Home /News /lifestyle /

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண் பார்வையை இழக்க வாய்ப்பு... வெளியானது பகீர் ஆய்வறிக்கை!

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கண் பார்வையை இழக்க வாய்ப்பு... வெளியானது பகீர் ஆய்வறிக்கை!

நீரழிவு நோய்

நீரழிவு நோய்

முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த நீரழிவு நோய் தற்போது இளம் வயதினரைக் கடந்து குழந்தைகளை குறிவைத்து வருகிறது.

முதியவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த நீரழிவு நோய் தற்போது இளம் வயதினரைக் கடந்து குழந்தைகளை குறிவைத்து வருகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் குழந்தைகளிடையே நீரிழிவு நோய் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இது உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் கண் பாதிப்பு போன்ற பல நோய்கள் உருவாக அடிப்படை காரணமாக அமைகிறது. அதிலும் சர்க்கரை நோய் உள்ள குழந்தைகளுக்கு கண் நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற பகீர் எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது.

ஜமா கண் மருத்துவம் என்ற மாத இதழ் நடத்திய டிசம்பர் 2021 ஆய்வின்படி, டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 அல்லது அதற்கும் குறைவான வயதுடைய 525 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், டைப் 1 நீரிழிவு நோயைக் காட்டிலும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நீரிழிவு ரெட்டினோபதியின் நோய் ஏற்படும் ஆபத்து 88 சதவீதம் அதிகம் என்று கண்டறியப்பட்டது. இதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், டைப் 2 நீரிழிவு நோயின் போது மனித உடல் இன்சுலின் எதிர்ப்பு காரணிகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக ரத்த சர்க்கரை அளவு அசாதாரணமாக அதிகரிக்கிறது, இதனால் ரத்த நாளங்கள் சேதமடைகின்றன.



குழந்தைகளில் டைப் 2 நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான காரணங்களை மற்றொரு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. நோய் வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை என்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தோற்று காரணமாக தொற்று பரவுவதை தடுக்கிறேன் என்ற பெயரில் குழந்தைகளை பெற்றோர்கள் 4 சுவர்களுக்குள் அடைத்து வைத்தனர்.

பிள்ளைகளிடம் பெற்றோர் இந்த 3 விஷயத்தை தவறியும் செய்யக்கூடாது

இதனால் வீட்டிற்குள் முடங்கி குழந்தைகள் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி, உடல் இயக்கத்தோடு இணைந்த விளையாட்டுக்களை குறைத்துக்கொண்டனர். இதனால் உடல் இயக்கம் தடைபட்டு, ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் தலைதூக்குவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு காரணம், நொறுக்குத் தீனிகள் மற்றும் தின்பண்டங்களை உட்கொள்வதால் குழந்தைகளிடையே உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இந்த காரணிகளைத் தவிர, நீரிழிவு நோயில் மரபணுக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடும்பத்தில் யாருக்காவது டைப் 2 நீரிழிவு நோய் இருந்திருந்தால், குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.



ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு நீரிழிவு மாகுலர் எடிமா, கிளௌகோமா, நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் கண்புரை போன்ற கண் சார்ந்த நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. நீரிழிவு மாகுலர் எடிமா என்பது நீரிழிவு நோய் காரணமாக மாக்குலா எனப்படும் கண்ணின் பகுதி வீக்கமடைவதை குறிக்கிறது. இது பாதி குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் அல்லது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் முழு பார்வையையும் இழக்க நேரிடலாம் என கண் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்தான 5 உணவு வகைகள் : தினம் ஒன்று கொடுங்கள்..!

க்ளௌகோமா என்பது கண்ணையும் மூளையையும் இணைக்கும் பார்வை நரம்பை சேதப்படுத்தும் நோயாகும்.. நீரிழிவு ரெட்டினோபதி என்பது உயர் இரத்த சர்க்கரை அளவு காரணமாக இரத்த நாளங்கள் சேதமடைவது ஆகும். இந்த நோய்கள் அனைத்தும் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் நிரந்தர குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வழக்கமான உடல்நலப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கண் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வருடத்திற்கு ஒரு முறை கண்களை பரிசோதிக்க வேண்டும் என எச்சரிக்கும் மருத்துவர்கள், வளரும் போதே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை பெற்றோர்கள் கற்றுகொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Child Diabetes Symptoms, Eye Problems, Kids diabetes

அடுத்த செய்தி