ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்குயின் கார்னர் 16 : திருமணத்திற்கு முன்பே சர்க்கரை நோயா ? இதனால் கர்ப்பத்தில் சிக்கல் உண்டாகுமா ? மருத்துவர் விளக்கம்

பெண்குயின் கார்னர் 16 : திருமணத்திற்கு முன்பே சர்க்கரை நோயா ? இதனால் கர்ப்பத்தில் சிக்கல் உண்டாகுமா ? மருத்துவர் விளக்கம்

பெண்குயின் கார்னர்

பெண்குயின் கார்னர்

சர்க்கரையை முழுமையாக குணப்படுத்த இயலாது. சரியான உணவு கட்டுப்பாட்டு முறையை கடைபிடித்தலும், உடல் பருமனை குறைத்தலும் மருந்துகளின் அளவைக் குறைக்கும். நாளடைவில் உணவு கட்டுப்பாட்டிலேயே சர்க்கரையை சரியான அளவில் வைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாங்கள் இனிப்பானவர்கள்....

நித்யா அவரது பெற்றோரோடு வந்து மருத்துவமனையில் காத்துக்கொண்டிருந்தார். பெற்றோர் இருவரும் ஐம்பது வயதுகளில் இருக்கிறார்கள். ஆனால் உடல் எடையோ தொண்ணூரில் இருக்கிறது. நித்யாவும் இருபத்தி மூன்று வயதாக இருந்தாலும் தாய் தந்தையைப் போலவே எடை 75 கிலோ இருந்தார்.

நித்யாவின் பெற்றோர் இருவருமே சர்க்கரைக்காக பல வருடங்களாக மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு பரிசோதித்ததில் நித்யாவும் சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையில் இருப்பது தெரிந்தது. அவரும் சர்க்கரையை குறைக்கும் மாத்திரைகளை துவங்கியிருந்தார்.

இப்போது திடீரென்று மருத்துவமனைக்கு வருவதற்கான காரணம் என்ன? என்று சிந்தித்துக்கொண்டே நித்யாவை நோக்கினேன்.

நித்யாவின் தாய்தான் துவங்கினார். எதிர்பாராத விதமாக நித்யாவிற்கு ஒரு நல்ல வரன் அமைந்துள்ளது. ஆறு மாதத்திற்குள் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள் . அதற்குள் அவளுடைய சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியுமா?,

இல்லை, திருமணத்திற்கு பிறகும் மாத்திரைகள் தேவைப்படுமா?? அது அவருடைய வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்கலாம்!?? நாளை குழந்தை பிறந்தால் குழந்தைக்கும் சர்க்கரை நோய் வருமா??? இதுபோல பல சந்தேகங்கள் மனதில் இருக்கிறது. அதனால்தான் உங்களை சந்தித்து பேசிவிட்டு போகலாம் என்று வந்தோம் என்று கூறினார்.

முதலில் சர்க்கரை என்பது நோய் கிடையாது. அது ஒரு குறைபாடு என்றுதான் கூறவேண்டும். பொதுவாக பரம்பரையாக வரக்கூடியது, எடை அதிகமாக இருக்கும் பொழுது சீக்கிரமே வந்துவிடுகிறது.

அதனால் சர்க்கரையை முழுமையாக குணப்படுத்த இயலாது. சரியான உணவு கட்டுப்பாட்டு முறையை கடைபிடித்தலும், உடல் பருமனை குறைத்தலும் மருந்துகளின் அளவைக் குறைக்கும். நாளடைவில் உணவு கட்டுப்பாட்டிலேயே சர்க்கரையை சரியான அளவில் வைத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கும். ஆனால் இது எல்லோருக்கும் நடப்பதில்லை. அதனால்தான் பல வருட காலங்களுக்கு மாத்திரைகளையும் ஊசிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

நித்யாவை பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில்தான் சர்க்கரை குறைபாடு இருப்பதால், அவருடைய எடையைக் குறைக்கும் பொழுது அத்துடன் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும் போது அவருக்கு ஒரு தீர்வாக இருக்கலாம். அவருடைய திருமண வாழ்க்கையை பொறுத்தவரை லேசான சர்க்கரை குறைபாடு ஒன்றும் பெரிய ஒரு பிரச்சனையை ஏற்படுத்தாது. நாளை அவர் கர்ப்பம் தரித்தால் கர்ப்பகாலத்தில் அவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைக்கு சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. பரம்பரையில் இருப்பதால் குழந்தைக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பெண்குயின் கார்னர் 14 : திருமண வயதிலும் முகப்பரு பிரச்சனையா..? காரணங்கள் என்ன..? தீர்வு தரும் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா

பொதுவாகவே சர்க்கரை குறைபாடு இருப்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை உண்ணக் கூடாது. 2 மணிக்கு ஒருமுறை சிறிய அளவிலான உணவு பொருளை எடுத்துக் கொள்வது நல்லது. அதிலும் சர்க்கரை சத்து மாவுச் சத்து குறைவான புரோட்டின் அதிகமான உணவுகளை எடுக்கும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். மிதமான உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி யோகா தியானம் போன்றவற்றை தினசரி கடைப்பிடிக்கும் பொழுது அதுவும் அவருடைய ஆரோக்கியத்திற்கு உதவும்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு முக்கியமான ஒரு சிக்கலாக எந்த ஒரு நோய் தொற்றும் உடனே ஏற்பட்டுவிடும். மேலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருந்தால் தான் நோய்த் தொற்றில் இருந்து விடுபடவும் முடியும். இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நித்யாவை பொருத்தவரை திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருப்பதால் 10கிலோ எடை குறைவு சாத்தியப்பட்டால் அவருடைய மாத்திரைகள் பெருமளவு குறைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.

பெண்குயின் கார்னர் 13 : தைராய்டு மாத்திரையை பாதியிலேயே நிறுத்துவது சரியா ? இதனால் கரு நிற்பதில் சிக்கல் வருமா ? மருத்துவரின் விளக்கம்

இரண்டு மாதங்கள் கழித்து நித்யாவை பார்த்தபோது மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். 3லிருந்து 4கிலோ எடை குறைந்திருந்தார். சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்திருந்தார் . திருமணத்திற்குமுன் எப்படியும் பத்து கிலோ குறைத்து விடுவார் என்று நினைத்துக்கொண்டேன். நன்றி கூறி விடை பெற்றனர் நித்யா குடும்பத்தினர்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Pregnancy Risks, பெண்குயின் கார்னர்