன் இருந்த 3 எலிகளைச் சோதனைக்காக பயன்படுத்தியுள்ளனர். 3 எலிகளுக்கும் வேறுபட்ட அளவுகளுடன் வெங்காய சாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வேகமாகக் குறைவதுடன் கொலஸ்டரால் அளவும் குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தான், சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் வெங்காயம் இரத்த சர்க்கரை அளவை 50 சதவீதம் குறைக்க உதவும் பண்புகள் உள்ளதோடு, கொலஸ்ட்ராலை நிர்வகிப்பதற்கும் இது உதவுகிறது.

இதோடு வெங்காயத்தின் சாறு, நீரழிவைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் போலவே, செரிமானப் பிரச்சனைக்கும் தீர்வாக அமைகிறது. செரிமான அமைப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒரே நேரத்தில் மேம்படுத்தும் பண்புகள் வெங்காயச் சாறுக்கு உள்ளதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் காலை நேரத்தில் வெங்காய சாறு குடிப்பது நல்ல பலன் தரும். ஒருவேளை வெங்காய சாறாக குடிக்கப் பிடிக்கவில்லை என்றாலும் வெறும் வெங்காயம் சாப்பிடலாம். இல்லையென்றால் உங்களது சமையலில் அதிகளவு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதற்கு மறந்துவிடாதீர்கள். நிச்சயம் இது நீரழிவு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Also Read : சர்க்கரை நோயாளிகள் குளிர் காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான 4 விஷயங்கள் இதோ!

மேலும் வெங்காயத்தில் சல்பர் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதாக உள்ளது. எனவே வெங்காயச் சாறை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு ஒரு முறைப் பயன்படுத்தவும். இதோடு வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் உள்ளதால் சர்க்கரை நோய் உள்பட பல நோய்களைக் குணப்படுத்த உதவியாக உள்ளது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Diabetes, Onion, Onion health benefits