ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சர்க்கரை நோயால் முன்கூட்டியே மரணம் ஏற்படும் வாய்ப்பு 96 சதவீதம் அதிகம் : அதிர்ச்சி தரும் ஆய்வு

சர்க்கரை நோயால் முன்கூட்டியே மரணம் ஏற்படும் வாய்ப்பு 96 சதவீதம் அதிகம் : அதிர்ச்சி தரும் ஆய்வு

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடான நிலையில் இருக்கிறது என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை. அதுவே அபாய கட்டத்தை தாண்டி சர்க்கரை இருக்கிறது என்றால் கண் பார்வை பிரச்சனை, இதய செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்சனைகளை அது கொண்டு வந்து சேர்க்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மை சுற்றியுள்ள உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் என பலருக்கு சர்க்கரை நோய் இருக்கும் நிலையில், நமக்கும் அந்தப் பிரச்சினை இருப்பதால் என்ன ஆகி விடப் போகிறது என்ற அலட்சியமான சிந்தனை உங்களுக்கு இருக்கலாம்.

சுருக்கமாக ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் சர்க்கரை நோய் ஒரு ஸ்லோ பாய்சன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது, நமக்கு எவ்வளவு இருக்கிறது என்பது தெரியாமல் அவர்களையும், நம்மையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது தவறான கண்ணோட்டம் ஆகும்.

ஏனென்றால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும், ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடான நிலையில் இருக்கிறது என்றால் ஒரு பிரச்சினையும் இல்லை. அதுவே அபாய கட்டத்தை தாண்டி சர்க்கரை இருக்கிறது என்றால் கண் பார்வை பிரச்சனை, இதய செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்சனைகளை அது கொண்டு வந்து சேர்க்கும்.

சுமார் 11,000 சர்க்கரை நோயாளிகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 2,135 பேர் முன்கூட்டியே உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

யாரையெல்லாம் பாதிக்கும்

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெண், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட இளம் வயது ஆண்கள் உள்ளிட்டோர் அபாய பட்டியலில் இருக்கிறார்களாம். ஆண்களுக்கு இறப்புக்கான வாய்ப்பு 74 சதவீதம் உள்ள நிலையில், பெண்களுக்கு அதே வாய்ப்பு 96 சதவீதம் இருக்கிறது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது.

Also Read : சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதை தொற்று பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

இதர உடல்நல பிரச்சனைகள்

நீண்ட நாட்களாக சர்க்கரை நோய் கட்டுப்பாடு இன்றி வாழும் மக்களுக்கு உடல் ரீதியாக வேறுபல பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நெஞ்சுவலி, ஹார்ட் அட்டாக், ஸ்டிரோக், ரத்த நாளச் சுருக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். ரத்த நாளச் சுவர்கள் மற்றும் நரம்புகள் போன்றவற்றிலும் கூட பாதிப்பு ஏற்படும்.

ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

ஆய்வில் தெரிய வந்துள்ள முடிவுகள் நம்புவதற்கு கடினமானதாக இருந்தாலும் கூட, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, நமது வாழ்வியலை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

Also Read : தொடை கொழுப்பை குறைக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா..? இந்த 5 விஷயங்களை பின்பற்றுங்கள்..!

தடுப்பு எப்படி எப்படி?

சர்க்கரை நோய் பாதிப்புக்கு உடல் பருமன், உடல் இயக்கமின்மை போன்றவையும் காரணம் ஆகும். ஆகவே, தினசரி குறைந்தபட்சம் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்து நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வயது, பாலினம் அடிப்படையில் சரியான உடல் எடையை கடைப்பிடிக்க வேண்டும். மது, புகை போன்ற பழக்கங்களை கைவிடுவது நல்லது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Death, Diabetes