• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கேன்சர் இருக்கிறதா? ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்...

கேன்சர் இருக்கிறதா? ஆரம்பத்திலேயே கண்டறிந்து ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்...

மாதிரி படம்

மாதிரி படம்

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முறையான சுய-மார்பக பரிசோதனை, மகளிர் மருத்துவ வல்லுநர்களை அணுகி உடலை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
உடலில் உருவாகும் செல்களுக்கு பிறப்பு, இறப்பு என வளர்ச்சியின் காலகட்டங்கள் இருக்கின்றன. அது தவறும்போது நோய் ஏற்படுகிறது. அதிலும் பல ஆண்டுகளாக மனித உயிர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது புற்றுநோய் (Cancer). புற்றுநோய் என்பது தொற்றுநோய் அல்ல. ஆரம்பக்கால நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம் என்கின்றனர் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள். மாறிவரும் ரசாயன உலகில் புதிது புதிதாக நோய்கள் வரத்தான் செய்கின்றன. அதேநேரத்தில் அதைப் பற்றிய விழிப்புணர்வும், அடிப்படைத் தெளிவும், தற்காப்பு அக்கறையும் இல்லாமல் அதிலிருந்து தப்பிக்க முடியாது. குறைந்தபட்சம் கேன்சர் எனப்படும் புற்றுநோய் என்றால் என்ன? அதை எப்படி டெஸ்ட் செய்து உறுதிப்படுத்துவது? ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில் இந்த கேன்சரை எப்படி ஓரங்கட்டலாம் என்று இந்த பதிவில் காண்போம்.

புற்றுநோய்க்கான காரணம்:

புற்றுநோய்க்கான காரணத்தை இதுவரை பல ஆய்வுகளால் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஒருசிலவற்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். முதலாவதாகப் பரம்பரை. அதாவது மரபு வழி. உங்கள் குடும்பத்தில் தாய், தந்தை வழி இந்த நோய் இருந்தால் நிச்சயம் அலட்சியப்படுத்தாமல் சோதனை செய்துகொள்வது மிக அவசியம். புகையிலை, ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு (Gamma and X Rays), மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் (Carcinogens) இந்நோய் பரவுகிறது. உதாரணமாக, பெரிய கடாய்களில் லிட்டர் கணக்கில் எண்ணெய் ஊற்றி, பாக்கெட் மசாலாக்களில் ஊறவைத்து சிவக்க, மணக்க பொரித்துத் தரப்படும் சிக்கனை ரசித்து சாப்பிடுகிறோமே, அது எந்த வகையான எண்ணெய் என்பதைவிட, புது எண்ணெயா என யோசிப்பதில்லை. அதிகப்படியான கொதிநிலையில் Free oxygen Radicals உருவாகின்றன. 

அவை நம் உடலில் உள்ள நன்மை தரும் எலக்ட்ரான்களை உட்கிரகித்து நோயை உருவாக்குகிறது. நாள்பட்ட பல்வேறு நோய்களுக்கு இதுவும் காரணம். இதன் வீரியத்தை குறைக்கும் சக்தி ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுக்கு உண்டு. அதற்குத்தான் சத்துள்ள இயற்கையான காய்கறிகளையும் பழவகைகளையும் உண்ணச் சொல்கிறார்கள் புற்றுநோய் நிபுணர்கள். 

வைரஸ் தொற்று தாக்குதலினாலும் புற்றுநோய் உருவாகிறது என மருத்துவ ஆய்வுகள் முன்வைக்கின்றன. அதில் முக்கியமானது, HPV (Human pappiloma virus) (பெண்களுக்கான கருப்பைவாய் புற்று உருவாகிறது), ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி (Hepatitis), கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது. எப்ஸ்ட்டீயின் பார் வைரஸ் (Epstein – Barr virus) குழந்தைகளின் பல்வேறு புற்றுநோய்களுக்கு இந்த வைரஸ் காரணம். எந்த வைரஸ் தொற்றாக இருந்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்கச் செய்கிறது. நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாமல் போகிறது. இதனால் புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகம் ஏற்படுகின்றன.

புற்றுநோய் வகைகள்:

புற்றுநோயில், மார்பகப் புற்று (Breast cancer), கருப்பை வாய் புற்று (Cervical cancer), வாய்ப்புற்று (Oral cancer), மலக்குடல் ஆசனவாய்ப் புற்று (Colorectal cancer) போன்றவை மிகவும் மோசமானவை. புகையிலை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், பான்பராக் போன்ற போதைப்பொருட்கள், வெற்றிலை பழக்கம் உள்ளவர்களுக்கு வாய்ப்புற்றுநோய்க்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வெறும் வெற்றிலையில் மருத்துவக் குணங்கள் இருக்கலாம். ஆனால், புகையிலையுடன் உண்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இந்தியாவில்தான் வாய்ப்புற்றுநோய்க்கான சதவிகிதம் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள். மனக்கவலை என்று சிகரெட்டை  ஊதி தள்ளுகிறார்கள். புற்றுநோயைப் பொறுத்தவரை வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம்.

மார்பகப் புற்றுநோயினால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 45 சதவிகிதம் பெண்களுக்கு இந்நோயின் தாக்கம் உள்ளது. இந்தியாவில், குறிப்பாக பெங்களூரில் அதிகமாக 37 சதவிகிதம் பெண்கள் அவதிப்படுகின்றனர். கேன்சர் மருத்துவமனைகளும் நோயாளிகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த காலம் போய், சாதாரணக் காய்ச்சல் போல தற்பொழுது எல்லா தரப்பிலும் புற்றுநோய் பரவிவிட்டது. அதன் பின் விளைவுகள்தான் கிரகிக்க முடியாத நிலையில் உள்ளன. குக்கிராமங்களில் இந்நோய் பற்றிய தெளிவு இல்லை. ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார நிலையங்களில் முகாம்கள், வசதி வாய்ப்புகள் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் கல்வி அறிவு குன்றிய ஏழைப் பெண்களிடம் நோய் குறித்த புரிதலுக்கு வகை செய்ய வேண்டும்.

Also read... பெண்களுக்கு 30 வயதில் ஏற்படக்கூடிய பொதுவான மாதவிடாய் மாற்றங்கள்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்:

மாதவிடாய் நின்ற பெண்களுக்கு முறையான சுய-மார்பக பரிசோதனை, மகளிர் மருத்துவ வல்லுநர்களை அணுகி உடலை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பேப் ஸ்மியர்ஸ் வாய்வழி பரிசோதனை, குட்காவை எடுத்துக்கொள்ளும் நபர்கள் நுரையீரலை குறிப்பிட்ட இடைவெளியில்  சி.டி ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும், புகைப்பிடிப்பவர்கள் வருடாவருடம் மலத்தை செக் செய்து பார்க்க வேண்டும். இதன்மூலமும் கேன்சரை கண்டறிய முடியும். குடும்ப மருத்துவர் அறிவுறுத்தினால் இரத்த பரிசோதனை மற்றும் கொலோனோஸ்கோபி செய்து பார்க்கவேண்டும். “பி.இ.டி ஸ்கேன் என்பது புற்றுநோய்க்கு பயனுள்ளதாக இருக்கும் ஒரு வகை சோதனை, இது புற்றுநோய் நிபுணரால் மேற்கொள்ளப்பட வேண்டும். கேன்சர் சம்மந்தமாக அறிகுறிகள் தென்பட்டால் தாமத்திக்காமல் உடனடியாக உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். 

ஒருவேளை புற்றுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆறுதலை, மனவலிமையை குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுக்கவேண்டும். மன அமைதி, நல்ல எண்ணங்கள், உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி, தியானம், மருத்துவ தொடர் ஆலோசனைகள் மற்றும் அன்பு வழியில் மனதை பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்துக்கான நம்பிக்கையை நண்பர்களும் உறவுகளும் உருவாக்கினால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும். மேலும் நல்ல ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியம் நீங்கள் ட்ரீட்மெண்ட் எடுக்கும் மருத்துவனை மருத்துவர்களின் ஆலோசனையின்படி நல்ல ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியம்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: